சற்று முன்

‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |    துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு – 2026 ஆகஸ்டில் பான்-இந்தியா வெளியீடு   |    சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் ‘பவர் பேட்டா’ டைட்டில் போஸ்டர் வெளியீடு!   |    “டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்   |    “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு   |    கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்   |    ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!   |    அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!   |    திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!   |    மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!   |    வெற்றிமாறன், விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்ட ராதிகாவின் “காலனி” ஃபர்ஸ்ட் லுக்!   |    கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |    பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |   

croppedImg_334986125.jpeg

’மெட்ராஸ்காரன்’ விமர்சனம்

Directed by : Vaali Mohan Das

Casting : Shane Nigam, Kalaiyarasan, Niharika Konidela, Aishwarya Dutta, Karunas, Pandiarajan, Lallu

Music :Sam CS

Produced by : SR Productions - B. Jagadish

PRO : AIM

Review :

"மெட்ராஸ்காரன்" வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் எஸ்.ஆர் புரொடக்‌ஷன்ஸ் – பி.ஜெகதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சாம்.சி.எஸ். இந்த படத்தில் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா, பாண்டியராஜன், கீதா கைலாசம், கருணாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

சென்னையைச் சேர்ந்த நாயகன் ஷேன் நிகம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்தில் தனது திருமணத்தை நடத்த விரும்புகிறார். அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், எதிர்பாராமல் நடக்கும் சிறிய விபத்து மூலம் ஷேன் நிகமின் வாழ்க்கை நினைத்து பார்க்க முடியாதபடி தடம் மாறுகிறது. அது எப்படி?, அதனால் அவர் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார், இறுதியில் அதில் இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதை ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் சொல்வதே ‘மெட்ராஸ்காரன்’.

 

தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் மலையாள நடிகர் ஷேன் நிகம், முதல் படத்திலேயே ஆக்‌ஷன் கதைக்களத்தை அசால்டாக கையாண்டிருக்கிறார். அத்தைகளிடம் ஐஸ் வைத்து பேசுவது, அம்மாவிடம் பாசம் காட்டி பேசுவது, காதலியிடம் கெஞ்சி கொஞ்சுவது என்று வயதுக்கு ஏற்ப துறுதுறு என்று நடித்திருப்பவர், ஆக்‌ஷன் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். ஆனால், என்ன அவரது வசன உச்சரிப்பில் அக்மார்க் கேரளத்து வரவு என்பது அப்பட்டமாக தெரிகிறது.

 

நாயகியாக நடித்திருக்கும் நிஹாரிகாவின் ஒரு வார்த்தை தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம் என்றாலும் படத்தில் அவரது திரை இருப்பு என்பது மிக மிக குறைவே. அதை சமாளிப்பதற்காகவே அம்மணியை ‘அலைபாயுதே’ படத்தின் பாடல் ஒன்றில் சில நிமிடங்கள் ஆட வைத்து ஆறுதலடைய செய்திருக்கிறார்கள்.

 

ஆண்டி வில்லன் என்று சொல்லக்கூடிய நல்லவனா?, கெட்டவனா?  என்ற கேள்வியை எழுப்பும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

 

கலையரசனின் மனைவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, ஒரு சில காட்சிகளில் வந்தாலும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

 

நாயகனின் தாய் மாமனாக நடித்திருக்கும் கருணாஸ், அப்பாவாக நடித்திருக்கும் பாண்டியராஜன், அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், அத்தையாக நடித்திருக்கும் தீபா, நண்பராக நடித்திருக்கும் லல்லு என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் தங்களது பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

 

சாம்.சி.எஸ் இசையில் திருமண பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக மட்டும் இன்றி கொண்டாட்ட மனநிலைக்கு ஏற்றவாறும் இருக்கிறது. பின்னணி இசை கொஞ்சம் சத்தமாக இருந்தாலும், வேகமான திரைக்கதைக்கும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் வீரியம் சேர்க்கிறது.

 

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமாரின் கேமரா காட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து பயணித்திருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளை மிரட்டலாக காட்சிப்படுத்தியிருக்கிறது. 

 

படத்தொகுப்பாளர் ஆர்.வசந்தகுமார், சண்டைப்பயிற்சி இயக்குநர், கலை இயக்குநர் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் வாலி மோகன் தாஸ், சிறு விசயத்தை வைத்துக்கொண்டு திரில்லர் ஆக்‌ஷன் ஜானரை ராவான காட்சிகள் மூலம் மிரட்டலாக கொடுத்திருக்கிறார்.

 

படத்தின் மிக முக்கியமானது ஆக்‌ஷன் மற்றும் எமோஷனல் என்றாலும் ஆக்‌ஷன் காட்சிகள் ஈர்க்கும் அளவுக்கு எமோஷனல் காட்சிகள் அவ்வளவாக ஈர்க்காதது திரைக்கதையை சற்று தொய்வடைய செய்கிறது. இருந்தாலும், நடந்த தவறுக்கு காரணம் தான் இல்லை, என்பதை தெரிந்துக் கொள்ளும் நாயகன், அதன் பின்னனி குறித்து அறிவதற்கான முயற்சியில் ஈடுபடும் போது, படம் வேகம் எடுப்பது மட்டும் இன்றி, பார்வையாளர்களுக்கு பரபரப்பான திரில்லர் அனுபவத்தையும் கொடுக்கிறது.

 

கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, நடிகர்கள் தேர்வு, ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்த விதம்,  திரைக்கதை மற்றும் காட்சிகளை கையாண்ட விதம் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை திருப்திப்படுத்தியிருக்கும் இயக்குநர் வாலி மோகன் தாஸ், எந்த கதையாக இருந்தாலும் தனது மேக்கிங் மூலம் கவனம் ஈர்த்துவிடுவார் என்பதை நிரூபித்திருக்கிறார். 

 

"மெட்ராஸ்காரன்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : நிச்சயம் ரசிகர்களை கவரும்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA