சற்று முன்

’குற்றம் தவிர்’ விமர்சனம்
Directed by : M.Gajendran
Casting : Rishi Rithvik, Aradhya, Vinodhini Vaidhyanathan, P.Pandurangan, Saravanan, Sai Dheena, Kamaraj, Sendrayan
Music :Srikanth Deva
Produced by : Sri Sai Saindhavi Creation - P.Pandurangan
PRO : Sakthi Saravanan
Review :
"குற்றம் தவிர்" எம்.கஜேந்திரன் இயக்கத்தில் ஸ்ரீ சாய் சைந்தவி கிரியேஷன் - P. பாண்டுரங்கன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஸ்ரீகாந்த் தேவா. இந்த படத்தில் ரிஷி ரித்விக், ஆராத்யா, வினோதினி, சரவணன், பாண்டுரங்கன், ஆனந்த் பாபு, சாய் தீனா, காமராஜ், செண்ட்ராயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நாயகன் ரிஷி ரித்விக்கை அவரது அக்கா வினோதினி நன்றாக படிக்க வைத்து காவல்துரை அதிகாரியாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ரிஷி ரித்விக்கும் அக்காவின் ஆசையை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, மருத்துவ மோசடி ஒன்றின் மூலம் ரிஷி ரித்விக்கின் அக்கா உயிரிழக்க, அதற்கு காரணமானவர்களை அழிக்க ரிஷி ரித்விக் களம் இறங்குகிறார். அதன் பிறகு என்ன நடந்தது?, அவரது அக்கா ஆசைப்பட்டது போல் அவர் காவல்துறை அதிகாரியானரா? இல்லையா ? என்பது தான் ‘குற்றம் தவிர்’ படத்தின் கதை.
’அட்டு’ படத்தில் லோக்கல் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த ரிஷி ரித்விக், இதில் காவல்துறை அதிகாரியாகும் முயற்சியில் ஈடுபடும் இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார். அக்காவின் ஆசையை நிறைவேற்றுவத்ற்காக கடுமையாக உழைப்பவர், அக்காவின் நிலையை எண்ணி வருந்துவது, அவரது மரணத்திற்கு காரணமானவர்களை எதிர்த்து போராடுவது என்று அனைத்து ஏரியாவிலும் கச்சிதமாக நடித்திருப்பவர், காதல் மற்றும் நடனக் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஆராத்யா அழகாக இருக்கிறார். நடிப்பு, நடனம் என அனைத்திலும் நிறைவாக நடித்து பாராட்டு பெறுகிறார்.
நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் வினோதினி வைத்தியநாதன், தனது அனுபவமான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் சரவணன், அவரது உதவியாளராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் பாண்டுரங்கன், மருத்துவராக நடித்திருக்கும் ஆனந்த் பாபு, சாய் தீனா, காமராஜ், செண்ட்ராயன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களில் பலர் புதுமுகங்களாக இருந்தாலும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருகிறார்கள்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் அனைத்து பாடல்களும் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளில் இருக்கும் ஆக்ரோஷத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ரோவின் பாஸ்கர், கமர்ஷியல் அம்சங்களோடு காட்சிகளை படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும், பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையிலும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் மருத்துவத்துறையில் நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தும் வகையில் பி.பாண்டுரங்கன் எழுதியிருக்கும் கதையை, கமர்ஷியல் ஆக்ஷன் படமாக இயக்குநர் எம்.கஜேந்திரன் இயக்கியிருக்கிறார்.
சஸ்பென்ஸ், காமெடி, காதல், ஆக்ஷன், திருப்பங்கள் என அனைத்து அம்சங்களையும் அளவாக பயன்படுத்தி முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் எம்.கஜேந்திரன், சில கதாபாத்திரங்களுக்கு கொடுத்திருக்கும் தேவையில்லாத பில்டப்புகளை தவிர்த்திருந்தால், படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும்.
"குற்றம் தவிர்" படத்திற்கு மதிப்பீடு 3/5
Verdict : சஸ்பென்ஸ், காமெடி, காதல், ஆக்ஷன் எல்லாம் கலந்த கலவை
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA