சற்று முன்
’கணேசபுரம்’ விமர்சனம்
Directed by : K. வீராங்கன்
Casting : சின்னா, காசிமயன், ரிஷா ஹரிதாஸ், ராஜசிம்மன்
Music :ராஜா சாய்
Produced by : K. காசிமயன்
PRO : M P ஆனந்த்
Review :
திருட்டு கூட்டங்களை வளர்க்கும் ஜமீனின் கட்டுப்பாட்டில் இருக்கும் மூன்று நண்பர்கள் அதில் ஹீரோ சின்னாவும் ஒருவர். நண்பர்கள் மூவரும் கால் போன போக்கில் வாழ்ந்துக் கொண்டிருக்க, நாயகி ரிஷாவை சின்னா காதலிக்கிறார். காதல் அவர்களுடைய வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது, அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன, என்பது தான் ’கணேசபுரம்’ படத்தின் கதை.
ஹீரோவாக நடிக்கும் சின்னா ஒரு சில இடங்களில் நடிகர் ஜெய்யை நியாபகப்படுத்துகிறார். அம்மாசி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இது தான் முதல் படம் என்றாலும், அனுபவம் வாய்ந்த நடிகரைப் போல நடித்திருக்கிறார்.
ஹீரோவின் நண்பராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் காசிமாயனும் மற்றொரு நண்பராக நடித்திருக்கும் டிக் டாக் மூலமாக பிரபலமான ராஜ் பிரியனும் நடிப்பில் குறை வைக்கவில்லை.
கதாநாயகியாக நடித்திருக்கும் ரிஷா ஹரிதாஸ் இயல்பான நடிப்போடு, இயல்பாக வலம் வருகிறார்.
பி.வாசுவின் ஒளிப்பதிவு கதைக்களத்திற்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, ஆக்ஷன் காட்சிகளை இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளது.
ராஜா சாயின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக உள்ளது, பின்னணி இசையும் திரைக்கதைக்கு கைக்கொடுத்திருக்கிறது.
திருட்டை குலத்தொழிலாக கொண்ட சமூகத்தின் வாழ்க்கையை நட்பு, காதல், திருட்டு என கிராமத்து பின்னணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வீரங்கன்.
"கணேசபுரம்" படத்திற்கு மதிப்பீடு 3/5
Verdict : ’கணேசபுரம்’ விறுவிறுப்பான வித்தியாசமான கதை
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA