சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

croppedImg_2139852821.jpeg

‘ஹார்டிலே பேட்டரி’ இணையத் தொடர் விமர்சனம்

Directed by : Sadhasivam Senthilrajan

Casting : Guru Lakshman, Padine Kumar, Sumithra Devi, Anith Yash Paul, Yoga Lakshmi, Iniyal, Jeeva Ravi, Sharmila, Praveena Princy, Kalai, Ajith, Pavithra and Seenu.

Music :Michael Akash

Produced by : Elysium Maxima, Allo Media

PRO : AIM

Review :

 

 

"ஹார்டிலே பேட்டரி" சதாசிவம் செந்தில்ராஜன் இயக்கத்தில் எலிசியம் மக்ஸிமா, அல்லோ மீடியா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை மைக்கேல் ஆகாஷ். இந்த படத்தில் குரு லக்‌ஷ்மண், பாடினி குமார், சுமித்ரா தேவி, அனித் யாஷ் பால், யோகலக்‌ஷ்மி, இனியள், ஜீவா ரவி, சர்மிளா, பிரவீன் பிரின்ஸி, கலை, அஜித் பவித்ரா, சீனு மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

உடலில் உள்ள நோய்களை கண்டுபிடிப்பதில் தொடங்கி, பேசுவது உண்மையா ? பொய்யா ? என்பதை கண்டுபிடிப்பது என பலவற்றுக்கு அறிவியல் கருவிகள் பயன்படும் போது, ஒருவர் மனதில் உள்ள காதலை கண்டுபிடிக்க ஒரு கருவியை ஏன் உருவாக்க கூடாது ? என்ற கேள்வி அறிவியல் மீது பேரார்வம் கொண்ட நாயகி பாடினி குமார் மனதில் எழுகிறது. அந்த கேள்விக்கான பதிலாக அவர் ஒரு கருவியை உருவாக்குகிறார். ஒருவர் மீது மற்றொருவருக்கு எவ்வளவு காதல் இருக்கிறது, என்பதை சொல்லும் அந்த கருவி வெற்றிகரமாக இயங்குகிறது.

 

இந்த நிலையில், நாயகி பாடினி குமாரை சந்திக்கும் நாயகன் குரு லக்‌ஷ்மன், அவரது கருவி பற்றி அறிந்து அதை கிண்டல் செய்வதோடு, அந்த கருவியால் ஒருவர் மனதில் இருக்கும் காதலை கண்டுபிடிக்க முடியாது, என்பதை நிரூபித்து காட்டுவதோடு, நாயகியை காதலிக்க வைப்பதாகவும், சவால் விடுகிறார். இந்த சவாலில் நாயகன் வெற்றி பெற்றாரா ? இல்லையா ? என்பதை அறிவியல் மற்றும் உணர்வுகள் கலந்த காதல் கதையாக சொல்வது தான் ‘ஹார்டிலே பேட்டரி’.

 

புதிய முயற்சியாக மட்டும் இன்றி மிக சுவாரஸ்யமான கதைக்கருவோடு உருவாகியுள்ள ‘ஹார்டிலே பேட்டரி’ தொடர், இணையத் தொடர் உலகில் புதிய அத்தியாயத்தை படைக்கும் வித்தியாசமான முயற்சி. குறிப்பாக அறிவியல் கலந்த காதல் கதையாக பயணிக்கும் இதை,  இணையத் தொடராக அல்லாமல் திரைப்படமாக எடுத்திருந்தால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இருந்தாலும், தொடராக பல எப்பிசோட்கள் மூலம் சொல்லப்பட்டாலும், அதையும் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.

 

நாயகியாக நடித்திருக்கும் பாடினி குமார் மற்றும் நாயகனாக நடித்திருக்கும் குரு லக்‌ஷ்மன் இருவருக்குமான கெமிஸ்ட்ரி மிக நன்றாகவே வேலை செய்திருக்கிறது. இருவருக்குமான அறிமுகம் மற்றும் உரையாடல்கள் ரசிக்கும்படி இருப்பதோடு, இருவருக்கும் இடையிலான சவால் மற்றும் அதைச் சார்ந்த காட்சிகள் கவிதை போல் பயணிக்கிறது.

 

சுமித்ரா தேவி, அனித் யாஷ் பால், யோகலக்‌ஷ்மி, இனியள், ஜீவா ரவி, சர்மிளா, பிரவீன் பிரின்ஸி, கலை, அஜித் பவித்ரா, சீனு என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள்.

 

கூலி செளந்தரராஜனின் ஒளிப்பதிவு, மைக்கேல் ஆகாஷின் இசை, நிசாமின் படத்தொகுப்பு மற்றும் அனிமேஷன், ராஜா.டி.எஸ்-ன் கலை என அனைத்துவிதமான தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் பணி மூலம் காதலுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

எழுதி இயக்கியிருக்கும் சதாசிவம் செந்தில்ராஜன், காதல் கதையை வித்தியாசமான முயற்சியாக மட்டும் இன்றி, அறிவியலோடு சேர்த்து சொல்லி ரசிக்க வைத்தது மட்டும் அல்லாமல், தற்போதைய விஞ்ஞான காலத்தில் அறிவியல் கருவி மூலம் காதலை கண்டுபிடிப்பது சாத்தியமே, என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

ஒரு பக்கம் காதல் கருவி மூலம் அறிவியல் உலகத்திற்கு சாதகமாக பேசியிருந்தாலும், கருவியை தாண்டிய ஒரு உணர்வு தான் காதல் என்பதையும் சுவைபட சொல்லி காதல் கதையை திகிட்டாத தித்திப்பாக கொடுத்திருக்கிறார். 

 

"ஹார்டிலே பேட்டரி" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : இதயத்தை வருடும் ஒரு உணர்வு

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA