சற்று முன்

'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை ஒட்டி வெளியான 'புஷ்பா 2' டீசர்   |    உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் புது இயக்குனர்   |    ஒன்பது வருடங்களுக்கு பிறகு 'இன்று நேற்று நாளை' 2ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியது!   |    நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ள 'கல்கி 2898 AD' அனிமேஷன் அறிமுக வீடியோ!   |    ஜீவிக்கு 4 குளோன் இருக்கு - நடிகர் அப்துல் லீ   |   

croppedImg_348804947.jpeg

’பில்டர் கோல்டு’ விமர்சனம்

Directed by : Vijayabaskar

Casting : Vijayabaskar, Dora Shree, Sugumar Shanmugam, Vettri, Siva Elango, Nataraj, Sai Sathish

Music :Humar Ezhilan

Produced by : RM Nanu

PRO : AIM

Review :

இந்த படம் திருநங்கைகள் பற்றிய கதை. இந்த சமுதாயத்தில் திருநங்கைகள் நடக்கும் அவமானம், அசிங்கத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே இந்த கதையின் கரு. அவர்களின் துயரங்கள் பற்றி பல திரைப்படங்களில் பேசப்பட்டிருந்தாலும், அவை ஒரு காட்சி அல்லது சில வசனங்களோடு முடிந்து விடும். ஆனால், இந்த ‘பில்டர் கோல்டு’ முழுக்க முழுக்க திருநங்கைகளின் வாழ்க்கையும் மையப்படுத்திய ஒரு முழுமையான திரைப்படமாக வெளியாகியுள்ளது. 

 

‘பில்டர் கோல்டு’  படம் முழுக்க முழுக்க புதுச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது. காட்சிகள் அமைப்பும் சுவாரஸ்யமான க்ரைம் த்ரில்லர் ஜானர் படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.

 

குறிப்பாக படத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரங்களும், அதில் நடித்திருக்கும் நடிகர்களும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

விஜி என்ற திருநங்கை வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் விஜயபாஸ்கரின் பெண்மைத்தனம் கலந்த பேச்சும், ஆண்மைத்தனம் கலந்த உடல் அசைவும், அவர் கதாப்பாத்திரத்தில் மிக கட்சிதமாக நடித்துள்ளார். இயக்கத்தையும், நடிப்பையும் எந்த குறையுமில்லாமல் நேர்த்தியாக அவர் வேலையை செய்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன நடக்குமோ என்ற விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளார். 

 

விஜியின் தோழியான திருநங்கை டோரா, சக தோழிகளுடன் பேசும்போது திருநங்கைகளுக்கே உரித்தான குணத்தை வெளிப்படுத்துவதும், தனது காதலனை சந்திக்கும் போது, ஒரு பெண்ணுக்கு உண்டான வெட்கத்தை வெளிப்படுத்துவதும் என நடிப்பில் அசத்துகிறார்.

 

பள்ளி மாணவன் கதாப்பாத்திரம் மிரட்டல் என்றால், அதில் நடித்திருக்கும் வெற்றியின் தோற்றமும், நடிப்பும் படம் பார்ப்பவர்களும் மிரண்டு போகும் அளவுக்கு மிரட்டலாக உள்ளது.

 

சாந்தி என்ற திருநங்கை வேடத்தில் நடித்திருக்கும் சுகுமார் சண்முகம், ஆசாரியாக நடித்திருக்கும் சிவா இளங்கோ, டோராவின் காதலனாக நடித்திருக்கும் சாய் சதீஷ், பள்ளி மாணவனின் தந்தையாக நடித்திருக்கும் நட்ராஜ் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும், கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, இயல்பாகவும் நடித்திருக்கிறார்கள்.

 

ஹம்மர் எழிலனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருப்பதோடு, வரிகளை புரிந்துக்கொள்ளவும் முடிகிறது. பின்னணி இசை மூலம் படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்திருப்பவர், பீஜியம் மூலமும் கவர்கிறார்.

 

பரணிகுமாரின் ஒளிப்பதிவு பாண்டிச்சேரி, கேரளா போன்ற இடங்களில் அழகாகவும், அதன் பின்னணியை அழுத்தமாகவும் பதிவு செய்துள்ளது.

 

 திருநங்கைகளில் சிலர் படித்து பட்டம் பெற்று, அரசு பணி, உயர் பதவி என்று முன்னேறினாலும், அவர்களை பத்து அடி தள்ளி வைத்து பார்க்கும் சமுதாயம், அவர்களை என்றுமே சக மனிதர்களாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் விஜயபாஸ்கர், அவர்கள் சந்தோஷமாக வாழ எது வேண்டுமானாலும் செய்வார்கள், என்ற எச்சரிக்கை சங்கையும் ஊதியிருக்கிறார்.

 

திருநங்கைகளின் வாழ்க்கையை மட்டுமே படமாக்காமல், அவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்களை காட்டும் போது, சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறை போன்றவற்றை பற்றியும் பேசியிருக்கும் இயக்குநர் விஜயபாஸ்கர், அனைத்தையும் கதையுடனே பயணிக்க வைத்திருப்பது படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.

 

திருநங்கைகளின் குறை மற்றும் நிறைகள் பற்றி பேசியிருந்தாலும், அவர்களுடைய வாழ்க்கை முறையை எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் காட்சிப்படுத்தியிருப்பதோடு, அதை சுவாரஸ்யமான கதையாகவும் நகர்த்தி சென்றிருக்கும் இயக்குநர் விஜயபாஸ்கரை பாராட்டி வரவேற்கலாம்.

 

படத்தில் Mute வசனங்கள் அங்காங்கே வந்து போகிறது. சில தமிழ் சினிமாவில் பாடல்கள் சம்பந்தமில்லாமல் கட் செய்தல் லண்டன், அமெரிக்கா போன்ற சில நாடுகளில் பாடல் காட்சிகளை படம் பிடித்திருப்பார்கள். ஆனால் ‘பில்டர் கோல்டு’  படத்தில் கதையோடு ஒன்றிய இரண்டு இனிமையான பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

 
 

"பில்டர் கோல்டு" படத்திற்கு மதிப்பீடு 3/5

Verdict : "பில்டர் கோல்டு" ஜொலிக்கிறது

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA