சற்று முன்

ஜனவரி 15 அன்று பூஜையுடன் தொடங்குகிறது பிரபாஸின் - சலார்   |    தமிழக முதல்வர் வெளியிடும் பட பாடல்!   |    எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகர் கலையரசன் !   |    அப்பா,மகளுக்கு கிடைத்தபாக்கியம்! இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா   |    விஜய் விரைவில் கட்சி துவங்கப்போகிறாரா? அவர் சொல்லுக்கு அர்த்தம் என்ன   |    விஜய்க்காக தயார் செய்த கதையில் சிவகார்த்திகேயன்   |    சந்தானம் நடிக்கும் தந்தை-மகன் சென்டிமென்ட் படம்   |    விஜய்யுடன் ஆண்ட்ரியாவின் மாஸ்டர் பட புகைப்படம் வைரல்   |    கோல்டன் க்ளோப் விருதுக்கு போட்டியிடும் ‘சூரரைப் போற்று’   |    பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆரியை கார்னர் செய்யும் ரியோ - கடுப்பில் ரசிகர்கள்   |    ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகர் தனுஷ்   |    என் முன்னாடி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது - ஷகிலா   |    இளம் நடிகைக்கு மாலில் நேர்ந்த கொடுமை!   |    கால்ஷீட் கேட்கும் இயக்குநர்களை கதறவிடும் ஹரிஷ் கல்யாண்   |    சித்ரா தற்கொலைக்கு காரணம் பிரபல தொகுப்பாளரா?   |    சைக்கோ கிரைம் திரில்லர் படத்தின் மூலம் இணையப்போகும் ஸ்ரீகாந்த், வெற்றி   |    சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட திரிஷா படப்பாடல்   |    சித்ரா கணவர் ஹேம்நாத் திடீர் கைது - விசாரணையில் கசிந்த தகவல்   |    திண்டுக்கல்லில் மிஸ்கின் படத்திற்காக அமைக்கப்படும் பிரம்மாண்டமான செட்   |    ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய படம்   |   

croppedImg_39183235.jpeg

கொம்பு விமர்சனம்

Directed by : E.இப்ராஹிம்

Casting : ஜீவா, திஷா பாண்டே, பாண்டியராஜன், ஸ்வாமிநாதன், கஞ்சாகருப்பு, அம்பானி ஷங்கர்

Music :தேவ் குரு

Produced by : M பன்னீர்செல்வம் - P வானதி

PRO : விஜய்முரளி

Review :

 

திரைப்படம் எடுப்பதற்காக கதை எழுதிக் கொண்டிருக்கிறார் ஹீரோ ஜீவா. ஆவிகள் குறித்து ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்கிறார் ஹீரோயின் திஷா பாண்டே. ஆவிகள் மீது நம்பிக்கை இல்லாத ஜீவா, அவ்வபோது திஷா பாண்டேவை கலாய்த்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே, ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் பெண்கள் மரணமடைகிறார்கள். அந்த மரணத்திற்கு அந்த வீட்டில் இருக்கும் ஆவி தான் காரணம், என்று ஊர் மக்கள் கூறுகிறார்கள். இந்த விஷயத்தை அறியும் திஷா பாண்டே, அந்த வீட்டில் இருக்கு ஆவி குறித்து ஆராய செல்லும் போது, ஆவி மீது நம்பிக்கையில்லாத ஜீவாவும் அவருடன் செல்கிறார். இறுதியில் அந்த வீட்டில் நடக்கும் மரணங்களுக்கு காரணம் ஆவியா அல்லது ஆசாமியா என்பதை திகிலாகவும், கலகலப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

 

ஜீவாவின் ஒவ்வொரு அசைவிலும் ரஜினிகாந்தின் சாயல் இருப்பதை, பச்சை குழந்தை கூட சொல்லும் அளவுக்கு அவரது நடிப்பு இருக்கிறது. ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்பதற்காக, நடிப்பிலும் அதை காட்டுவது சரியல்ல என்று தான் தோன்றுகிறது. மற்றபடி ஆக்‌ஷன் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும், காமெடி நடிகரை தாண்டிய ஒரு நாயகனாக ஜீவா வலம் வருகிறார்.

 

நாயகி திஷா பாண்டே கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். பாடல் காட்சிகளில் ஆடை சிக்கனத்தை கடைபிடித்து ரசிகர்களின் மனதில் தாராளமாக தங்கிவிடுகிறார்.

 

Jeeva and Disha Pandey in Kombu

 

படம் முழுவதும் வரும் பாண்டியராஜன், ஈஸ்வர் மற்றும் அவ்வபோது தலை காட்டும் லொள்ளு சபா சுவாமிநாதன், கஞ்சா கருப்பு, அம்பானி சங்கர் ஆகியோரது காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கிறது. வில்லாக நடித்திருக்கும் நடிகர்கள் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப பொருந்துகிறார்கள்.

 

சுதீப்பின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் அழகாகவும், பேய் வீட்டின் காட்சிகள் திகிலாகவும் இருக்கிறது. தேவ் குருவின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது.

 

தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் பேய் படங்கள் என்றாலே, காமெடி கலந்த திகில் கலாட்டாவாகவே இருக்கின்றன. ஆனால், அதை மட்டுமே வைத்து திரைக்கதை அமைக்காமல், புதிய விஷயம் ஒன்றை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் இ.இப்ராகிம், கமர்ஷியலான ஒரு திகில் படத்துடன், மூட நம்பிக்கையை ஒழிக்கும் ஒரு விழிப்புணர்வு படமாகவும் இப்படத்தை கொடுத்திருக்கிறார்.

 

படத்தின் முதல் பாதியில் திரைக்கதை மற்றும் காட்சிகளில் சில தொய்வுகள் இருந்தாலும், ’கொம்பு’-ஐ காட்ட தொடங்கியதுமே அந்த தொய்வுகள் அனைத்தும் தொலைந்து போய், விறுவிறுப்பும், பரபரப்பும் நம்மை தொற்றிக் கொள்கிறது. இறுதியில், கொலைக்கான காரணம் மற்றும் பின்னணியை விவரிக்கும் போது, படத்தில் இருந்த சிறுசிறு குறைகள் மறைந்து நிறைவான ஒரு படம் பார்த்த திருப்தி கிடைத்துவிடுகிறது.

 

 

Verdict : காமெடியோடு கதைக்கும் முக்கியத்துவம் அளித்துள்ள திகில் படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA