சற்று முன்

மகளிர் தினத்தில் வெளியான ‘பேட்ரியாட்’ நயன்தாரா கேரக்டர் போஸ்டர்!   |    ‘காளிதாஸ் 2’ ஏப்ரல் 3 வெளியீடு… பரத் நடிக்கும் திரில்லர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    விஜய்குமார் – கயல் ஆனந்தி இணையும் ‘அறிவு’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்   |    150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!   |    ரசிகர்களை கவர்ந்த ஆக்‌ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!   |    நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!   |    பண மிஷின் ரகசியம்… ‘கான் சிட்டி’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ஸ்ருதிஹாசன் குரலில் ‘பவழ மல்லி’ – சாய் அபயங்கர் இசையில் புதிய பாடல்!   |    'ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடும், அந்த நிறைவை ‘தடயம்’ கொடுத்தது' – சமுத்திரகனி பெருமிதம்   |    மார்ச் 13 முதல் ZEE5-ல் ‘பூக்கி’ காதலும் நகைச்சுவையும் கலந்த ரொமான்டிக் காமெடி ஸ்ட்ரீமிங்!   |    நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |   

croppedImg_507459531.jpeg

’சீசா’ விமர்சனம்

Directed by : Guna Subramaniyam

Casting : Natty Natraj, Nishanth Ruso, Padini Kumar, Murthy, Rajanayagam, Master Rajanayagam, Nizhalgal Ravi, Asdhesh Bala

Music :Saran Kumar

Produced by : Viyidial Studios - Dr.K.Senthil Velan

PRO : Karthick

Review :

"சீசா" குணா சுப்பிரமணியம் இயக்கத்தில் விடியல் ஸ்டுடியோஸ் – டாக்டர்.கே.செந்தில் வேலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும். இந்த படத்திற்கு இசை சரண்குமார். இந்த படத்தில் நட்டி நட்ராஜ், நிஷாந்த் ரூசோ, பாடினி குமார், மூர்த்தி, ஆதேஷ் பாலா, மாஸ்டர் ராஜநாயகம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

பங்களா வீடு ஒன்றில் வேலை செய்யும் ஆண் பணியாளர் கொலை செய்யப்படுகிறார். அந்த வீட்டு முதலாளியான தொழிலதிபர் நிஷாந்த் ரூசோ மற்றும் அவரது மனைவி பாடினி குமார் மாயமாகி விடுகிறார்கள். வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமராவின் ஹார்ட்டிஸ்க்கும் காணாமல் போய்விடுகிறது. கொலைக்கான பின்னணியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜ், மாயமான தம்பதியை தேடுகிறார். திடீரென்று ஒருநாள் மாயமான நிஷாந்த் ரூசோ மட்டும் தனது வீட்டுக்கு வருவதோடு, அவருடன் இருந்த பாடினி பற்றி எதுவும் தெரியாத மனநிலையில் இருக்கிறார். 

 

பாடினியின் நிலை கேள்விக்குறியாக இருப்பதால், வேறு பாணியில் நட்டி நட்ராஜ் தனது விசாரணையை மேர்கொள்ளும் போது, பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது. அந்த உண்மைகள் மூலம் பாடினிக்கு என்ன ஆனது? என்பதையும் வீட்டு வேலைக்காரரின் கொலைக்கான காரணத்தையும், பல திருப்பங்களுடன் கூடிய கிரைம் திரில்லர் படமாக மட்டும் இன்றி  மக்களுக்கான விழிப்புணர்வு பாடமாகவும் சொல்வது தான் ‘சீசா’.

 

தொடர்ந்து பல படங்களில் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து வரும் நட்டி நட்ராஜ், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

 

மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் நிஷாந்த் ரூசோ, ஒரே கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் பாராட்டும்படி நடித்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் பாடினி, குடும்ப பாங்கான முகத்தோடு அளவான அழகு மற்றும் நடிப்பு என்று கவனம் ஈர்ப்பவர், பாடல் காட்சிகளில் தன்னால் கவர்ச்சியாகவும் நடித்து கவனம் ஈர்க்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார். 

 

நிஷாந்த் ரூசோவின் நண்பராக நடித்திருக்கும் மூர்த்தி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆதேஷ் பாலா, வீட்டு வேலைக்காரராக நடித்திருக்கும் மாஸ்டர் ராஜநாயகன், பாடினியின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குநர் அரவிந்தராஜ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

 

காதல் பாடல், ஆன்மீக பாடல் என்று இரண்டிலும் அசத்தியிருக்கும் இசையமைப்பாளர் சரண்குமார், பின்னணி இசையையும் நிறைவாக கொடுத்திருக்கிறார்.

 

ஒளிப்பதிவாளர்கள் பெருமாள் மற்றும் மணிவண்ணன் திரைக்கதைக்கு ஏற்ப பணியாற்றியிருக்கிறார்கள். 

 

கிரைம் திரில்லர் ஜானர் என்றாலும் அதன் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கும் விழிப்புணர்வு மெசஜை படத்தொகுப்பாளர் வில்சி ஜெ.சசி, பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

 

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை விட, சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தகைய ஆபத்தானவர்கள் என்பதை தன் கதையின் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் தயாரிப்பாளர் 

டாக்டர்.கே.செந்தில் குமார், சிறிய வேடம் ஒன்றில் தடுமாற்றம் இன்றி நடித்திருக்கிறார்.

 

திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் குணா சுப்பிரமணியம், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு படமாக இருந்தாலும் அதை கிரைம் திரில்லர் ஜானரில் மட்டும் இன்றி காதல் காட்சிகளையும் சேர்த்து கலர்புல்லான கமர்ஷியல் படமாகவும் கொடுத்திருக்கிறார்.

 

பல திருப்பங்களுடன் பயணிக்கும் திரைக்கதை மற்றும் அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பு மிக்க காட்சிகளுடன் படத்தை சுவாரஸ்யமாக  நகர்த்திச் செல்லும் இயக்குநர் குணா சுப்பிரமணியம், கதை சொல்லில் காட்டியிருக்கும் வித்தியாசம் மற்றும் மேக்கிங் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

எம்பாமிங் செய்யப்பட்ட சடலம், குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு என்ன ஆகும்? உள்ளிட்ட சில கேள்விகளுக்கு சரியான விடை சொல்லாமல் விட்டிருந்தாலும், இரண்டாம் பாகத்திற்கான ஒரு லீடாக அதை வைத்திருக்கும் இயக்குநர் குணா சுப்பிரமணியம் கிரைம் திரில்லர் மற்றும் விழிப்புணர்வு இரண்டையும் சரியான அளவில் கையாண்டு கொடுத்திருக்கிறார்.

 

"சீசா" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : இளைஞர்களை சிந்திக்க வைக்கும் படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA