சற்று முன்

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மனதை ஒரு சேர வென்றுள்ள ZEE5 வின் 'விநோதய சித்தம்' திரைப்படம்   |    வரலட்சுமி சரத்குமார் வழக்கறிஞராக அவதாரமெடுக்கும் புதிய படம் ஆரம்பம்   |    கண்டெய்னருக்குள் படமாக்கப்பட்ட ஊமைச் செந்நாய் படத்தின் சண்டைக்காட்சிகள்   |    பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் வெளியிட்ட படக்குழு   |    ஆவலுடன் எதிர்பார்க்கும் சூர்யாவின் ஜெய் பீம் ட்ரெய்லர் அக்டோபர் 22 அன்று வெளியாகிறது   |    மாணவர்களுக்கான இலவச சினிமா பயிற்சி - தமிழகம் முழுவதும் 5 ஊர்களில் 2வது சுற்று தேர்வு   |    விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படத்தின் செகண்ட் லுக் வெளியீடு   |    தனுஷ் படத்தை சிறந்த இந்திய திரைப்படமாக தேர்வு செய்த பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா   |    SKLS கேலக்சி மால் புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் ஸ்டோரிஸ் இணையும் படத்தில் நடிக்கும் கலையரசன்   |    தேவா பாடிய காதல் வலியைப் பற்றிப் பேசும் பாடல் அபார வெற்றி!   |    ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடிக்கும் படத்திற்காக ரீமிக்ஸ் செய்யப்பட்ட பிரபல பாடல்   |    இளம் நடிகரின் காலில் விழுந்த பிரியா பவானிஷங்கர்!   |    நடன இயக்குனர் லலிதா ஷோபிக்கு கிடைத்த பெருமை   |    ஐஸ்வர்யா ராஜேஷ்.கதாநாயகியாக நடிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் படம் பூஜையுடன் துவங்கியது   |    வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சமந்தா; தசரா பண்டிகையில் வெளியான அறிவிப்பு   |    நானி, சாய் பல்லவிக்கு இடையேயான காதலை ஒரு போஸ்டர் மூலமாக வெளியிட்ட படக்குழு   |    ஜெய் பீம் படத்தின் பவர்புல்லான ‘பவர்’ சாங் வெளியானது   |    சமந்தா Dream warrior Pictures நிறுவனத்தில் நடிக்கும் முதல் படம்   |    தனுஷ்,செல்வராகவன் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது!   |    அதர்வாமுரளி நடித்துள்ள 'அட்ரஸ் படபிடிப்பு முடிவடைந்தது.   |   

croppedImg_322881311.jpeg

’டாக்டர்’ விமர்சனம்

Directed by : நெல்சன்

Casting : சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், அர்ச்சனா, யோகி பாபு, வினய், அருண் அலெக்சாண்டர்

Music :அனிருத்

Produced by : KJR and SK புரொடக்ஷ்ன்ஸ்

PRO : ரியாஸ்

Review :

அப்பாவி சிறுமிகளை கடத்தி விற்கும் ஹியூமன் ட்ராபிக்கிங் நெட்வொர்க் நடத்தி வருபவர் வினய். இந்த நெட்வொர்க்கை பிடிக்க களமிரங்கும் ஒரு டாக்டர் அதில் வெற்றி பெற்றாரா இல்லையா, என்பது தான் ‘டாக்டர்’ படத்தின் கதை.

 

டாக்டர் வருணாக வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அசத்தியிருக்கிறார். காமெடி ஹீரோவாக தொடங்கி ஆக்சன் ஹீரோவாக தன்னை மாற்றி கொண்டு வரும் சிவகார்த்திகேயனை புதியதொரு அவதாரம் எடுத்துள்ளார். பல இடங்களில் நம்மை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறார்.

 

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். வழக்கம்போல் அழகான நாயகியை அறிவில்லாதவராக காட்டும்  கமர்ஷியல் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தாலும் முதல் படத்திலேயே தனக்கு காமெடியும் வரும் என்பதை நிரூபித்திருப்பவர், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

 

‘கோலமாவு கோகிலா’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நெல்சன் திலீப்குமாருக்கு இது இரண்டாவது படம். நெல்சன் தனது முந்தைய படத்தை போலவே காமெடி காட்சியில் கலக்கி இருக்கிறார். மிக மிக சீரியஸான காட்சிகளிலும் காமெடியைத் தூவி இயக்குநர் சிரிக்க வைத்திருக்கிறார். 

 

அனிருத்தின் பின்னணி இசை அனிருத் பின்னணி இசையில் கதையோட்டத்துக்கு ஏற்ப தெறிக்க விடுகிறார். படத்திற்கு பெரிய பலம் சேர்க்கிறது. குறிப்பாக செல்லம்மா பாடல் ரசிக்க முடிகிறது. படம் நெடுக, தன் பின்னணி இசையாலும் பாடல்களாலும் ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட் கொடுத்துள்ளார் அனிருத். 

 

வில்லன் வினய் அதிரடி வில்லனாக இல்லாமல் அமைதியான வில்லனாக காணப்படுகிறார்.

 

யோகி பாபு, நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களை தனது கவுண்டர்கள் மூலம் குஷிப்படுத்தியிருக்கிறார். ரவி மற்றும் யோகி பாபுவின் ஒன்லைனில் திரையரங்கமே அதிர்கிறது. அருண் அலெக்சாண்டர், தீபா, இளவரசு போன்றோர்களின் காமெடியும் படத்தில் செம்மையாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. 

 

படத்தில் முதல் அரைமணி நேரம் மெதுவாக நகர்கிறது. அதன்பின் டாப் கியரில் செல்கிறது. 

 

ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், காட்சிகளை பிரம்மாண்டமாகவும், கதாப்பாத்திரங்களை அழகாகவும் காட்டியிருக்கிறார்.

 

‘பொய் சொல்லப் போறோம்’,‘கேங் லீடர்’ போன்ற படங்களின் சாயல் தெரிகிறது. வசனங்கள் மூலம் பெண்களை இழிவுபடுத்துவதுபோல்  உள்ளது. அதை தவிர்த்திருக்கலாம்  லாஜிக்கை கண்டுகொள்ளாமல் பயணிக்கும் திரைக்கதையும் சட்டென முடியும் க்ளைமாக்ஸும் மைனஸ். 

 

"டாக்டர்" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : இந்த டாக்டர் சீரியஸ் டாக்டர் இல்லை சிரிப்பு டாக்டர்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA