சற்று முன்

'உடன்பிறப்பே' விமர்சனம்
Directed by : இரா.சரவணன்
Casting : ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, கலையரசன்
Music :D இமான்
Produced by : 2டி எண்டர்டெய்ன்மெண்ட், சூர்யா & ஜோதிகா
PRO : யுவராஜ்
Review :
சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் "உடன்பிறப்பே".
"உடன்பிறப்பே" அண்ணண் தங்கை பாச உணர்வுகளை மையப்படுத்தி சமூக அக்கறை, நகைச்சுவை கலந்த குடும்ப பாங்கான படம். வன்முறையை கையிலெடுக்கும் அண்ணண் ஒருபுறம், நியாயம் நேர்மை என வாழும் கணவர் ஒருபுறம் இருவருக்கும் நடுவில் தவிக்கும் ஒரு தங்கையின் பாச போராட்டமே "உடன்பிறப்பே".
இது ஜோதிகாவுக்கு 50வது படம், இதில் ஜோதிகா சமுத்திரக்கனிக்கு மனைவியாகவும் சசிகுமாருக்கு தங்கையாகவும் நடித்துள்ளார். ஜோதிகா மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளார். அவர் நடிக்கும் பொது அவருடைய கண்ணும், தசைகளும் சேர்ந்து நடிக்கின்றன. தன்னுடைய அண்ணனை பற்றி பேசும்போது கண்களில் கண்ணீர் தாரையாக வடித்து நம்மையும் சேர்ந்து அழவைத்துவிடுகிறார். இதில் ஜோதிகா பேசும் ஒவ்வொரு வசனமும் ஈர்க்கும்படியாக உள்ளது .
தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் தன்னுடைய கதாபாத்திரத்தை தத்ரூபமாக செய்துள்ளார். அவருடைய மாஸ் என்ட்ரி பிரமாதம் ஜோதிகாவுக்கு இணையாக சசிகுமாரும் நடிப்புபோல் இல்லாமல் உண்மையாக அவருடைய அண்ணண் பாசத்தை காட்டியதுபோல் உள்ளது. சண்டை காட்சிகளில் செம்மையாக செய்துள்ளார். சாதியை பற்றிய விழிப்புணர்வு நடனங்களை பேசும்போது தெறிக்கவிடுகிறார்.
சமுத்திரக்கனி ஜோதிகாவுக்கு கணவராக நடித்துள்ளார். நீதி நேர்மை பற்றி எப்போதும் விழிப்புணர்வு கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு கண்ணியமான பள்ளி ஆசிரியராக தன்னுடைய நடிப்பை வழக்கம்போல் கனகச்சிதமாக செய்துள்ளார்.
முன்னை பத்திரிகையாளர் இன்றைய இயக்குனர் இரா.சரவணன் தஞ்சை விவசாயிகள் பிரச்சனையை மையப்படுத்தி எடுத்த "கத்துக்குட்டி" இவருடைய முதல்படம்., "உடன்பிறப்பே" இவருக்கு இரண்டாவது படம். முதல் படம் விவசாயிகள் பிரச்சனையை மையப்படுத்தியும். இரண்டாவது படமான "உடன்பிறப்பே" குடும்ப உறவுகளின் உணர்வுகளை மையப்படுத்தியும் மிகவும் பிரமாதமாக இயக்கியுள்ளார். இதில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் அனைவரையும் திறமையாக வேலை வாங்கியுள்ளார்.
சூரி இதற்கு முன்பு கடைசியாக நடித்த ஒரு சில படங்களில் அவருடைய நகைச்சுவை சரியாக எடுபடவில்லை. அதற்கும் சேர்த்து இந்த படத்தில் படம் தொடங்கியதிலிருந்து கடைசிவரைக்கும் கதையோடு சேர்ந்து நகைச்சுவையில் சக்கை போடு போடுகிறார். படத்தில் ஒரு இடத்தில மலர்ந்தே தீரும் என்று கூறுகிறார். அது எதை மனதில் வைத்து கூறுகிறார் என்று தெரியவில்லை. சூரி காமெடி சூப்பர்!
"உடன்பிறப்பே" படத்திற்கு D இமான் இசையமைத்துள்ளார். பின்னணி இசை பிரமாதம், பாடலுக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்.
எடிட்டிங் ரூபன் பின்னி பெடலெடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவு வேல்ராஜ். இவர் ஒளிப்பதிவு மட்டுமின்றி படத்தின் முழுவதும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இவருடைய ஒளிப்பதிவு மிகவும் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இது படத்திற்கு மிகப்பெரிய பலம்.
இதில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, கலையரசன்,
நிவேதிதா சதிஷ், சிஜா ரோஸ், வேல ராமமூர்த்தி, தீபா ஷங்கர், நமோ நாராயணா, ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர், அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களை நடித்துள்ளார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்துள்ளார்கள் என்றே சொல்லலாம்.
"உடன்பிறப்பே" தற்போது உங்கள் Amazon Prime Video-வில் இன்று முதல் வெளியாகிறது.
"உடன்பிறப்பே" படத்திற்கு மதிப்பீடு 3.5/5
Verdict : அனைவரும் குடும்பத்துடன் பார்த்து கொண்டாடவேண்டிய படம்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA