சற்று முன்

லிங்குசாமி படத்தில் இணையும் பிரபல இளம் நடிகை   |    சஸ்பென்ஸ் திரில்லராக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் 'ஆறா எனும் ஆரா'   |    வெற்றி பாதையில் செல்லும் பெண்களுக்கு இது முதல் படி - கலைமாமணி டாக்டர் ஜெயசித்ரா   |    படப்பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கிய 'மோகன்தாஸ்'   |    அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பரிப்பதே! - விமல்   |    ஸ்ரீகாந்த் - சிரிஷ்டி டாங்கே நடிக்கும் த்ரில்லர் மூவி   |    பிரபல பாலிவுட் நடிகருடன் காஜல் அகர்வால்!   |    ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'   |    மிர்ச்சி சிவாவுடன் இணையும் ஆரம்பம் பட நடிகை   |    இயக்குனர் ஹரியின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது   |    ராணா டக்குபட்டி மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் 'காடன்' படத்தின் ட்ரைலர் இன்று வெளியீடு   |    ஜேப்பியாரின் சொத்தை அபகரிக்க சதி! விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை   |    ‘அன்பிற்கினியாள்’ இன்று முதல் டிக்கெட் ரிசர்வேஷன் ஆரம்பம்   |    சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! 'டாக்டர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு   |    விஜய்யிடம் மன்னிப்பு கேட்கும் எஸ். ஏ. சந்திரசேகரன், மனம் இறங்குவாரா விஜய்!   |    லாஸ்லியா, பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் படத்தின் டீஸர் வைரல்   |    ரீ என்ட்ரி கொடுக்கும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் ராஷ்மி   |    சர்வதேச திரைப்பட விழாவில் மக்களின் வரவேற்பை பெற்ற 'அமலா' விரைவில் திரையரங்குகளில்   |    சசிகுமார், எஸ்.ஆர்.பிரபாகரன் மீண்டும் கூட்டணி சேரும் 'முந்தானை முடிச்சு'   |    பிரபுதேவா உதவியாளர் தர்ஷிணி கதாநாயகியாக அறிமுகமாகும் 'தோப்புக்கரணம்'   |   

croppedImg_1743965394.jpeg

'ஆட்கள் தேவை' விமர்சனம்

Directed by : ஷக்தி சிவன்

Casting : ஷக்தி சிவன், அனு, மைம் கோபி, சாய் தினா

Music :கார்த்திக் ராஜா

Produced by : மதுகுமார் செல்லப்பன்

PRO : கே எஸ் கே

Review :

ஹீரோ சக்தி சிவன் & ஹீரோயின் அனு இருவரும் காதலிக்கின்றனர். அவர்கள் விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய காத்திருக்கும் நிலையில் பெண்ணைகளை கடத்தி  போதை ஏற்றி சீரழிக்கும் கும்பல் அணுவை கடத்தி விடுகின்றனர்.  இந்த கும்பலின் தலைவன் ஈசனுக்கு பக்க பலமாக இருக்கிறார் ஒரு அரசியல்வாதி. காதலி  அனுவை காப்பாற்ற சக்தி சிவன் தன் தேடுதல் வேட்டையை துவங்குகிறார். தன் காதலியை மீட்டாரா? அந்த அரசியல் புள்ளி யார் என்பதை ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் சொல்லியிருக்கிறார்கள். 

 

இந்த படத்தின் ஹீரோ சக்தி சிவன் தான் படத்தின் இயக்குனர்.  இயக்குநர் மற்றும் நடிகர் என இரண்டிலும் முத்திரை பதிக்கும் விதத்தில் பணியாற்றியிருக்கிறார். பல இடங்களில் பாராட்டும்படியான முயற்சிகளை மேற்கொண்டாலும் சில இடங்களில் லாஜிக் மீறல்களாகவும் இருக்கிறது.

 

நாயகியாக வரும் அனு கொடுத்த வேலையை அழகாக செய்திருக்கிறார். மிகையில்லாத நடிப்பு.

 

வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள மைம் கோபி உள்ளிட்டவர்கள் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார் மைம் கோபி.

 

கார்த்திக் ராஜா இசை கேட்கும்படியாக உள்ளது.  

 

சுரேஷ்குமாரின் சுந்தரத்தின் ஒளிப்பதிவு ஓகே பரவாயில்லை எனலாம்.

 

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையப்படுத்தி பல படங்கள் வந்திருந்தாலும், அவற்றில் இருந்து சற்று வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பதோடு, தான் சொல்ல வந்ததை நேர்த்தியாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் படத்திற்கு ’ஆட்கள் தேவை’ என்று எதனால் தலைப்பு வைத்தார் என்பது தான் புரியவில்லை.

 

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மறைப்பதால் தான் குற்றவாளிகள் அந்த குற்றங்களை தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறார்கள், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையப்படுத்தி பல படங்கள் வந்திருந்தாலும், இந்த சமூக கருத்தை கமர்ஷியலாக சொல்லியிருக்கும் இயக்குநர் சக்தி சிவனை பாராட்டியாக வேண்டும். 

 

"ஆட்கள் தேவை" படத்திற்கு மதிப்பீடு 2.5/5

 

 

 

Verdict : சமூக சிந்தனை கொண்ட ஒரு கமர்ஷியல் படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA