சற்று முன்

'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |   

croppedImg_2013812643.jpeg

’எல் 2 : எம்புரான்’ விமர்சனம்

Directed by : Prithviraj Sukumaran

Casting : Mohanlal, Prithviraj Sukumaran, Manju Warier, Tovino Thomas, Abimanyu Singh, Saniya Aiyappan, Suraj Venjaramoodu

Music :Deepak Dev

Produced by : Aashirvad Cinemas, Sree Gokulam Movies, Lyca Productions - Subaskaran, Antony Perumbavoor Gokulam Gopalan

PRO : AIM

Review :

"எல் 2 : எம்புரான்" பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ், ஆசிர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் – சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர், கோகுலம் கோபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை தீபக் தேவ். இந்த படத்தில் குஞ்சன்கோ போபன், டொவினோ தாமஸ், லால், வினித் ஸ்ரீனிவாசன், நரேன், அபர்ணா பாலமுரளி கலையரசன், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

முதல்வர் மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் ஏற்படும் அரசியல் குழப்பங்களை தீர்த்து வைக்கும் மோகன்லால், முதல்வரின் மகன் டோவினோ தாமஸை புதிய முதல்வராக்கிவிட்டு கேரளாவில் இருந்து வெளியேறுவது போல் ‘லூசிஃபர்’ முடிவடையும். அதன் தொடர்ச்சியான இதில், மோகன்லால் மூலம் முதல்வரான டோவினோ தாமஸ், மதத்தை வைத்து அரசியல் செய்யும் தேசிய கட்சி ஒன்றுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதால் மீண்டும் கேரள அரசியலில் குழப்பம் ஏற்படுவதோடு, மாநிலத்திற்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது. இதனால், மீண்டும் கேரளா வரும் மோகன்லால், தனது அதிரடி நடவடிக்கை மூலம் பிரச்சனைகளை எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதையும், அவரது சர்வதேச மாஃபியா வாழ்க்கையையும் விரிவாக சொல்வது தான் ‘எல்2 : எம்புரான்’.

 

முதல் பாகத்தில் மாநில அரசியல் பேசிய இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன், இந்த இரண்டாம் பாகத்தில் தேசிய அரசியலுடன், கேரளா போன்ற மாநிலங்களை ஆக்கிரமிக்க திட்டமிடும் தேசிய கட்சிகளின் நடவடிக்கை மற்றும் மத அரசியலின் பாதிப்புகள் பற்றி பேசியிருப்பதோடு, அதை பான் இந்தியா ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் மிக பிரமாண்டமாகவும், ஸ்டைலிஷாகவும் கையாண்டிருக்கிறார்.

 

குரேஸி ஆப்ராம் என்கிற ஸ்டீபன் நெடும்பள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோகன்லாலுக்கு பெரிய அளவில் நடிக்கும் வாய்ப்பு இல்லை என்றாலும், படம் முழுவதும் ஸ்டைலிஷாகவும், மாஸாகவும் வலம் வருகிறார்.  

 

முதல் பாகத்தில் மோகன்லாலின் சேவகனாக ஒருசில சண்டைக்காட்சிகளில் எண்ட்ரிக்கொடுக்கும் பிரித்விராஜ் சுகுமார், சையத் மசூத் என்ற கதாபாத்திரம் மூலம் அழுத்தமான கதை ஒன்றை அமைத்து, அதன் மூலம் தனது கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் மனதில் அழுத்தமாக பதிய செய்திருக்கிறார்.

 

மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், அபிமன்யு சிங், இந்திரஜித் சுகுமாரன், கிஷோர், சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக, தங்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், ஒவ்வொரு ஃபிரேம்களையும் பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் வெளிநாட்டு காட்சிகளை கையாண்ட விதம் ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது.

 

இசையமைப்பாளர் தீபக் தேவின் பின்னணி இசை மாஸான காட்சிகளுக்கு உயிரோட்டம் அளித்தாலும், சில இடங்களில் அதிக்கப்படியான சத்தத்துடன் வழகமான மசாலா படங்களை நினைவூட்டும் வகையிலும் பயணித்துள்ளது.

 

கதாபாத்திரங்களின் அறிமுகமே சுமார் ஒரு மணி நேரத்தை ஆட்கொண்டாலும், முழுப்படமும் மூன்று மணி நேரமாக இருந்தாலும், படம் தொய்வின்றி நகரும்படி காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் அகிலேஷ் மோகன்.

 

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தோடு தொடங்கும் கதையை, ‘லூசிஃபர்’-ன் தொடர்ச்சியாக கையாண்ட விதம், மோகன்லாலின் நிழல் உலகத்தையும், அதன் நடவடிக்கைகளையும் காட்சிப்படுத்திய விதம் மற்றும் கதாபாத்திரங்களை கையாண்ட விதம் என படம் முழுவதையும் மிக பிரமாண்டமாக கையாண்டிருக்கும் இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன், தற்போதைய கேரள அரசியல் மற்றும் தேசிய அரசியலையும், மத பிரச்சனைகளையும் மிக சாமர்த்தியமாக கையாண்டு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார்.

 

படத்தின் செலவுகள் அனைத்தும் காட்சிகளில் தெரிவது போல் ஹாலிவுட் தரத்தில் படமாக்கியிருந்தாலும், உள்ளூர் ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக வழக்கமான ஹிரோயிஷ சண்டைக்காட்சிகளை வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.

 

முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியால் இரண்டாம் பாகத்தை பான் இந்தியா கதையாகவும், சர்வதேச தரத்திலும் சொல்ல முயற்சித்தி அதில் இயக்குநர் பிரித்விராஜ் சுகுமார் வெற்றி பெற்றிருந்தாலும், திரைக்கதையாசிரியர் முரளி கோபியின் பலவீனமான திரைக்கதை பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த தவறியிருக்கிறது.

 

"எல் 2 : எம்புரான்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : வித்தியாசமான கதைக்களம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA