சற்று முன்

2025 தீபாவளிக்காக பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம்!   |    கெட்ட எண்ணம் உள்ளவர்கள் நிர்வாகத்திற்கு வந்துவிட்டால் எல்லாம் முடிந்தது - ஆர்.கே. செல்வமணி   |    முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட விஜய் சேதுபதியின் 'ஏஸ்' (ACE ) பட முன்னோட்டம்!   |    சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்த!   |    பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்த சூர்யா!   |    கோலாகலமாக நடைபெற்ற டாகடர்.ஐசரி கே கணேஷ் மகள் சிறப்பு திருமண வரவேற்பு!   |    கேன்ஸ் 2025 திரை விழாவில் அதிகாரபூர்வ போட்டியில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் 'மாண்புமிகு பறை'!   |    முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்ட 'கிராண்ட் காலா ஃபேஷன் வீக்'   |    இதயத் துடிப்பை எகிற வைக்கும் கிரைம் திரில்லர் 'பிளாக் ரோஸ்' முன்னோட்டம் வெளியீடு!   |    பரபரப்பான 'டென் ஹவர்ஸ்' திரைப்படம் இப்பொழுது டெண்ட்கோட்டா OTT இல்!   |    'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு!   |    அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக கூறும் நடிகை   |    நடிகர் சூர்யா பத்து கோடி ரூபாய் நிதியுதவி!   |    இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை! - சிறுத்தை சிவா   |    இயக்குநர் மிஷ்கின், துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் 'ஐ அம் கேம்' பூஜையுடன் துவங்கியது!   |    தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் துருவ் விக்ரம் நடிக்கும் படம் 'பைசன் காளமடான்' வெளியாகிறது!   |    துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான 'ஐ அம் கேம்' படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார்   |    ஓடிடி- யில் உலகில் சாதனை படைத்து வருகிறது ZEE5-இன் 'அய்யனா மானே' சீரிஸ்!   |    'நாக் நாக்' கில், நான் கதாநாயகனாக இருக்கலாம். ஆனால் நான் ஹீரோ கிடையாது - இயக்குநர் ராகவ் ரங்கநாதன   |    பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் #STR49 பூஜையுடன் துவங்கியது!   |   

croppedImg_1189364511.jpeg

'டூரிஸ்ட் ஃபேமிலி’ விமர்சனம்

Directed by : Abishan Jeevinth

Casting : Sasikumar, Simran, Yogi Babu, MS Baskar, Elango Kumaravel, Bags, Mithun Jaisankar, Kamalesh Jegan

Music :Sean Roldan

Produced by : Million Dollar Studios & MRP Entertainment - Pasilian Nazerath, Magesh Raj Pasilian, Yuvaraj Ganesan

PRO : Yuvaraj

Review :

"டூரிஸ்ட் ஃபேமிலி" அபிஷன் ஜீவிந்  இயக்கத்தில் மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் MRP என்டேர்டைன்மெண்ட் - பசிலியன் நாசரேத், மகேஷ் ராஜ்  பசிலியன், யுவராஜ் கணேசன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஷான் ரோல்டன். இந்த படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகலக்‌ஷ்மி, கமலேஷ் ஜெகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

ஈழத் தமிழரான சசிகுமார், தனது மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் கள்ளத்தனமாக இலங்கையில் இருந்து தமிழகம் வருவதோடு, சட்டவிரோதமாக சென்னையில் குடியேறி வசிக்க தொடங்குகிறார்கள்.  

 

இதற்கிடையே, சசிகுமாரின் குடும்பம் ராமேஸ்வரத்திற்கு வந்த அதே நாளில் அங்கு குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடக்க, இதற்கும் சசிகுமாரின் குடும்பத்திற்கும் தொடர்பு இருப்பதாக நம்பும் காவல்துறை, அந்த குடும்பத்தை பிடித்து வழக்கை முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது. அதன் பிறகு என்ன ஆனது என்பதை மேடை நாடகம் போல் சொல்வதே ‘டூரிஸ்ட் ஃபேமிலி’

 

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷன்கள் கொடுக்க கூடிய நடிகர்களில் ஒருவரான சசிகுமார், தனது வழக்கமான பணியை சிறப்பாக செய்திருக்கிறார். 

 

சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும்  சிம்ரனுக்கு பெரிய வேலை இல்லாதது ஒரு பக்கம் இருந்தாலும், சசிகுமாரை விட மூத்தவராக திரையில் தெரிபவர், அவரது மனைவிக்கான கதாபாத்திரத்தில் கொஞ்சம் கூட ஒட்டாமல் பயணித்திருக்கிறார்.

 

சசிகுமார் - சிம்ரன் தம்பதியின் மூத்த மகனாக நடித்திருக்கும் மிதுன் ஜெய்சங்கர் மற்றும் இளைய மகனாக நடித்திருக்கும் கமலேஷ் ஜெகன் இருவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். குறிப்பாக சிறுவன் கமலேஷ், தூங்கும் ரசிகர்களை தட்டி எழுப்பும் வேலையை அவ்வபோது செய்திருக்கிறார்.

 

படத்தின் ஆரம்பத்தில் வரும் யோகி பாபு அதன் பிறகு காணாமல் போய் விடுகிறார். பிறகு படம் முடியும் முன்பு தலை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். 

 

எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகலக்‌ஷ்மி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் செயற்கைத்தனமாக நடித்திருக்கிறார்கள்.

 

ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

 

அரவிந்த விஷ்வநாதன் ஒளிப்பதிவு மேடை நாடகத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

 

படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், திரைக்கதையில் பலம் மிக்க அம்சங்கள் பெரிதாக இல்லை என்பதை உணர்ந்து காட்சிகளை சுருக்கி, படத்தின் நீளத்தை குறைத்திருப்பது படத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் அபிஷன் ஜீவிந், ஈழத் தமிழர்களின் அவல நிலையை கதைக்கருவாக வைத்துக் கொண்டு திரைக்கதை அமைத்தாலும், அதை நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் செயற்கைத்தனமாக இருப்பதால் சிரிப்புக்கு பதில் தூக்கம் தான் வருகிறது.

 

முதல் பாதி முழுவதும் அக்காலத்து தூர்தர்ஷன் சீரியல் போல் பயணிக்க, இரண்டாம் பாதியில் சசிகுமாரின் மூத்த மகனின் காதல் தோல்வி, இளைய மகனின் குறும்புத்தனம் ஆகியவற்றை வைத்து பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் அபிஷன் ஜீவிந், இறுதியில் எதிர்பார்க்காத சுவாரஸ்யமான கிளைமாக்ஸ் மூலம் படத்தை முடித்திருப்பது மட்டுமே ரசிக்க கூடியதாக இருந்தாலும், அவர் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.

 

"டூரிஸ்ட் ஃபேமிலி" படத்திற்கு மதிப்பீடு 2.5/5

 

Verdict : ஒருமுறை பார்க்கலாம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA