சற்று முன்

அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |   

croppedImg_921535558.jpeg

‘லெக் பீஸ்’ விமர்சனம்

Directed by : Srinath

Casting : Manikandan, Karunakaran, Ramesh Tilak, Srinath, Yogi Babu,V.T.V Ganesh , Ravi Mariya,Mottai Rajendran,, Mime gobi, John Vijay, Saravana subbaiah, G.marimuthu,Chaams,Madhusudhan Rao

Music :Bjorn Surrao

Produced by : Hero Cinemas - C.Manikandan

PRO : Sathish Kumar

Review :

"லெக் பீஸ்" எஸ்.ஏ.பத்மநாபன் இயக்கத்தில் ஹீரோ சினிமாஸ்  - C.மணிகண்டன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை பிஜோர்ன் சுர்ரா. இந்த படத்தில் மணிகண்டன், கருணாகரன், ரமேஷ் திலக், ஸ்ரீநாத், யோகி பாபு, விடிவி கணேஷ், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, ஜி.மாரிமுத்து, மதுசூதன ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

சாலையில் கிடைக்கும் 2000 ரூபாய் நோட்டு ஒன்றின் மூலம் நண்பர்களாகும் மணிகண்டன், கருணாகரன், ரமேஷ் திலக், ஸ்ரீநாத் ஆகிய நான்கு பேருக்கும், அதே 2000 ரூபாய் நோட்டின் மூலம் பிரச்சனையும் வருகிறது. அந்த பிரச்சனையில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா ? இல்லையா ? என்பதை நகைச்சுவையாக சொல்வதே ‘லெக் பீஸ்’.

 

குயில் என்ற கதாபாத்திரத்தில் சவுரி முடி வியாபாரம் செய்பவராக நடித்திருக்கும் மணிகண்டன், கிளி ஜோதிடராக நடித்திருக்கும் கருணாகரன், பேய் விரட்டுபவராக நடித்திருக்கும் ஸ்ரீநாத், பலகுரல் கலைஞராக நடித்திருக்கும் ரமேஷ் திலக் என நான்கு பேரும் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தின் கதாபாத்திரங்கள் போல் பசியோடு சுற்றினாலும், ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்கள். 

 

படம் முழுவதும் வரும் யோகி பாபு, வழக்கமான பாணியின் மூலம் சிரிக்க வைத்தாலும், தன் மனைவி குறித்து காமெடி என்ற பெயரில் பேசும் வசனங்கள் அனைத்துமே அநாகரிகமானதாக இருக்கிறது. 

 

விடிவி கணேஷ், ரவி மரியா, நான் கடவுள் ராஜேந்திரன், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, ஜி.மாரிமுத்து, மதுசூதன ராவ் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் படத்தை தாங்கிப்பிடித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் மாசாணியின் கேமரா காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறது.

 

இசையமைப்பாளர் பிஜோர்ன் சுர்ராவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கமர்ஷியல் அம்சங்களோடு பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

படத்தொகுப்பாளர் இளையராஜா.எஸ், ஆரம்பத்தில் சற்று தடுமாறியிருந்தாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதையில் இருக்கும் திருப்பங்கள் மூலம் சுவாரஸ்யமாகவும், வசனங்களில் இருக்கும் நகைச்சுவை மூலம் கலகலப்பாகவும் படம் நகரும்படி காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.

 

கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் எஸ்.ஏ.பத்மநாபன்,  கிரைம் திரில்லர் ஜானரை நகைச்சுவை பாணியில் சொல்ல முயற்சித்திருப்பதோடு, நகைச்சுவை நட்சத்திர பட்டாளத்தைக் கொண்டு நகைச்சுவை திருவிழாவையும் நடத்தியிருக்கிறார்.

 

நடித்திருப்பதோடு படத்தை இயக்கவும் செய்திருக்கும் ஸ்ரீநாத், ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும், அவர்களை சரியான முறையில் கையாண்டு பார்வையாளர்களை சிரிக்க வைத்திருக்கிறார். படத்தின் முதல் பாதியின் வேகம் சற்று குறைவாக இருந்தாலும், இரண்டாம் பாதி படம் விறுவிறுப்பாக பயணிப்பதோடு, பார்வையாளர்களை வாய்விட்டு சிரிக்க வைத்து மகிழ்விக்கிறது.

 

2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருக்கும் போது தொடங்கும் கதை, 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெற்ற காலக்கட்டத்தில் முடிவதையும், அதைச் சார்ந்த சம்பவங்களை முழுக்க முழுக்க நகைச்சுவையாக வடிவமைத்து பார்வையாளர்களை வஞ்சகம் இல்லாமல் சிரிக்க வைத்திருக்கிறார்கள். எனவே, இந்த படத்திற்கு லெக் பீஸ் என்று தலைப்பு வைத்ததற்குப் பதில் ’2000 ரூபாய் நோட்டு’ என்று தலைப்பு வைத்திருக்கலாம்.

 

"லெக் பீஸ்" படத்திற்கு மதிப்பீடு 3.5/53

 

Verdict : நல்ல பொழுதுபோக்கு நகைசுவை படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA