சற்று முன்

லிங்குசாமி படத்தில் இணையும் பிரபல இளம் நடிகை   |    சஸ்பென்ஸ் திரில்லராக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் 'ஆறா எனும் ஆரா'   |    வெற்றி பாதையில் செல்லும் பெண்களுக்கு இது முதல் படி - கலைமாமணி டாக்டர் ஜெயசித்ரா   |    படப்பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கிய 'மோகன்தாஸ்'   |    அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பரிப்பதே! - விமல்   |    ஸ்ரீகாந்த் - சிரிஷ்டி டாங்கே நடிக்கும் த்ரில்லர் மூவி   |    பிரபல பாலிவுட் நடிகருடன் காஜல் அகர்வால்!   |    ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'   |    மிர்ச்சி சிவாவுடன் இணையும் ஆரம்பம் பட நடிகை   |    இயக்குனர் ஹரியின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது   |    ராணா டக்குபட்டி மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் 'காடன்' படத்தின் ட்ரைலர் இன்று வெளியீடு   |    ஜேப்பியாரின் சொத்தை அபகரிக்க சதி! விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை   |    ‘அன்பிற்கினியாள்’ இன்று முதல் டிக்கெட் ரிசர்வேஷன் ஆரம்பம்   |    சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! 'டாக்டர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு   |    விஜய்யிடம் மன்னிப்பு கேட்கும் எஸ். ஏ. சந்திரசேகரன், மனம் இறங்குவாரா விஜய்!   |    லாஸ்லியா, பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் படத்தின் டீஸர் வைரல்   |    ரீ என்ட்ரி கொடுக்கும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் ராஷ்மி   |    சர்வதேச திரைப்பட விழாவில் மக்களின் வரவேற்பை பெற்ற 'அமலா' விரைவில் திரையரங்குகளில்   |    சசிகுமார், எஸ்.ஆர்.பிரபாகரன் மீண்டும் கூட்டணி சேரும் 'முந்தானை முடிச்சு'   |    பிரபுதேவா உதவியாளர் தர்ஷிணி கதாநாயகியாக அறிமுகமாகும் 'தோப்புக்கரணம்'   |   

croppedImg_1752272383.jpeg

’கபடதாரி’ விமர்சனம்

Directed by : பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

Casting : சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், நாசர்

Music :சைமன் கே.கிங்கின்

Produced by : லலிதா தனஞ்செயன்

PRO : ரேகா, தர்மா

Review :

சென்னையின் ஒரு பகுதியில், மேம்பாலம் கட்டும் பணியின் போது சிதைந்த நிலையில் மூன்று நபர்களுடைய எலும்பு கூடுகள் கிடைக்கிறது. ஆனால், அந்த எலும்புக்கூடுகள் 40 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தவர்களுடையது என்பதால், அதை காவல்துறை பெரிதுப்படுத்தாமல் விட்டுவிடுகிறது. அதே சமயம், அப்பகுதியில் பணியில் இருக்கும் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரான சிபிராஜ், அந்த எலும்பு கூடுகளின் பின்னணி பற்றி ஆராயும் போது, 40 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலை மற்றும் ஒரு குடும்பம் மாயமான வழக்கு குறித்து தெரிய வருகிறது. காவல்துறையால் முடிக்காமல் விடப்பட்ட அந்த வழக்கை மீண்டும் கையில் எடுக்கும் சிபிராஜ், அந்த வழக்கின் உண்மையான குற்றவாளி மற்றும் காணாமல் போன குடும்பத்திற்கு என்ன நடந்தது, ஆகியவற்றை எப்படி கண்டுபிடிக்கிறார், என்பதை பரபரப்பான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள்.

 

சிபிராஜ் போலீஸ் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துவது போல, போலீஸ் யூனிபார்மும் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது. போக்குவரத்து காவலராக பணியாற்றினாலும் காவல்துறை விஷயங்களிலும் மூக்கை நுழைக்கலாம் என்று கதையில் கூறியிருப்பது படு காமெடியாக உள்ளது. முந்தைய படத்தை விட இந்த படத்தில் சிபிராஜின் நடிப்பு சுமாராக தான் உள்ளது. சண்டைக்காட்சிகள் சரியாக வரவில்லை. 

 

ஹீரோயினாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதாவுக்கு மிக மிக குறைவான வேலை தான். 

 

பத்திரிகையாளராக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், தனஞ்செயன் ஜெயப்பிரகாஷை திட்டுவது போல் எந்த பத்திரிகையாளரை சாடியுள்ளார் என்பது தெரியவில்லை. 

 

பணி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நாசர் அவருடைய கதாபாத்திரத்தை கனகட்சிதமாக செய்திருக்கிறார். சிறிய கதாப்பாத்திரம் என்றாலும் தயாரிப்பாளர்  ஜே.சதீஷ்குமார் நடிகராக கவனிக்க வைக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் கன்னட நடிகர் சம்பத் மைத்ரேயா கண்களினாலேயே நடிக்கிறார். படத்தின் முக்கியமான கதாப்பாத்திரமாக அறிமுகப்படுத்தப்படும் சுமன் ரங்கநாதன், மின்னல் போல் வந்து போகிறார்.

 

சைமன் கே.கிங்கின் பின்னணி இசை திரையரங்கை விட்டு வெளியே வந்த பிறகும் நம் காதில் வண்டுகள் ரீங்காரமிட்டதுபோல் உள்ளது.

 

ராசாமதியின் ஒளிப்பதிவு ஓகே 

 

கன்னட படத்தின் ரீமேக்காக இருந்தாலும், அப்படத்தில் இருந்த சில தொய்வான காட்சிகளுக்கு கத்திரி போட்டிருக்கும் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல், படத்தை முடிந்த அளவுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படம் என்று சொன்னாலும், அதற்கான அம்சங்களை குறைத்துவிட்டு, மசாலாத்தனத்தை தூக்கலாக வைத்திருப்பார்கள். ஆனால், இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, டைடில் கார்டு போடுவது முதல் க்ளைமாக்ஸ் எண்ட் கார்டு போடுவது வரை, முழுக்க முழுக்க அனைத்துக் காட்சிகளையும் சஸ்பென்ஷாகவும், த்ரில்லராகவும் நகர்த்தி செல்வது நினைத்து மக்களை ஏமாற்றியுள்ளார். இயக்குனர் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். பாவம் இதற்க்கு யார் காரணம் என்று தெரியவில்லை. 

 

கதையில் காட்சிகளுக்கு இடையிலான தொடர்பு நேர்த்தியாக இல்லாதது பெரு குறையாக உள்ளது. 

 

படம் எடுக்க தெரிந்தவர்களே இப்படி ஒரு படத்தை எடுத்தால் என்ன அர்த்தம்.

 

"கபடதாரி" படத்திற்கு மதிப்பீடு 2/5

 

 

 

Verdict : மொத்தத்தில், ரெண்டேகால் மணி நேரம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக காட்டுவதாக நினைத்து படம் பார்க்க

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA