சற்று முன்

மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |    தூய்மை பணியாளர் பத்மாவுக்கு பார்த்திபன் வழங்கிய மரியாதை!   |    அரசியல் அல்ல, முழு எண்டர்டெய்னர் - ‘லீடர்’ குறித்து லெஜெண்ட் சரவணன் விளக்கம்   |    Fire Fox Film House தயாரிப்பில் புதிய போலீஸ் லவ் கமர்ஷியல் படம், படப்பிடிப்பு தொடக்கம்!   |    ராம் சரண்–புச்சி பாபு சானா கூட்டணியில் ‘பெத்தி’, ஏப்ரல் 30 உலகளாவிய திரையரங்கு வெளியீடு!   |    'பராசக்தி' ZEE5-ல், பிப்ரவரி 7 முதல் உலகளாவிய டிஜிட்டல் வெளியீடு!   |    கனவே வில்லனாகும் காதல் பயணம் – ‘ட்ரீம் கேர்ள்’ குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி   |    லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ நிழல் உலகமும் காவல் துறையும் மோதும் மாஸ் ஆக்ஷன் திரில்லர்!   |   

croppedImg_438148343.jpeg

’வித் லவ்’ விமர்சனம்

Directed by : Madhan

Casting : Abishan Jeevinth, Anaswara Rajan,Theni Murugan, “kalaimamani” Saravanan, Harish Kumar, Kavya Anil, Sacchin Nachiappan, Sachana, Rj Ananthi, Dimple Kanna, Siddharth

Music :Sean Roldan

Produced by : MRP Entertainment, Zion Films - Soundarya Rajinikanth, Magesh Raj Pasilian

PRO : Yuvaraj

Review :

"வித் லவ்" மதன் இயக்கத்தில் செளந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஷான் ரோல்டன். இந்த படத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், தேனி முருகன், “கலைமாமணி” சரவணன், ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், சாச்சனா, R.J. ஆனந்தி, டிம்பிள் கண்ணாம் சித்தார்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

தாய் இறந்தபிறகு, தந்தையிடம் பேசாமல் கோபத்தில் இருக்கும் ஒரு அபிஷன் ஜீவிந்த். அவருக்கு சரியான நேரத்தில் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் அவரது அக்கா RJ ஆனந்தி. அதற்காக மேட்ரிமோனி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அனஸ்வரா ராஜனை சந்திக்கிறார். இருவரும் தங்களைப் பற்றிய விபரங்களை பரிமாறிக்கொள்ளும் போது, தங்களது முதல் காதல் மற்றும் அதன் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அப்போது அனஸ்வரா ராஜானுக்கு தோன்றும் ஒரு யோசனை மூலம், இருவரும் இணைந்து தங்களது முதல் காதலை தேடிச் செல்கிறார்கள். அவர்களுடைய யோசனை நிறைவேறியதா? அதனால் இவர்களது நிகழ் வாழ்வில் நிகழும் மாற்றங்கள் என்ன? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள்தான் "வித் லவ்".

 

‘டூரிஸ்ட் பேமிலி’ என்ற தனது முதல் படத்தின் மூலம் கவனம் பெற்ற அபிஷன் ஜீவிந்த், இந்தப் படத்தில் சத்தியசீலன் என்ற சத்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வழக்கமான ஹீரோ தோற்றம் இல்லாவிட்டாலும், கதை நகர நகர அவர் தான் இந்தப் படத்தின் நாயகன் என்பதை உணர வைக்கிறார். பள்ளிக்கால தோற்றமும், இளமைப் பருவ தோற்றமும் என இரண்டு விதமான காட்சிகளிலும் அவர் இயல்பாக பொருந்துகிறார். மிகைப்படுத்தாத முகபாவனைகளும், எளிய நடிப்பும் அவருக்கு பலமாக அமைந்துள்ளன.

 

நாயகியாக நடித்திருக்கும் அனஸ்வரா ராஜன், எளிமையான அழகும் அசத்தலான நடிப்பும் கொண்டு கவனம் ஈர்க்கிறார். சின்னச் சின்ன, ஆனால் ஆழமான முகபாவனைகள் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார். மனதில் ஏற்படும் மாற்றங்களை எந்த அவசரமும் இல்லாமல், நிதானமாக முகத்தில் பிரதிபலிக்கும் விதம் மிக அழகாக இருக்கிறது. இந்த நுணுக்கமான நடிப்பே அவருடைய கதாபாத்திரத்திற்கு தனி உயிர் கொடுக்கிறது.

 

சத்யாவின் அக்காவாக வரும் ஆர்.ஜே. ஆனந்தி, பொறுப்பும் புரிதலும் நிறைந்த அந்த முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். 

 

அனிஷா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காவ்யா அனில், திரையில் குறுகிய நேரம் தோன்றினாலும், பார்வையாளர்களின் மனதில் நீண்ட நேரம் தங்கி விடுகிறார். பள்ளிக் கால முதல் காதலின் எளிமை, மெல்லிய தயக்கம், சொல்ல முடியாத உணர்ச்சிகள் ஆகியவற்றை தனது நடிப்பின் மூலம் அழகாக கொண்டு வருகிறார். மேலும் பார்வையாளர்களை அவர்களுடைய பள்ளிக்கால காதல் நினைவுகளை திரும்பி பார்க்கவைக்கிறது.

 

தேனி முருகன், சரவணன், ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன், சித்தார்த், டிம்பிள் கண்ணா, சாச்சனா, ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்ட துணை நடிகர்கள் அனைவரும் தங்களுக்கான வேடங்களை நம்பிக்கையுடன் செய்துள்ளனர். சிறிய கதாபாத்திரங்களாக இருந்தாலும், கதையின் ஓட்டத்திற்கு அவர்கள் முக்கிய பங்களிப்பு அளிக்கிறார்கள்.

 

ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, காட்சிகளின் அழகை விடவும் கதாபாத்திரங்களின் உள்ளார்ந்த உணர்வுகளை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிகமாக கவனம் செலுத்துகிறது. படம் பார்க்கும் போது பார்வையாளர்களும் தங்கள் பள்ளிக் கால நினைவுகளோடு சேர்ந்து பயணிப்பது போல உணர வைக்கிறார். சில இடங்களில் காட்சிகளைப் படமாக்கிய விதம், கேமராவே காதலை மெல்ல பேசுவது போல மனதிற்கு நெருக்கமாகத் தோன்றுகிறது.

 

ஷான் ரோல்டனின் இசை இனிமையாக இருந்தாலும், பாடல்கள் பெரிதாக மனதில் பதியவில்லை. ஆனால் பின்னணி இசை கதையின் உணர்வுக்கு நன்றாக துணை நிற்கிறது. படத்தொகுப்பு சுருக்கமாகவும் சீராகவும் இருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் மதன், முதல் காதல் அனுபவங்களையும் அதைச் சுற்றிய நினைவுகளையும் இந்தப் படத்தின் மையமாக எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்பு வந்த சில படங்களின் தாக்கம் தெரிந்தாலும், இன்றைய கால இளைஞர்களுக்கு நெருக்கமாக இருக்கும் காட்சிகளை அமைத்து, பார்வையாளர்களை ரசிக்க வைக்கும் வகையில் கதையை சொல்லியுள்ளார். அந்த சமநிலையால், படம் பழைய நினைவுகளையும் புதிய உணர்வுகளையும் ஒன்றாக இணைத்து மகிழ்விப்பதில் வெற்றி பெறுகிறது. 

 

காலம் எவ்வளவு மாறினாலும், முதல் காதல் மனதில் விட்டுச் செல்லும் தடங்கள் ஒருபோதும் மங்குவதில்லை என்பதையே இந்த படம் நுணுக்கமாக நினைவூட்டுகிறது. நாயகன்–நாயகி உறவுக்குள் மட்டுமே சிக்காமல், அதைச் சுற்றியுள்ள பல கதாபாத்திரங்களின் பார்வையிலும் காதலை அனுபவிக்கச் செய்கிறார் இயக்குநர் மதன். ஆழ்ந்த வலி, பிரிவு போன்ற கனமான உணர்வுகளைத் திணிக்காமல், நினைவுகளை சிரிப்பும் இனிமையும் கலந்து ஓடும் தருணங்களாக மாற்றி, காதல் என்பதே ஒரு அழகான பயணம் என்பதைக் காட்சிகளாக சொல்கிறார்.

 

மொத்தத்தில், "வித் லவ்"  என்பது பெரிய பரபரப்பு இல்லாமல், முதல் காதல் நினைவுகளை மெதுவாகத் தொட்டு, மனதை நிதானமாக நெகிழ வைக்கும் ஒரு இனிய காதல் பயணம்.

 

"வித் லவ்" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : மனதை அமைதியாக நெகிழ வைக்கும் ஒரு இனிய காதல் அனுபவம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA