சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

croppedImg_1719924335.jpeg

‘ரஜினி கேங்க்’ விமர்சனம்

Directed by : M.Ramesh Baarathi

Casting : Rajini Kiishen, Dwiwika, Munishkanth, Motta Rajendran, Cool Suresh, Kalki

Music :M.S.Jones Rupert

Produced by : Mishri Enterprises - C.S. Padamchand, C. Ariyant Raaj & Rajini Kiishen

PRO : AIM

Review :

"ரஜினி கேங்க்" எம்.ரமேஷ் பாரதி இயக்கத்தில் மிஷ்ரி எண்டர்பிரைசஸ் – சி.எஸ்.பத்மசந்த், சி.அரியண்ட் ராஜ், ரஜினி கிஷன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட். இந்த படத்தில் ரஜினி கிஷன், த்விவிகா, முனீஷ்காந்த், மொட்ட ராஜேந்திரன், கூல் சுரேஷ், கல்கி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

காதலர்களான நாயகன் ரஜினி கிஷனும், நாயகி த்விவிகாவும் ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு முனீஷ்காந்த் தனது காரில் லிப்ட் கொடுக்கிறார். வழியில் திருடனான கல்கியும் அந்த காரில் ஏறிக்கொண்டு பயணிக்கிறார். இரவு நேரத்தில் பயணிக்கும் இவர்கள், ஏதோ ஒரு இடத்திற்கு சென்று விடுகிறார்கள். பல்வேறு தரப்பினர், பல காரணங்களுக்காக இவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். 

 

இதற்கிடையே, ரஜினி கிஷன் - த்வ்விவிகாவுக்கு திருமணம் நடக்கிறது. அந்த திருமணத்திற்குப் பிறகு காமெடி ஜானராக பயணித்த படம் திடீரென்று வேறு ஒரு ஜானரில் பயணிக்க தொடங்குகிறது. அது என்ன ஜானர் ?, அதன் மூலம் இயக்குநர் சொல்ல நினைத்ததை சரியாக சொன்னாரா? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ரஜினி கிஷன், காமெடி ஜானர் படத்திற்கு பொருந்தும் முகம். ஆட்டம், காதல், காமெடி என படம் முழுவதும் அசால்டாக நடித்திருப்பவர் முதல் படம் என்ற பயமே இல்லாமல் நடித்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் த்விவிகா, காமெடி மற்றும் காதல் பாடல்கள் என இரண்டு தளங்களிலும் கவர்கிறார். நடிப்பும் அளவு.

 

முனீஷ்காந்த் காமெடி என்ற பெயரில் ஒரே மாதிரியான ரியாக்‌ஷனை கொடுத்து பார்வையாளர்களை சலிப்படைய செய்கிறார். கூல் சுரேஷ் தேவையில்லாமல் கத்திக்கொண்டு இருப்பது காதை கிழிக்கிறது. மொட்ட ராஜேந்திரன், கல்கி  ஆகியோர் வரும் காட்சிகளிலும் காமெடி நெடி குறைவே.

 

இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட்டின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கமர்ஷியலாக இருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ் குமார், படத்தையும், பாடல் காட்சிகளையும் கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்.

 

சாதாரணமான கதையை, மிக சாதாரணமாகவே படத்தொகுப்பு செய்திருக்கும் படத்தொகுப்பாளர் ஆர்.கே.வினோத் கண்ணா, காட்சிகளின் நீளத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

 

எழுதி இயக்கியிருக்கும் எம்.எஸ்.ரமேஷ் பாராதி, முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். பார்வையாளர்கள் எந்தவித லாஜிக்கையும் பார்க்காமல் சிரிக்க வேண்டும் என்பதில் அதிகம் மெனக்கெட்டிருக்கும் இயக்குநர் அதற்காக காமெடி நடிகர்களை மட்டுமே பெரிதும் நம்பியிருக்கிறார்.

 

இயக்குநர் எம்.எஸ்.ரமேஷ் பாரதி, காமெடி நடிகர்கள் மீது செலுத்திய கவனத்தை தனது நகைச்சுவை எழுத்தில் செலுத்தியிருந்தால், பார்வையாளர்களை கொஞ்சமாக சிரிக்க வைத்திருக்கும் இந்த கேங்க் வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கும்.

 

"ரஜினி கேங்க்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : நகைசுவை கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA