சற்று முன்

அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |   

croppedImg_204950068.jpeg

’தாவுத்’ விமர்சனம்

Directed by : Prashanth Raman

Casting : Linga, Sara Archar, Dilipan, Radha Ravi, Sai Dheena, Sara, Vaiyapuri, Sarath Ravi, Arjay, Abishek

Music :Rakesh Ambikapathy

Produced by : TURM Production House - S.Uma Maheshwari

PRO : Bhuvan

Review :

"தாவுத்" பிரசாந்த் ராமன் இயக்கத்தில் TURM புரொடக்ஷன் ஹவுஸ் – எஸ்.உமா மகேஸ்வரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ராக்கேஷ் அம்பிகாபதி. இந்த படத்தில் லிங்கா, சாரா ஆச்சர், ராதாரவி, சாய் தீனா, ஸாரா, வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

தமிழ்நாட்டில் வாழ்க்கையை தொடங்கிய தாவுத், மும்பையில் இருந்துக் கொண்டு தமிழ்நாட்டிலும் தனது போதை பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தை நடத்துகிறார். புகைப்படம் உள்ளிட்ட எந்த விபரமும் வெளி உலகத்திற்கு தெரியாத தாவுத் யார் ? என்பதை தெரிந்து கொள்ள தீவிரம் காட்டுவதோடு, தமிழ்நாட்டில் இருந்து கடத்த இருக்கும் அவரது போதை பொருளை கைப்பற்றும் முயற்சியில் அர்ஜெய் தலைமையிலான காவல்துறை குழு  ஈடுபடுகிறது.  அதே சமயம், தாவுத்தின் கடத்தல் பணிகளை 20 வருடங்களாக செய்து வந்த தீனாவும் அந்த சரக்கை கைப்பற்ற திட்டம் போடுகிறார். தாவுத்தின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைக்கும் மற்றொரு தரப்பும் அந்த சரக்கை கைப்பற்ற திட்டம் போடுகிறது.

 

இந்த நிலையில், தாவுத்தின் சரக்கை சரியான இடத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அபிஷேக், வழக்கமான ஆட்கள் மூலம் செய்தால் தெரிந்துவிடும் என்பதால் புதிய நபரை தேடுகிறார். அதன்படி, வாடகை கார் ஓட்டுநரான லிங்காவை தேர்வு செய்கிறார். பண தேவைக்காக கடத்தல் பணியில் ஈடுபடும் அப்பாவி லிங்கா, திட்டமிட்டபடி தாவுத் சரக்கை சேர்த்தாரா ?, நிழல் உலகத்தில் வாழும் தாவுத் வெளிச்சத்திற்கு வந்தாரா ? என்பதை பரபரப்பாக சொல்வதே ‘தாவுத்’.

 

கதையின் நாயகனாக நடித்திருந்தாலும் படம் முழுவதும் ஒரு கதாபாத்திரமாக வலம் வரும் லிங்கா, இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில் நிறைவாக நடித்திருக்கிறார். அப்பாவியான முகம், அளவான நடிப்பு என்று தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் விதமாக நடித்திருக்கிறார்.

 

கதாநாயகியாக நடித்திருக்கும் சாரா ஆச்சர், கதாநாயகனுக்கு ஜோடியாக அல்லாமல் வில்லன் கூட்டத்தில் இருப்பவருக்கு ஜோடியாக சுற்றி வருகிறார். அறிமுகம் தான் இப்படி, பிறகு மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கும் போது, அம்மணி  சட்டென்று மறைந்து பார்வையாளர்களுக்கு பெருத்த ஏமாற்றமளிக்கிறார். 

 

போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அர்ஜெய், தாவுத்தின் அடியாளாக நடித்திருக்கும் திலீபன், சாய் தீனா, சரத்ரவி, அபிஷேக், ஸாரா, வையாபுரி, ராதாரவி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.

 

ராக்கேஷ் அம்பிகாபதியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை ஆக்‌ஷன் திரில்லர் படத்திற்கான அனைத்து அம்சங்களுடன் பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் ஆகியோரது கேமரா, படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை ஆக்‌ஷன் திரில்லர் உணர்வு குறையாதபடி காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். குறிப்பாக படத்தின் ஹீரோ அல்லது வில்லன் கதாபாத்திரங்களுக்கு தான் பெரிய பில்டப் கொடுப்பார்கள். ஆனால், இவர்கள் படத்தில் நடித்திருக்கும் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் பில்டப் கொடுக்கும் விதமாக காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.

 

படத்தொகுப்பாளர் ஆர்.கே.ஸ்ரீநாத், காட்சிகளை நேர்த்தியாக தொகுத்து படம் முழுவதையும் பரபரப்பாக பயணிக்க வைத்திருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் பிரசாந்த் ராமன், தாவுத் மற்றும் அவரது கடத்தல் பொருளை வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் பரபரப்பாக கதை சொல்லியிருக்கிறார்.  

 

எளிமையான விசயத்தை வைத்துக் கொண்டு, இரண்டு மணி நேரம் பார்வையாளர்களை பொழுதுபோக்கும் பணியை சிறப்பாக செய்திருக்கும் இயக்குநர் பிரசாந்த் ராமன், கதாநாயகியின் கதாபாத்திரத்தை சட்டென்று திரைக்கதையில் இருந்து விலக்கி வைப்பது, தாவுத் யார் ? என்ற கேள்வியை பார்வையாளர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்துவிட்டு, அது பற்றிய விளக்கத்தை பார்வையாளர்கள் குழப்பமடையும் விதத்தில் சொல்லியிருக்கிறார். 

 

கடத்தல் பொருளை கைப்பற்றப் போவது யார் ? என்ற கேள்விக்கான பதிலை பரபரப்பான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கும் இயக்குநர் பிரசாந்த் ராமன், தாவுத் யார் ? என்ற கேள்வியை மட்டுமே வைத்துக் கொண்டு, படத்தின் இறுதிக் காட்சி வரை பார்வையாளர்களின் கவனத்தை சிதறவிடாமல் காட்சிகளை வடிவமைத்த விதம் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

 

"தாவுத்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : ஒரு முறை பார்க்கலாம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA