சற்று முன்

சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |   

croppedImg_1895568865.jpeg

’செருப்புகள் ஜாக்கிரதை’ இணையத் தொடர் விமர்சனம்

Directed by : Rajesh Susairaj

Casting : Singampuli, Vivek Rajagopal, Aira, Lollu Saba Manohar

Music :LV Muththu & Ganesh

Produced by : S Group - Singaravelan

PRO : AIM

Review :

 

 

"செருப்புகள் ஜாக்கிரதை" ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் சிங்காரவேலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை எல்.வி. முத்து கணேஷ். இந்த படத்தில் சிங்கம்புலி, விவேக் ராஜ்கோபால், இரா அகர்வால்,  ஐரா, லொள்ளு சபா மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

ரூ.10 கோடி மதிப்புள்ள வைரங்களை வியாபாரி ஒருவரிடம் இருந்து திருடிக்கொண்டு வரும் நாகரத்தினம் என்பவர், போலீஸ் தன்னை பின் தொடர்வதை அறிந்துக் கொண்டு, வைரங்களை தனது செருப்பில் மறைத்து வைப்பதோடு, அந்த செருப்பை தனது ஆடிட்டரான சிங்கம்புலியிடம் கொடுத்து விடுகிறார். 

 

இதற்கிடையே, வைரங்கள் மறைத்து வைக்கப்பட்ட செருப்புகள் காணாமல் போகிறது. வைரத்தை பறிகொடுத்த வியாபாரி போலீஸ் உதவியுடன் தேடுகிறார். காணாமல் போன செருப்பில் வைரம் இருப்பதை தெரிந்துக் கொள்ளும் சிங்கம்புலி, தனது மகன் விவேக் ராஜகோபால் உடன் இணைந்து செருப்பை தேடுகிறார். செருப்பு இருக்கும் இடம் தெரிந்தாலும், அதை எடுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இறுதியில் வைரம் மறைத்து வைக்கப்பட்ட செருப்பு யார் கையில் கிடைத்தது? என்பதை வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்க...சிரிக்க...சொல்வது தான் ‘செருப்புகள் ஜாக்கிரதை’.

 

தமிழ் இணையத் தொடர்கள் என்றாலே ஆக்‌ஷன் டிராமா அல்லது கிரைம் திரில்லர் ஆகிய ஜானர்களாகவே மட்டுமே இருக்கும் நிலையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பார்த்து மகிழும்படியான முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகியிருக்கும் இந்த இணையத் தொடரின் 6 எப்பிசோட்களும் காமெடி ரணகளமாக இருக்கிறது.

 

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிங்கம்புலி, அவரது மகனாக நடித்திருக்கும் விவேக் ராஜகோபால் அவரது காதலி ஐரா என அனைத்து நடிகர், நடிகைகளும் போட்டி போட்டு பார்வையாளர்களுக்கு கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள்.

 

இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் காட்சிகளில் உள்ள நகைச்சுவை உணர்வுகளை சிந்தாமல், சிதறாமல் ரசிகர்களிடத்தில் கடத்தி தொடருக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

முதல் எப்பிசோட் சற்று மெதுவாக தொடங்கினாலும், அடுத்தடுத்த எப்பிசோட்கள் சிரிப்பு சரவெடியாக வெடித்து மக்களை மத்தாப்பூவாக மகிழ்விக்கிறது.

 

"செருப்புகள் ஜாக்கிரதை" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : சிரிப்பு சரவெடி

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA