சற்று முன்

பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |   

croppedImg_1510295998.jpeg

‘டெடி’ விமர்சனம்

Directed by : சக்தி சவுந்தர் ராஜன்

Casting : ஆர்யா, சயீஷா, மகிழ் திருமேனி, சதிஷ், கருணாகரன்

Music :இமான்

Produced by : K.E.ஞானவேல் ராஜா & ஆதனா ஞானவேல் ராஜா

PRO : யுவராஜ்

Review :

K.E.ஞானவேல் ராஜா & ஆதனா ஞானவேல்  ராஜா தயாரிப்பில் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா மற்றும் சாயீஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் டெடி. வித்தியாசமான கதையை படமாக்குவதற்கு பெயர் போன சக்தி சௌந்தர்ராஜன் டெடி படம் மூலம் மீண்டும் வித்தியாசமான முயற்சியில் இறங்கியிருக்கிறார். 

 


ஆர்யா ஒரு அதிபுத்திசாலி எதையும் உடனுக்குடன் கற்றுக்கொள்ளும் திறமை வாய்ந்தவராகவும் அதிகமான ஞாபக சக்தி படைத்தவராகவும் இருக்கிறார். கல்லூரி மாணவியான சாயீஷாவை, திட்டம் போட்டு உடல் உறுப்பு கடத்தல் செய்யும் மெடிக்கல் மாபியா ஒரு விபத்தில் சிக்கவைக்கிறார். அப்போது அவருக்கு லேசாக காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு மருந்து செலுத்திய பிறகு கோமா நிலைக்கு சென்றுவிடுகிறார். அதன் பிறகு உண்மை தெரிந்த சயீஷாவின் ஆத்மா ஒரு டெடி பொம்மைக்குள் சென்றுவிடுகிறது. அந்த பேசும் திறன் கொண்ட டெடி பொம்மை ஆர்யாவை சந்தித்து தன் நிலையை பற்றி கூறுகிறது. விஷயம் அறிந்த ஆர்யா டெடி பொம்மைக்குள் இருக்கும் சயீஷாவின் ஆத்மாவை  சயீஷா உடலுக்குள் சேர்ந்தாரா! சயீஷாவின் உயிரை காப்பாற்றினாரா! மெடிக்கல் மாபியா கும்பலின் முறியடித்தாரா என்பதுதான் மீதி கதை.

 


ஆர்யா தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார்

 

சாயீஷா ஒரு சில காட்சிகளே வந்திருந்தாலும் அவை படத்திற்கு பலம் சேர்க்கும் வண்ணம் உள்ளது. அனாலும் ஆர்யாவுடன் அவருக்கு ஒரு டூயட் பாடல் கூட வைக்காதது, ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளது.

 


சதீஷ் வழக்கம்போல் ஹீரோவின் நண்பனாக வருகிறார். இதற்கு முன்பு நண்பனாக என்ன செய்தாரோ அதையே தான் இந்த படத்திலும் செய்திருக்கிறார். 

 


இமானின் இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. வழக்கமான பாணியை தவிர்த்து இசையில் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். 

 


படத்தில் வில்லனாக வரும் மகிழ் திருமேனியின் கதாபாத்திரம் பெரிதாக கவரவில்லை. நடிப்பில் வில்லத்தனத்தை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தனது கம்பீரமான குரலின் மூலம் கவனிக்கும் வில்லனாக வலம் வருகிறார். 

 


கருணாகரன், சதிஷ் ஆகியோரது நகைச்சுவை காட்சிகளை விட கரடி பொம்மை செய்யும் காமெடி ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கிறது. கரடி பொம்மைக்கு குரல் கொடுத்திருக்கும் இ.பி.கோகுலனின் குரலும், கரடி பொம்மை கதாப்பாத்திரமும் சிறுவர்களை மட்டும் இன்றி பெரியவர்களையும் ஈர்த்து விடுகிறது. அனிமேஷன் கதாபாத்திரமான டெடி, படத்தின் மற்றொரு ஹீரோ என்றே சொல்லலாம்.

 


முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்த்திய இயக்குனர் இரண்டாம் பாதியில் கோட்டை விட்டுள்ளார். ஏற்கனவே பல படங்களில் சொல்லப்பட்ட விஷயமாக இருந்தாலும் அதை ஒரு பொம்மையை வைத்து வித்தியாசமாக கூறியிருப்பது பாராட்டுக்குரிய விஷயம். வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள். 

 

"டெடி" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : வித்தியாசமான பொழுதுபோக்கு கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA