சற்று முன்

டிரெய்லர் மட்டுமே வைத்து என்னுடைய கதாபாத்திரம் யூகிக்க வேண்டாம் - நடிகை ரெஜினா காசண்ட்ரா!   |    துல்கர் சல்மானின் 13 வருட சினிமா பயணம், சிறப்பிக்கும் பொருட்டு 'காந்தா' பட முதல் பார்வை போஸ்டர்   |    விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற 'தென் சென்னை' டென்ட்கொட்டா ஓ.டி.டி.யில்!   |    விஜய் சாரின் நடனத்தில் ஒரு தனி கிரேஸ் இருக்கும். அதை பார்க்கும் போது நமக்கும் ஆட தோன்றும்   |    தமிழக மீனவர்களின் உணர்வை பிரதிபலிப்பதால் 'தண்டேல்' தமிழகத்திலும் மாபெரும் வெற்றி பெரும்!   |    ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ருத்ரா கதாப்பாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது!   |    #STR49 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது   |    கருத்தாக சொல்லாமல் வாழ்வியலையும் சேர்த்து சொன்னதே ‘குடும்பஸ்தன்’ படத்தின் வெற்றி   |    ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு, அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 'பறந்து போ'   |    அசோக் செல்வனின் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' SUN NXT OTT தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீமாகிறது   |    இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு   |    தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் திரை உலகில் பீஷ்மரை போன்றவர் - நடிகர் கார்த்தி   |    வேகமாக உருவாகி வரும் அரசியல் திரில்லர் திரைப்படம் 'கராத்தே பாபு'   |    பிப்ரவரி 28, 2025 அன்று பிரமாண்டமாக, திரையரங்குகளில் வெளியாகும் 'அகத்தியா'   |    ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகும் ரொமாண்டிக் திரில்லர் 'தருணம்'   |    ZEE5 ல் தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீமாகவுள்ளது 'தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்'   |    'அகத்தியா' படத்தின் மூன்றாவது சிங்கிள், 'செம்மண்ணு தானே', பாடல் வெளியிடப்பட்டது   |    சாதனை படைத்துள்ள அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் 'ஒன்ஸ்மோர்' பட பாடல்!   |    ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கோலிவுட் நட்சத்திரம் ஸ்ருதிஹாசனுக்கு குவியும் வாழ்த்துக்கள்!   |    சசிகுமாரின் 'மை லார்ட் ' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |   

croppedImg_929030296.jpeg

’ரிங் ரிங்’ விமர்சனம்

Directed by : Sakthivel

Casting : Vivek Prasanna, Arjunan, Daniel Annie Bop, Praveen Raja, Sakshi Agarwal, Swayam Sidha, Jamuna, Sahana

Music :Vasanth Isaipettai

Produced by : Jegan Narayanan

PRO : Sakthi Saravanan

Review :

"ரிங் ரிங்" சக்திவேல் இயக்கத்தில் ஜெகன் நாராயணன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை வசந்த் இசைப்பேட்டை. இந்த படத்தில் விவேக் பிரசன்னா, ஸ்வயம் சித்தா, டேனியல் அன்னி போப், ஜமுனா , பிரவீன் ராஜா, சாக்‌ஷி அகர்வால், அர்ஜுனன், சஹானா ஜோடிகள் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

நான்கு நண்பர்கள் தங்களது இணைகளுடன் பிறந்தநாள் நிகழ்வு ஒன்றில் சந்திக்கிறார்கள். கேலி, கிண்டல் என்று ஜாலியாக இருக்கும் அவர்கள் திடீரென்று தங்களது செல்போன்களை வைத்து ஒரு விளையாட்டு விளையாட முடிவு செய்கிறார்கள். அதன்படி, அனைவரும் தங்களது செல்போன்களை மேஜை மீது வைக்க வேண்டும். யார் செல்போனில் அழைப்புகள் வந்தாலும் அதை ஸ்பீக்கரில் போட்டு அனைவரும் கேட்பது போல் பேச வேண்டும். அதேபோல், மெசஜ் மற்றும் வாட்ஸ்-அப் மெசஜ் என எது வந்தாலும் அதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

 

மனிதர்களின் மனங்களில் மறைந்திருக்கும் பல ரகசியங்கள் அவர்களது செல்போன்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில் ஒருவரது செல்போனை மற்றொருவர் பார்த்தால் என்னவாகும்?, அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அனைவரும் சிக்குகிறார்கள். அவர்கள் எதிர்பார்க்காத அவர்களுடைய ரகசியங்கள் மற்றவர்களுக்கு தெரிய வர, அதனால் ஏற்படும் பிரச்சனைகளால் நண்பர்களின் வாழ்க்கையில் எத்தகைய விளைவுகள் ஏற்படுகிறது, அதில் இருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்பதை திக்...திக்...பாணியில் சொல்வதே ‘ரிங் ரிங்.

 

விவேக் பிரசன்னா - ஸ்வயம் சித்தா, டேனியல் அன்னி போப் - ஜமுனா , பிரவீன் ராஜா - சாக்‌ஷி அகர்வால், அர்ஜுனன் - சஹானா ஜோடிகள் தான் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். நான்கு ஜோடிகளும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் ஒரு உணவு மேஜையில், முழுக்க முழுக்க வசனக் காட்சிகளாக இருந்தாலும், நடிகர்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பால், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் கடக்கிறது. செல்போன்கள் மூலம் அனைவரது ரகசியங்களும் கசியும் போது, அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முழிப்பது, சமாளிப்பது என நேர்த்தியான எக்ஸ்பிரஷன்கள் மூலம் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

 

ஒரு வீட்டுக்குள் அதிலும் பெரும்பாலான காட்சிகள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நடந்தாலும், சலிப்பு ஏற்படாத வகையில் அந்த காட்சிகளை படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசாந்த்,DFTech.

 

இசையமைப்பாளர் வசந்த் இசைப்பேட்டையின் இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டே இருந்தாலும், அவர்களது ரியாக்‌ஷன்கள் மற்றும் அவற்றின் மூலம் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை கச்சிதமாக தொகுத்து படத்தை விறுவிறுப்பாக பயணிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பி.கே.

 

எழுதி இயக்கியிருக்கும் சக்திவேல், சிறு யோசனையை வைத்துக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட இடத்தில் முழு படத்தையும் நேர்த்தியாக இயக்கியிருக்கிறார்.

 

நண்பர்களின் செல்போன்கள் மூலம் கசியும் ரகசியங்களின் பின்னணி என்னவாக இருக்கும்? மற்றும் அதனால் எப்படிப்பட்ட பிரச்சனைகள் வெடிக்கப் போகிறது? போன்ற கேள்விகளை பார்வையாளர்கள் மனதில் எழுப்பி படத்தை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்திச் செல்லும் இயக்குநர் சக்திவேல், இறுதியில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கி, ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருக்க வேண்டும், என்ற மெசஜுடன் படத்தை முடித்திருக்கிறார்.

 

"ரிங் ரிங்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : ஒருமுறை பார்க்கலாம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA