சற்று முன்

சீனுராமசாமி தன் உடன்பிறப்புக்கு கூறிய வாழ்த்து   |    நயன்தாராவின் மிரட்டலான படம்   |    லேடீஸ் circle இந்தியா சார்பாக அண்ணபூரணா டிரைவ் வழங்கிய உதவி   |    தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள்   |    விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர்   |    அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம்   |    படத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார்   |    ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா   |    நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி   |    ஊரடங்கு காரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர்   |    குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை   |    குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம்   |    நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை   |    குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி   |    தாஜ் நூர் இசையில் கொரோனா பாடல்   |    அபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி   |    Tik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல் வெளிவந்த படத்தின் பாடல்   |    முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள்   |    கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர்   |    அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள்   |   

சாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்டேஷன் முயற்சி
Updated on : Friday March-08 2019

மார்ச் மாதம் முழுவதும் 10 லட்சம் பேருக்கு இலவச சாணிடரி நாப்கின் பேட் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்றது. ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற துவக்க விழாவில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்கப்பட்டன.

 

சென்னை முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இலவச நாப்கின் வங்கி துவங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயன்பாட்டுக்கு பிறகு சாணிடரி பேட்களை சாம்பலாக்கும் இயந்திரமும் வைக்கப்பட உள்ளது. இந்தியாவில் சாணிடரி பிரச்சனை காரணமாக 5 லட்சத்து 17 ஆயிரம் பெண்கள் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. இந்தப் பிரச்சனையை சரிகட்டும் வகையில் பெண்களுக்கு சாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக ஜியோ இந்தியா பவுண்டேஷன் செயல்பட்டுவருவதாக அதன் தலைவர் பிரியா ஜெமிமா தெரிவித்துள்ளார்.

 

பெண்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்ற வாக்காத்தான் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கால்ஸ் நிறுவன இயக்குனர் ராஜசேகரன் சிவபிரகாசம், கால்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் உப்பிலியப்பன் கோபாலன், ஒய்.எம்.சி.ஏ . பொது செயலாளர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகள்

  • SPORTS NEWS
  • |
  • CINEMA