சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

croppedImg_1631767641.jpeg

’ஜெய் பீம்’ விமர்சனம்

Directed by : T.J.Gnanavel

Casting : Suriya as Chandru, Prakash Raj, Rajisha Vijayan, Lijomol Jose, Rao Ramesh, K. Manikandan

Music :Sean Roldan

Produced by : 2D Entertainment

PRO : Yuvaraj

Review :

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதி கேட்டு சட்ட ரீதியாக போராட்டம் நடத்தும் ஒரு வழக்கறிஞரின் வழக்காடலை திரை மொழியில் சொல்லியிருக்கும் ‘ஜெய் பீம்’, 1993 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவத்தையும், அதன் மூலம் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் வலிகள் நிறைந்த வாழ்க்கையையும் விவரிக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

 

இருளர் பழங்குயினத்தைச் சேர்ந்த ராஜகண்ணு என்பவர் மீது பொய்யான திருட்டு வழக்கை பதிவு செய்யும் காவல்துறை அவரையும், அவரது கர்ப்பிணி மனைவி உள்ளிட்ட உறவினர்களை கைது செய்கிறார்கள். விசாரணை என்ற பெயரில் அவர்களை சித்ரவாதை செய்யும் காவலர்கள், சில நாட்களுக்குப் பிறகு விசாரணை கைதியாக இருந்த ராஜகண்ணு உள்ளிட்ட மூன்று பேர் காவல் நிலையத்தில் இருந்து தப்பித்து விட்டதாக கூறுகிறார்கள். தப்பிச் சென்றதாக கூறப்படும் ராஜகண்ணு என்ன ஆனார், என்று தெரியாத பறிதவிக்கும் கர்ப்பிணி மனைவி, தனது கணவரை காப்பாற்றும்படி வழக்கறிஞரான சூர்யாவிடம் உதவி கேட்க, ராஜகண்ணுவை மீட்பதற்கான சட்ட ரீதியிலான போராட்டத்தி களம் இறங்கும் சூர்யா, தனது வாத திறமையால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நீதி பெற்று கொடுக்கிறார் என்பதும், காணாமல் போன ராஜகண்ணுக்கு நேர்த்த கொடுமையும் தான் படத்தின் கதை.

 

அனைவரும் அறிந்த உண்மை சம்பவம் தான் கதை என்றாலும், படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை, அடுத்தது என்ன நடக்கும்? என்ற கேள்வியோடும், எதிர்ப்பார்ப்போடும் நம்மை படம் பார்க்க வைக்கும் அளவுக்கு திரைக்கதையும், காட்சி அமைப்புகளும் விறுவிறுப்பாக நகர்கிறது.

 

வழக்கறிஞர் சந்துருவாக நடித்திருக்கும் சூர்யா, ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு போராளியாக வலம் வருகிறார். ஒரு நடிகர், நடிக்கும் பல வேடங்களில் இதுவும் ஒன்று, என்று பார்க்க முடியாதபடி, தனது ஒவ்வொரு வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தன்னை நிஜமான வழக்கறிஞர் சந்துருவாகவே பிரதிபலித்திருக்கும் நடிகர் சூர்யாவின் நடிப்பை பாராட்டுவதோடு நின்றுவிடாமல், இப்படி ஒரு படத்தில் நடித்ததற்காக அவருக்கு, ரியல் சூப்பர் ஸ்டார், என்ற பட்டத்தை கொடுத்தாலும் அது மிகையாகாது.

 

இருளர் பழங்குயினராக நடித்திருக்கும் மணிகண்டன் மற்றும் அவருடைய மனைவியாக நடித்திருக்கும் லிஜிமோல் ஜோஸ் இருவரும் சேற்றில் புரண்டு, புழுதியில் நனைந்து, அம்மக்களின் வாழ்க்கையை நம் கண்முன் நிறுத்துவதோடு, அவர்கள் அனுபவித்த வலிகளையும் நம்முள் கடத்திவிடுகிறார்கள். 

 

சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் நடிகர், காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் மட்டும் இன்றி சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பவர்கள் கூட, கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அவர்களுடைய நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் இருக்கிறது.

 

திரைக்கதைக்கு சம்மந்தம் இல்லாத ஒரு கதாப்பாத்திரமாக எம்.எஸ்.பாஸ்கரின் கதாப்பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், அந்த கதாப்பாத்திரத்தின் ஒவ்வொரு அசைவையும் நாம் கவனிக்கும்படி செய்திருக்கும் இயக்குநரின் கதாப்பாத்திர வடிவமைப்பு படத்தின் கூடுதல் சிறப்புகளில் ஒன்று.

 

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளர் ஷான் ரோலண்ட், படத்தொகுப்பாளர் ஃபிலோமின் ராஜ் ஆகியோர் இயக்குநரின் சிந்தனையையும், நிஜ சம்பவத்தில் இருந்த வலியையும், துளி கூட சிதைக்காமல் ரசிகர்களிடம் சேர்த்திருக்கிறார்கள்.

 

உண்மை சம்பவதை படமாக்கும் போது, அதில் இருக்கும் வலிகள் படம் பார்ப்பவர்களுக்கு நெருக்கமாக இருக்கும். ஆனால், ஒரு திரைப்படமாக ரசிகர்களை திருப்திப்படுத்தாது. அப்படி திரைப்படமாக திருப்திப்படுத்தினால், அப்படம் உணர்வுப்பூர்வமாக ரசிகர்களை சென்றடையாது. ஆனால், இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் த.செ.ஞானவேல் வடிவமைத்த விதம், இரண்டிலும் ரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்கிறது.

 

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை, படம் பார்ப்பவர்களின் கவனத்தை சிதறவிடாமல் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் த.செ.ஞானவேல், திரை மொழி என்பதை மிக நேர்த்தியாக கையாண்டுள்ளார். 

 

வசனங்கள் இல்லாத சில காட்சிகள் மூலம் தனது கருத்தை வலிமையாக பதிவு செய்யும் இயக்குநர், பல இடங்களில் தனது கூர்மையான வசனங்கள் மூலம் அதிகார வர்க்கத்தை சாட்டையடி அடிக்கிறார். வலிமிகுந்த மக்களின் வாழ்க்கையின் வலிகளை படம் பார்ப்பவர்கள் உணரக்கூடிய விதத்தில் காட்சிகளையும், வசனங்களையும் அமைத்திருக்கும் இயக்குநர் சில இடங்களில் உண்மையை நகைச்சுவையாக சொல்லி நம்மை சிரிக்கவும் வைக்கிறார்.

 

தலித் அரசியல் பேசும் திரைப்படம், என்று ஒதுக்கிவிடாமல், ஒடுக்கப்பட்டவர்களின் வலிகளை ஒவ்வொரு தனிமனிதனும் உணரக்கூடிய விதத்தில் இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் த.செ.ஞானவேல் மற்றும் இப்படி ஒரு படத்தில் நடித்து, படத்தை தயாரித்த சூர்யாவையும் தமிழ் சினிமா மட்டும் அல்ல ஒட்டு மொத்த சமூகமே கொண்டாடும் என்பது உறுதி.

 

"ஜெய் பீம்" படத்திற்கு மதிப்பீடு 4/5

 

 

Verdict : ஒடுக்கப்பட்டவர்களின் வலிகளை ஒவ்வொரு தனிமனிதனையும் உணரவைக்கும் படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA