சற்று முன்

ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் 'டியர் ரதி'!   |    பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள 'சினம் கொள்' பாடல்   |    23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளை குவித்த‌ ஹாலிவுட் திரைப்படம் 'டெதர்'!   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்!   |    டிசம்பர் 19 அன்று Sun NXT-இல் பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’!   |    நடிகர் விது நடித்திருக்கும் புதிய பட டைட்டில் லுக் & ப்ரோமோ வீடியோ வெளியீடு!   |    ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது!   |    “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!   |    தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம் - 4,000 கோடி ரூபாய் முதலீடு!   |    மீண்டும் இணையும் '96' பட புகழ் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன்   |    45 நாட்களில் நிறைவடைந்த 'கிராண்ட் பாதர்' ஃபேண்டஸி எண்டர்டெயினர்!   |    இந்திய திரைத்துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் புதிய தளம் அறிமுகம்!   |    அர்ஜுன் தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், இனிதே துவங்கியது!   |    இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது - நடிகர் கார்த்தி   |    அசத்தலான 'மொய் விருந்து' பட டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ZEE5 வழங்கும் விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமா!   |    பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |   

croppedImg_1724699371.jpeg

’கிங்ஸ்டன்’ விமர்சனம்

Directed by : Kamal Prakash

Casting : GV Prakash Kumar, Divya Bharathi, Chetan, Azhagam Perumal, Kumaravel, Sabumon Abdusamad, Antony, Rajesh Balachandiran, Arunachaleshwaran PA, Praveen, Fire Karthik

Music :GV Prakash Kumar

Produced by : ZEE Studios & Parallel Universe Pictures - GV Prakash Kumar, Umesh KR Bansal, Bhavani Sri

PRO : Yuvaraj

Review :

"கிங்ஸ்டன்" கமல் பிரகாஷ் இயக்கத்தில் ZEE ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல்   யூனிவெர்ஸ் பிகிபிக்சர்ஸ் - இசை ஜி.வி.பிரகாஷ், உமேஷ் KR பன்சால் , பவானி ஸ்ரீ தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, அழகம்பெருமாள், சேத்தன், குமரவேல், சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன்.பி.ஏ, பிரவீன், பயர் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் கடற்கரை கிராம மக்கள் மீன்பிடி தொழிலை நம்பியிருந்தாலும், அவர்களால் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியவில்லை. காரணம், பேராசை பிடித்த ஒருவரது ஆன்மா அந்த கடலை ஆட்கொண்டு அங்கு வருபவர்களை கொன்று குவிப்பது தான். இதனால், அந்த ஊர் மக்கள் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதோடு, கிடைக்கும் வேலைகளை செய்கிறார்கள். சில இளைஞர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இந்த இளைஞர்களில் ஒருவரான நாயகன் ஜி.வி.பிரகாஷும், ஆரம்பத்தில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டாலும், அதன் உண்மையான பின்னணியை அறிந்துக் கொண்டு அதில் இருந்து விலகுவதோடு, தனது கிராம மக்கள் இழந்த வாழ்வாதாரதை மீட்க முடிவு செய்கிறார்.

 

அதன்படி, மர்மம் சூழ்ந்த அந்த கடலுக்குள் சென்று பிரச்சனையை தீர்க்க நினைப்பவர், தனது நண்பர்களுடன் கடலுக்குள் செல்ல, அவர் உயிருடன் திரும்பினாரா ? அல்லது ஊர் நம்புவது போல் பிணமாக திரும்பினாரா ? என்பதை ஃபேண்டஸியாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘கிங்ஸ்டன்’.

 

மீனவ கிராமத்து இளைஞராக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், தோற்றம் மற்றும் நடிப்பு இரண்டிலும் எந்தவித மாற்றமும் இன்றி வழக்கம் போல் நடித்திருக்கிறார். இயக்குநர் சொன்னதை மட்டுமே செய்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், அதையும் தனக்கு தெரிந்த மாதிரி, ஒரே மாதிரி செய்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் திவ்ய பாரதிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், அவரை திணிப்பதற்காகவே சில காட்சிகள் படத்தில் திணிக்கப்பட்டிருக்கிறது.

 

அழகம்பெருமாள், சேத்தன், குமரவேல், வில்லனாக நடித்திருக்கும் சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன்.பி.ஏ, பிரவீன், பயர் கார்த்திக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

கிரீன் மேட் படங்கள் என்றாலே கோகுல் பினாய் தான் என்ற முத்திரை குத்தப்பட்ட ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், கடலின் அழகு, ஆபத்து மற்றும் பிரமாண்டம் என அனைத்தையும் திரையில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார், ஆனால் அனைத்தும் கிரீன் மேட் மூலம் கொண்டு வர வேண்டும் என்பதால், அவரது முயற்சி தோல்வியடைந்திருக்கிறது.

 

நடிகராக சொதப்பி வந்தாலும் இசையமைப்பாளராக சாதித்து வந்த ஜி.வி.பிரகாஷ் குமார், தனது சொந்த படத்தின் இசையில் இப்படி சொதப்பியிருப்பது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கிறது. பாடல்கள் திணிக்கப்பட்டவையாக இருப்பதால் ரசிக்க முடியவில்லை. பின்னணி இசை பெரும் சத்தத்தோடு காதை கிழித்து தலைவலியை ஏற்படுத்தும்படி அமைந்திருக்கிறது.

 

படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், கதையில் இருக்கும் திகில் முக்கியமா? அல்லது திகில் பின்னணியில் இருக்கும் திருப்பங்கள் முக்கியமா? என்ற குழப்பத்தோடு காட்சிகளை தொகுத்திருப்பதால், சஸ்பென்ஸ்கள் கூட திரைக்கதையில் எந்தவித சுவாரஸ்யத்தையும் கொடுக்காமல் சாதாரணமாக கடந்துவிடுகிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் கமல் பிரகாஷ், கடலில் நடக்கும் திகில் கதையை ஃபேண்டஸியாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அழுத்தமான கதை மற்றும் பலமான திரைக்கதை இல்லாததால், அவரது ஃபேண்டஸி மற்றும் திகில் யோசனைகள் பார்வையாளர்களிடம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

 

கிராபிக்ஸ் மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கும் அமானுஷ்ய உருவம், கடலில் நடக்கும் ஆவிகளுடனான மோதல் ஆகியவற்றின் மூலம் படக்குழுவின் உழைப்பு தெரிந்தாலும், அந்த இடங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளின் சொதப்பல் படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்திருக்கிறது.

 

"கிங்ஸ்டன்" படத்திற்கு மதிப்பீடு 2/5

 

Verdict : சுமார்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA