சற்று முன்

லிங்குசாமி படத்தில் இணையும் பிரபல இளம் நடிகை   |    சஸ்பென்ஸ் திரில்லராக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் 'ஆறா எனும் ஆரா'   |    வெற்றி பாதையில் செல்லும் பெண்களுக்கு இது முதல் படி - கலைமாமணி டாக்டர் ஜெயசித்ரா   |    படப்பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கிய 'மோகன்தாஸ்'   |    அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பரிப்பதே! - விமல்   |    ஸ்ரீகாந்த் - சிரிஷ்டி டாங்கே நடிக்கும் த்ரில்லர் மூவி   |    பிரபல பாலிவுட் நடிகருடன் காஜல் அகர்வால்!   |    ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'   |    மிர்ச்சி சிவாவுடன் இணையும் ஆரம்பம் பட நடிகை   |    இயக்குனர் ஹரியின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது   |    ராணா டக்குபட்டி மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் 'காடன்' படத்தின் ட்ரைலர் இன்று வெளியீடு   |    ஜேப்பியாரின் சொத்தை அபகரிக்க சதி! விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை   |    ‘அன்பிற்கினியாள்’ இன்று முதல் டிக்கெட் ரிசர்வேஷன் ஆரம்பம்   |    சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! 'டாக்டர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு   |    விஜய்யிடம் மன்னிப்பு கேட்கும் எஸ். ஏ. சந்திரசேகரன், மனம் இறங்குவாரா விஜய்!   |    லாஸ்லியா, பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் படத்தின் டீஸர் வைரல்   |    ரீ என்ட்ரி கொடுக்கும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் ராஷ்மி   |    சர்வதேச திரைப்பட விழாவில் மக்களின் வரவேற்பை பெற்ற 'அமலா' விரைவில் திரையரங்குகளில்   |    சசிகுமார், எஸ்.ஆர்.பிரபாகரன் மீண்டும் கூட்டணி சேரும் 'முந்தானை முடிச்சு'   |    பிரபுதேவா உதவியாளர் தர்ஷிணி கதாநாயகியாக அறிமுகமாகும் 'தோப்புக்கரணம்'   |   

croppedImg_1619694977.jpeg

' குட்டி ஸ்டோரி' விமர்சனம்

Directed by : கெளதம் வாசுதேவ் மேனன், A L விஜய், வெங்கட்பிரபு, நலன்குமாரசாமி

Casting : விஜய் சேதுபதி, அமலாபால். அதித்தி பாலன், கெளதம் வாசுதேவ் மேனன்

Music :கார்த்திக், மது, பிரேம்ஜி அமரன், ஹெட்வின் லூஸ் விஸ்வநாத்.

Produced by : டாக்டர் ஐசரி கே கணேஷ்

PRO : சுரேஷ் சந்திரா Done

Review :

பிரபல இயக்குநர்களான கெளதம் வாசுதேவ் மேனன், A L விஜய், வெங்கட்பிரபு, நலன்குமாரசாமி, இவர்கள் நால்வரும் இயக்கிய       நான்கு சிறு கதைகளை ஒன்றாக இணைத்து ‘குட்டி ஸ்டோரி’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ்.

 


எதிர்பாரா முத்தம்

-----------------------------------------------

இந்த படத்தை இயக்கியவர் கெளதம் வாசுதேவ் மேனன்

 

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இக்கதையில் நாயகனாக நடித்திருக்கிறார். இவரே இயக்கியும் இருக்கிறார். இவருடன் அமலாபால், ரோபோ சங்கர், வினோத் கிருஷ்ணன். 

 

கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் அமலா பால் இருவரும் கல்லூரியில் நட்பாக இருந்து வருகின்றனர். ஒரு சிறிய பிரச்சனையால் இருவரும் பிரிந்து விடுகின்றனர்.

 

சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது, அமலா பால் ஒரு கடிதம் மூலம் ஒரு விஷத்தை சொல்லி இருக்கிறார் அது என்ன என்பதுதான் கதை.

 

காதல், நட்பு இரண்டுக்குள்ளும் இருக்கும் ஒரு ஓட்டம் தான் இந்த கதையின் கரு. அதை எளிதாக கூறியிருக்கிறார்கள். இதில் ரோபோசங்கர் காமெடி செய்வதாக நினைத்து கடுப்பேற்றி இருக்கிறார். 

 

இசை கார்த்திக் எடிட்டிங் ஆண்டனி, ஒளிப்பதிவு மனோஜ் பரம்கம்சா, பாடல்கள் மதன் கார்க்கி.

 

இந்த படம் குறுகிய நேர படமாக இருந்தாலும் ரசிக்கும்படியாக உள்ளது. 

 

அவனும் நானும்

-----------------------------------------

இந்த படத்தை இயக்கியவர் A L விஜய், ஒளிப்பதிவு அரவிந்த் கிருஷ்ணன், எடிட்டிங் ஆண்டனி. இசை மது.

 

நடிகர்கள் மேகா ஆகாஷ், அமிர்டாஷ் பிரதான்  ஆரியா, புஜ்ஜிபாபு.


 

கல்லூரியில் படித்து வரும் மேகா ஆகாஷ், தனது காதலனுடன் நெருங்கி இருந்ததால் கர்ப்பமடைகிறார். விதியின் வசத்தால் இருவரும் பிரிந்துவிடுகின்றனர்.

 

இந்த சூழ்நிலையால் மேகா ஆகாஷ் சந்திக்கும் பிரச்சினைகள் அவர் எடுக்கும் முடிவுகள் இவற்றை சுற்றி வருவதுதான் கதை. 

 

அடுத்து என்ன என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்  இயக்குனர். க்ளைமாக்ஸ் காட்சிகளும் யாரும் யூகிக்க முடியாதபடி நல்ல உயிரோட்டமான கதைக்களம்.

 

லோகம்

---------------------

இந்த படத்தை இயக்கியவர் வெங்கட்பிரபு, ஒளிப்பதிவு சக்தி சரவணன்,  எடிட்டிங் பிரவீன் K  L., இசை பிரேம்ஜி அமரன். 

 

இந்த படத்தில் வருண், சங்கீத, சாக்ஷி அகர்வால் நடித்திருக்கிறார்கள். 

வருண் கம்ப்யூட்டரில் கேம் விளையாடும் இளைஞன்.

 

தனது கம்ப்யூட்டரில் ஆன்லைனில் புது விளையாட்டு விளையாடும் வருண், மறுபக்கம் ஒரு பெண்ணின் நட்பு கிடைக்கிறது.

 

அந்த நட்பை வருண் காதலாக மாற்றிக் கொள்கிறார். இருவரும் கேம் விளையாட, ஒரு கட்டத்தில் கேமில் அந்த பெண் அவுட்டாகி விட, அப்பெண்ணின் தொடர்பை இழக்கிறார் வருண்.

 

யார் அந்த பெண்.? மீண்டும் அந்த பெண்ணின் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

 

வித்தியாசமான கதை தான் என்றாலும், இதை அனைவரும் ஏற்றுக் கொண்டு பொறுமை கொண்டு பார்ப்பார்களா.? என்பது மிகப்பெரும் கேள்விக் குறி.

 

வெங்கட்பிரபு எடுக்கும் அனைத்து படங்களிலும் வசந்த விஜய் நடித்திருப்பார் அல்லது  வசந்த் & கோ விளம்பரமாவது இடம்பெற்றிருக்கும். அதே பழக்கத்தில் இந்த கார்ட்டூன் படத்திலும் வசந்த் & கோ விளம்பரத்தை புகுத்தியிருக்கிறார்கள். இதுவல்லவோ நட்பு.

 

வெங்கட்பிரபு இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.

 

ஆடல் பாடல்

---------------------------------

இந்த படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி, ஒளிப்பதிவு N குமாரசாமி, எடிட்டிங் ஸ்ரீதர் பிரசாத், இசை ஹெட்வின் லூஸ் விஸ்வநாத்.

 

இந்த படத்தில் விஜய் சேதுபதி, அதித்தி பாலன், ஆன்ரியா    நடித்திருக்கிறார்கள். 

 


விஜய் சேதுபதி மற்றும் அதிதி பாலன் இருவரும் தம்பதிகள். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள்து.

 

இந்நிலையில், விஜய் சேதுபதிக்கு தனது செல்போனில் ஒரு பெண்ணின் தொடர்பு கிடைக்க, அந்த தொடர்பு போனில் வளர, இறுதியில் அந்த பெண் யார் என்பது தெரிந்ததும் அதிர்ச்சிக்குள்ளாகிறார். பிறகு அவருடைய மனைவியை பற்றி ஒரு ரகசியத்தை அறிகிறார் அதை பற்றி ரகசியமாக ஆராய்கிறார். ஆராய்ந்து அறிந்தாரா? அவருடைய மனைவி பற்றிய ரகசியம் என்ன? விஜய் சேதுபதியுடன் போனில் பேசிய பெண் யார் என்பதுதான் கதை.

 

விஜய் சேதுபதி தனது கேரக்டரை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். அந்த பெண் யார் என்று தெரிந்ததும் அதிர்ச்சியில் முழிப்பதும், ரகசியத்தை கண்டுபிடிப்பதில் காட்டும் ஆர்வத்திலும் நடிப்பு அபாரம்.

 


கோடி கணக்கில் பணம் போட்டு எடுக்கும் பெரிய படஜெட் படமானாலும் சரி இதுபோன்ற சிறிய படஜெட் படமானாலும் சரி எந்த வித்தியாசமும் காட்டாமல் தன்னுடைய நடிப்பு திறமையை காட்டுவதில் விஜய் சேதுபதிக்கு நிகர் அவரே.

   

நான்கு தொகுப்புகளிலும் நிறைகள் இருந்தாலும் அதற்கு ஈடு கொடுத்தாற்போல் குறைகளும் இருக்கின்றன..,

 

"குட்டி ஸ்டோரி" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

 

Verdict : நான்கு கதைகளும் நான்கு விதமான பொழுதுபோக்கு சித்திரம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA