சற்று முன்

மணிரத்னத்தின் சரித்திர பிரமாண்ட படைப்பு “பொன்னியின்செல்வன்-1” படபிடிப்பு நிறைவடைந்தது   |    'பிசாசு-2' எண்ட்ரி குறித்த ருசிகர தகவலை பகிர்ந்த விஜய்சேதுபதி   |    கடலுக்கடியில் 'யானை' பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்ட பாண்டிச்சேரி அருண்விஜய் ரசிகர்கள்   |    துல்கர் சல்மான் வெளியிட்ட 'ஹனு-மான்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்   |    சினிமாவிற்குள் நுழைந்த 10 வருடத்தில் இந்த மாதிரி அங்கீகாரம் கிடைத்தது இல்லை! 'தேன்' பட நாயகன்   |    RARA திரைப்படத்தின் முதல் பாடலானா 'சீரா சீரா' பாடலை வெளியிட்ட AMAZON PRIME VIDEO   |    இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியராக பல விருதுகளை அள்ளிக்குவித்த ஷபீர்   |    சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் 'இராவணகோட்டம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது   |    தர்ஷா குப்தா, ரிஷி ரிச்சர்டு நடிக்கும் 'ருத்ர தாண்டவம்' அக்டோபர் 1 முதல் உலகெங்கும்   |    மீடியாக்காரர்கள் உண்மையைச் சொல்லுங்கள் பொய் சொல்லாதீர்கள் - எஸ் ஏ. சந்திரசேகர்   |    'நாய் சேகர்' பட டைட்டிலுக்கு போட்டியா! ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்திய சிவகார்த்திகேயன்!   |    ரஜினி படங்களுக்கு பணியாற்றிய பா.இரஞ்சித்தின் இணை இயக்குனர் இயக்கும் புதிய திரைப்படம்   |    YouTube-ல் சாதனை படைத்த ஜெய் நடிக்கும் 'எண்ணித் துணிக' பட டீசர்! உற்சாகத்தில் படக்குழுவினர்   |    பல விருதுகளை அள்ளிக்குவித்து சாதனை படைக்கும் அமுதவாணனின் 'கோட்டா'   |    நடிகர் சோனு சூட்டிற்குச் வருமான வரித்துறையினரால் வந்த சோதனை!   |    விஜய் சேதுபதி, டாப்ஸி நடித்துள்ள அனபெல் சேதுபதி’ செப்டம்பர் 17 முதல் டிஸ்னி ஹாட் ஸ்டாரில்   |    ரெட் ஜெயன்ட் மூவிஸ் 'அரண்மனை 3' படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்றது   |    ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' பட ரிலீஸ் அறிவிப்பு   |    ஜெர்மனில் 'கர்ணன்' மகிழ்ச்சியில் ரசிகர்கள்!   |    படத்தை நல்லா செய்ததை விட என்னை வைத்து செய்தது தான் அதிகம் - தயாரிப்பாளர் உருக்கம்   |   

croppedImg_374820138.jpeg

'டிக்கிலோனா' விமர்சனம்

Directed by : கார்த்திக் யோகி

Casting : சந்தானம், யோகி பாபு, அனகா, ஷிரின் கஞ்சவாலா

Music :யுவன் ஷங்கர் ராஜா

Produced by : KSR Studios - Soldiers Factory Kotapadi J Rajesh and KS Sinish KOTAPADI J RAJESH & K S SINISH

PRO : யுவராஜ்

Review :

மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கும் சந்தானம், டைம் மிஷன் மூலம் கடந்த காலத்திற்கு சென்று, தனது திருமணத்தை நிறுத்த முயற்சிக்க, அதனால் ஏற்படும் குழப்பங்களையும், குளறுபடிகளையும் சிரிப்பாக சொல்லியிருப்பது தான் ‘டிக்கிலோனா’-வின் கதை.

 

முடியை மட்டுமே மாற்றி 3 வேடங்களுக்கான வித்தியாசத்தை காண்பித்திருக்கும் சந்தானம், காமெடியில் எந்தவித குறையும் வைக்காமல் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார்.

 

சந்தானத்துடன் போட்டி போட்டு கவுண்டர் கொடுத்தாலும் யோகி பாபுவின் சத்தம் சற்று குறைவாகவே இருக்கிறது. நான் கடவுள் ராஜேந்திரன், ஆனந்தராஜ், முனிஸ்காந்த் ஆகியோர் வழக்கமான வழியில் சிரிப்பு காட்டிவிட்டு செல்கிறார்கள்.

 

நாயகிகள் அனகா மற்றும் ஷிரின் காஞ்ச்வால கதாப்பாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார்.

 

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணிக்கிறது. ஒளிப்பதிவாளர் ஆர்வி, கதைக்கு ஏற்ப பணியாற்றியிருக்கிறார்.

 

திருமணமான அனைத்து ஆண்களும் எதிர்கொள்ளும் பிரச்சனை தான் என்றாலும், அதை ஒரு பக்கமாக பேசாமல், மனைவிமார்கள் பக்கத்தின் நியாயங்களையும் பேசி, சிரிக்க வைப்பதோடு, தம்பதிகளை சிந்திக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி.

 

சந்தானத்தின் அக்மார்க்கான நகைச்சுவை எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், ரசிகர்களை ஏமாற்றாத வகையில் இருக்கிறது.

 

"டிக்கிலோனா" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

 

Verdict : நகைச்சுவை கலந்த குடும்ப கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA