சற்று முன்

பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |   

croppedImg_1061848802.jpeg

'அன்பிற்கினியாள்' விமர்சனம்

Directed by : கோகுல்

Casting : கீர்த்தி பாண்டியன், அருண்பாண்டியன், பிரவீன் ராஜா

Music :ஜாவித் ரியாஸ்

Produced by : அருண்பாண்டியன், கவிதா பாண்டியன்

PRO : யுவராஜ்

Review :

மலையாளத்தில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ஹெலன். தன் மகள் கீர்த்தி பாண்டியனுக்காகத் தமிழில் ‘அன்பிற்கினியாள்’  என  ரீமேக் செய்துள்ளார் அருண்பாண்டியன்.

 

கீர்த்தி பாண்டியன் நர்ஸிங் படித்து கனடா செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் சிக்கன் ஹப் எனும் கடையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். 


 

தாய் இல்லாததால் மகள் கீர்த்தி பாண்டியனுக்கு தாயாக, தந்தையாக, ஒரு நண்பனாக இருக்கிறார் அருண்பாண்டியன். எதுவானாலும் தந்தையிடம் சொல்லக்கூடிய அளவிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும்  கீர்த்தி பாண்டியன் தன காதலை மறைக்கிறார். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அருண்பாண்டியனுக்கு மகளின் காதல் தெரியவருகிறது.கோபம் கொள்கிறார். 

 


இந்த  சமயத்தில் மகள் ஒரு பெரிய ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார். ஆபத்தில் இருக்கும் மகளை அருண்பாண்டியன் காப்பாற்றினாரா..?, தந்தை மகளின் பாசப்போராட்டம் ஜெயித்ததா..? மகளுடைய காதலை ஏற்றுக்கொண்டாரா..? என்பதுதான் கதை. 

 


ஆபத்தில் இருக்கும் கீர்த்தி பாண்டியன் தான் எதிர்கொள்ளும் திக் திக் நிமிடங்களையும், உயிர் போகும் வலியையும், படம் பார்ப்பவர்களும் உணரும்படி நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியன், ஒட்டு மொத்த ரசிகர்களை கட்டிப்போட்டு கவனத்தை ஈர்த்து விடுகிறார். நாயகி கீர்த்தி பாண்டியனுக்கு விருதே வழங்கலாம்.

 


எஸ்.ஐ.ரவீந்திரனாக, தியேட்டர் ஆர்டிஸ்ட் ரவீந்திர விஜய் பொறுப்பில்லாத போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக கச்சிதமான பொருந்திஇருக்கிறார். 

 

காதலனாக வரும் ப்ரவீனுக்கு இது அறிமுக படம் என்றாலும், அனுபவ நடிகனை போன்று நடித்து அசத்தியிருக்கிறார். உணவகத்தின் மேலாளராக நடித்திருக்கும் பூபதி ராஜா சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், சில இடங்களில் எரிச்சலடையவைக்கிறார். 

 

மலையாள படத்தின் ரீமேக் படம் என்றாலும், தமிழில் சரியான திரைக்கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கோகுல். இரண்டாம் பாதியில் அனைவரையும் சீட்டின் நுனியில் இருக்க வைத்து படபடப்பை பல மடங்கு ஏற்றியிருக்கிறார் இயக்குனர் கோகுல். படபடப்பையும், பரிதாபத்தையும் கொண்டு வர ஜாவித் ரியாஸின் இசை பெரிதும் கை கொடுத்துள்ளது. பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை என்றாலும், பின்னனி இசை பயணம். 

 

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. குறிப்பிட்ட ஒரு லொக்கேஷனில் பெரும்பாலான காட்சிகள் நடைபெற்றாலும், அந்த உணர்வு ஏற்படாத வகையில் பிரதீப் ஈ.ராகவின் படத்தொகுப்பு அமைந்திருக்கிறது. 


.
மால் செக்யூரிட்டியாக, மலையாளப் படத்தில் நடித்த ஜெயராஜ் கோழிக்கோடு அவர்களே தமிழிலும் நடித்துள்ளார். தலைமை காவலராக ஹெலனில் சிறப்பாக நடித்திருந்த அடிநாட் சசியையும், அப்படியே தமிழில் பயன்படுத்தியுள்ளார் கோகுல்.

 

படத்தின் ஓட்டத்திற்கு மற்றொரு பலம் என்னவென்றால் அது கலை இயக்குனர் தான். இரண்டாம் பாதி முழுவதும் தனது கையில் எடுத்த கலையை கச்சிதமாக செய்திருக்கிறார் எஸ்.ஜெயச்சந்திரன்.

 


அலட்சியமே உருவான போலீஸ் அதிகாரி; சிறையிலிருக்கும் மனிதாபிமானமுள்ள கைதி; சிரித்த முகமாக இருக்கும் மால் செக்யூரிட்டி என படத்தில் ரசிக்க ஏராளமான யதார்த்தமான விஷயங்கள் உண்டு.கைதிகளுக்கும் மனிதாபிமானம் உண்டு என்பதை அழகாக எடுத்து கூறிய விதம் சூப்பர். 

 


ஒரு சில விஷயங்கள் நம்பும்படியாக இல்லையென்றாலும், படத்தில்  சில காட்சிகள் நம்மை சீட்டின் நுனிக்கே கொண்டு விடுகிறது. 

 

ஒரு பெண் ஒரு ஆபத்தில் மாட்டிக்கொண்டால் தன்னை காப்பாற்றிக்கொள்ள எப்படியெல்லாம் முயற்சிக்கலாம் என்பதை அழகாக சித்தரித்து கூறியுள்ளனர். 

 

"அன்பிற்கினியாள்" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : 'அன்பிற்கினியாள்' அனைவரின் அன்பையும் ஜெயிப்பாள்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA