சற்று முன்

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மனதை ஒரு சேர வென்றுள்ள ZEE5 வின் 'விநோதய சித்தம்' திரைப்படம்   |    வரலட்சுமி சரத்குமார் வழக்கறிஞராக அவதாரமெடுக்கும் புதிய படம் ஆரம்பம்   |    கண்டெய்னருக்குள் படமாக்கப்பட்ட ஊமைச் செந்நாய் படத்தின் சண்டைக்காட்சிகள்   |    பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் வெளியிட்ட படக்குழு   |    ஆவலுடன் எதிர்பார்க்கும் சூர்யாவின் ஜெய் பீம் ட்ரெய்லர் அக்டோபர் 22 அன்று வெளியாகிறது   |    மாணவர்களுக்கான இலவச சினிமா பயிற்சி - தமிழகம் முழுவதும் 5 ஊர்களில் 2வது சுற்று தேர்வு   |    விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படத்தின் செகண்ட் லுக் வெளியீடு   |    தனுஷ் படத்தை சிறந்த இந்திய திரைப்படமாக தேர்வு செய்த பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா   |    SKLS கேலக்சி மால் புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் ஸ்டோரிஸ் இணையும் படத்தில் நடிக்கும் கலையரசன்   |    தேவா பாடிய காதல் வலியைப் பற்றிப் பேசும் பாடல் அபார வெற்றி!   |    ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடிக்கும் படத்திற்காக ரீமிக்ஸ் செய்யப்பட்ட பிரபல பாடல்   |    இளம் நடிகரின் காலில் விழுந்த பிரியா பவானிஷங்கர்!   |    நடன இயக்குனர் லலிதா ஷோபிக்கு கிடைத்த பெருமை   |    ஐஸ்வர்யா ராஜேஷ்.கதாநாயகியாக நடிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் படம் பூஜையுடன் துவங்கியது   |    வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சமந்தா; தசரா பண்டிகையில் வெளியான அறிவிப்பு   |    நானி, சாய் பல்லவிக்கு இடையேயான காதலை ஒரு போஸ்டர் மூலமாக வெளியிட்ட படக்குழு   |    ஜெய் பீம் படத்தின் பவர்புல்லான ‘பவர்’ சாங் வெளியானது   |    சமந்தா Dream warrior Pictures நிறுவனத்தில் நடிக்கும் முதல் படம்   |    தனுஷ்,செல்வராகவன் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது!   |    அதர்வாமுரளி நடித்துள்ள 'அட்ரஸ் படபிடிப்பு முடிவடைந்தது.   |   

croppedImg_1670878741.jpeg

‘லிப்ட்’ திரைப்பட விமர்சனம்

Directed by : வினீத் வரபிரசாத்

Casting : கவின், அம்ரிதா, கிரண் கோண்டா, காயத்ரி ரெட்டி, பாலாஜி வேணுகோபால்

Music :பிரிட்டோ மைகேல்

Produced by : ஹெப்சி

PRO : யுவராஜ்

Review :

ஐடி நிறுவனம் ஒன்றில் டீம் லீடராக பணியில் சேரும் நாயகன் கவினும், அதே நிறுவனத்தில் பணியாற்றும் நாயகி அம்ரிதாவும், இரவு நேரத்தில் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் போது, லிப்டில் சிக்கிக்கொள்வதோடு, அந்த லிப்டில் நடக்கும் சில திகிலான சம்பவங்களால் அதிர்ந்து போகிறார்கள். பிறகு லிப்டில் இருந்து வெளியேறி, அந்த கட்டிடத்தில் இருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். ஆனால், அந்த கட்டிடத்தில் இருந்து அவர்களால் வெளியேற முடியவில்லை.

 

கட்டிடத்தில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவிக்கும் கவின் மற்றும் அம்ரிதாவுக்கு இறுதியில் என்ன நடந்தது?, அங்கு நடக்கும் திகில் சம்பவங்களின் பின்னணி, ஆகியவற்றை படம் பார்ப்பவர்கள் அலறும் வகையில் சொல்லியிருப்பது தான் ‘லிப்ட்’.

 

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றவாறு நடிப்பில் அசத்தியிருக்கும் கவின், சிறு சிறு எக்ஸ்பிரஷன்களை கூட மிக கவனமாக செய்திருக்கிறார். ஒரே இடத்தில், இரண்டு கதாப்பாத்திரங்களை சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் படம், என்ற எண்ணம் படம் பார்ப்பவர்களிடம் ஏற்படாத வகையில், கவின் காட்சிகளை நகர்த்தி செல்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் அம்ரிதா கவினுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார். பேய் விளையாட்டு பற்றி ஜாலியாக பேசுபவர், பிறகு பேய் இருக்கும் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டு பதறும் காட்சிகளில் நாமும் பதற்றம் அடையும் அளவுக்கு நடித்திருக்கிறார்.

 

கிரண் கொண்டா மற்றும் தாரா ஜோடி ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் இயலாமையை உணர்த்துகிறது. ஐடி நிறுவன மேலாளராக நடித்திருக்கும் பாலாஜி, ஊழியர்களை காவு வாங்கும் கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகளை பிரதிபலிக்கிறார்.

 

எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒரே லொக்கேஷன் என்றாலும், அதில் வித்தியாசமான பிரேம்களை வைத்து, காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.

 

பிரிட்டோ மைக்கேலின் இசை படத்தின் மற்றொரு நாயகன் என்று சொல்லலாம். பேய் படம் என்றாலே சத்தம் சற்று அதிகமாக இருக்கும். ஆனால், பிரிட்டோ மைக்கேல் தனது பின்னணி இசை மூலம், சத்தமில்லாமலேயே பல இடங்களில் நம்மை பயமுறுத்துகிறார். 

 

தபஸ் நாயக்கின் ஒலிக்கலவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. படத்தொகுப்பாளர் ஜி.மதனின் பணி மிக கச்சிதமாக இருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் வினித் வரப்பிரசாத், ஐடி நிறுவன ஊழியர்களைப் பற்றிய ஜாலியான கதையாக படத்தை தொடங்கி, பிறகு அதிர வைக்கும் திகில் காட்சிகளால் ரசிகர்களை அலறவிடுகிறார். இறுதியில், ஐடி நிறுவன ஊழியர்களின் வலி நிறைந்த வாழ்க்கையை சொல்லி படத்தை முடிக்கிறார்.

 

பேய்களை நகைச்சுவை கதாப்பாத்திரமாக சித்தரித்து வெளிவரும் படங்களால் சோர்வடைந்திருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர், இரண்டு மணி நேரம் நம்மை கட்டிப்போட்டது போல படத்தை விறுவிறுப்பாகவும், திகிலாகவும் நகர்த்தி செல்கிறார்.

 

முதல் பாதியில் திரைக்கதை ஓட்டம் சில இடங்களில் நொண்டியடித்தாலும், இரண்டாம் பாதியில் வேகம் எடுக்கும் படம், க்ளைமாக்ஸ் வரை நம்மை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறது.

 

"லிப்ட்" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

 

Verdict : ஐடி நிறுவன ஊழியர்களின் வலி நிறைந்த வாழ்க்கையை திகிலுடன் சொல்லும் படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA