சற்று முன்

ஜனவரி 15 அன்று பூஜையுடன் தொடங்குகிறது பிரபாஸின் - சலார்   |    தமிழக முதல்வர் வெளியிடும் பட பாடல்!   |    எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகர் கலையரசன் !   |    அப்பா,மகளுக்கு கிடைத்தபாக்கியம்! இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா   |    விஜய் விரைவில் கட்சி துவங்கப்போகிறாரா? அவர் சொல்லுக்கு அர்த்தம் என்ன   |    விஜய்க்காக தயார் செய்த கதையில் சிவகார்த்திகேயன்   |    சந்தானம் நடிக்கும் தந்தை-மகன் சென்டிமென்ட் படம்   |    விஜய்யுடன் ஆண்ட்ரியாவின் மாஸ்டர் பட புகைப்படம் வைரல்   |    கோல்டன் க்ளோப் விருதுக்கு போட்டியிடும் ‘சூரரைப் போற்று’   |    பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆரியை கார்னர் செய்யும் ரியோ - கடுப்பில் ரசிகர்கள்   |    ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகர் தனுஷ்   |    என் முன்னாடி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது - ஷகிலா   |    இளம் நடிகைக்கு மாலில் நேர்ந்த கொடுமை!   |    கால்ஷீட் கேட்கும் இயக்குநர்களை கதறவிடும் ஹரிஷ் கல்யாண்   |    சித்ரா தற்கொலைக்கு காரணம் பிரபல தொகுப்பாளரா?   |    சைக்கோ கிரைம் திரில்லர் படத்தின் மூலம் இணையப்போகும் ஸ்ரீகாந்த், வெற்றி   |    சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட திரிஷா படப்பாடல்   |    சித்ரா கணவர் ஹேம்நாத் திடீர் கைது - விசாரணையில் கசிந்த தகவல்   |    திண்டுக்கல்லில் மிஸ்கின் படத்திற்காக அமைக்கப்படும் பிரம்மாண்டமான செட்   |    ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய படம்   |   

croppedImg_178769968.jpeg

'காலேஜ் குமார்' திரை விமர்சனம்

Directed by : Hari Santhosh

Casting : Prabhu, Ragul Vijay, Madhubala, Priya Vatlamani, Nazar, Manobala

Music :Kuthup E Krupa

Produced by : MR Pictures - L Padmanabha

PRO : Diamond Babu

Review :

சரியாக படிக்க முடியாமல், அலுவலகம் ஒன்றில் பியூனாக பணிபுரியும் பிரபு, தனது நண்பருடன் போட்ட சவாலுக்காக தனது மகனை, படிப்பில் முதலாவதாக வர வைக்க வேண்டும், என்று சிறு வயது முதல் அவருக்கு படிப்பை தவிர வேறு எதிலும் ஆர்வம் போகக்கூடாது, என்று அழுத்தம் கொடுத்து வருகிறார். அப்பாவின் ஆசைக்காக, படிப்பது போல நடிக்கும் ராகுல் விஜய், ஒரு கட்டத்தில் கல்லூரியில் இருந்தே நீக்கப்படுகிறார். இதனால், மகன் மீது பிரபு கோபப்பட, அவரது மகனோ, “நான் உங்களுக்கு பணம் கட்டுகிறேன், நீங்கள் படித்து முதலிடத்திற்கு வர முடியுமா?” என்று கேட்க, பிரபு அதை ஏற்று கல்லூரியில் படிக்க தொடங்குகிறார். இறுதியில் அவர் சவாலில் ஜெயித்தாரா இல்லையா, என்பது தான் கதை.

 


 
படத்தின் ஹீரோ ராகுல் விஜய், தமிழிக்கு அறிமுகம் என்றாலும், முதல் படம் என்பது தெரியாத வகையில் கச்சிதமாக நடித்திருக்கிறார். டான்ஸ், ஆக்‌ஷன், காமெடி என்று கமர்ஷியல் ஹீரோவுக்கு தேவையான அனைத்து தகுதிகளும் கொண்டவராகவும் இருக்கிறார். 

 

 
ஹீரோவுக்கு அப்பா என்றாலும், பிரபுவும் படத்தில் ஒரு ஹீரோ தான். நண்பனிடம் போட்ட சவாலுக்காக, மகனை படி...படி...என்று சொல்லும் பிரபு, அதே மகனிடம் போட்ட சவாலுக்காக, கல்லூரிக்கு சென்று படிப்பது காமெடியாக இருந்தாலும், ஒவ்வொரு பெற்றோர்களின் கனவையும் பிரதிபலிப்பது போலவும் இருக்கிறது. ஆரம்பத்தில் சாதாரண மிடில் கிளாஸ் அப்பாவாக வெகுளித்தனமான நடிப்பால் அசத்தும் பிரபு, கல்லூரி மாணவரான பிறகு, கெட்டப்பை மாற்றி செய்யும் யூத் சேட்டைகளும் ரசிக்க வைக்கிறது.
 

 


ஹீரோயினாக நடித்திருக்கும் பிரியா வட்லமணி குறைவான போர்ஷனில் வந்து போகிறார். பிரபுவின் மனைவியாக நடித்திருக்கும் மதுபாலா, நடிப்பு மீது பேரார்வம் மிக்கவராக இருக்கிறார், என்பது அவரின் ஓவர் ஆக்டிங்கில் அப்பட்டமாக தெரிகிறது.
 

 


நாசர், மனோபாலா, சாம்ஸ் என்று மற்ற நடிகர்களும் தங்களது வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

 


 
இசையமைப்பாளர் குதூப் ஈ க்ருபாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம் என்றாலும், படத்திற்கு பொருத்தமானதாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் குரு பிரசாத் ராய், கதைக்கு ஏற்ப பணியாற்றியிருக்கிறார்.

 


 
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுக்காமல், அவர்களின் போக்கில் விட்டால், நிச்சயம் அவர்களும் சமூகத்தில் பெரிய மனிதர்களாக வருவார்கள், என்பதை பதிவு செய்திருக்கும் இயக்குநர் ஹரி சந்தோஷ், பிள்ளைகளின் படிப்புக்காக பெற்றோர்கள் எப்படி சிரமப்படுகிறார்கள், என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். 

 


 
முதல் மதிப்பெண் எடுப்பவர்கள் மட்டுமே, உயரத்திற்கு செல்ல முடியும், என்ற சில பெற்றோர்களின் தவறான கண்ணோட்டத்தை மாற்றும் விதத்தில், பல காட்சிகளை வைத்திருக்கும் இயக்குநர், தங்களிடம் இருக்கும் திறமையை அறிந்து உழைத்தால், உயரத்திற்கு செல்லலாம், என்ற நல்ல மெசஜையும் சொல்லியிருக்கிறார்.

 


ஃபேமிலி டிராமா ஜானர் படம் என்றாலே, சீரியல் போல சில காட்சிகள் இருக்கத்தான் செய்யும், இந்த படத்திலும் அப்படி ஒரு குறை இருந்தாலும், இயக்குநர் ஹரி சந்தோஷ், சொல்லியிருக்கும் மெசஜுக்காக இந்த படத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டும்.

 

"காலேஜ் குமார்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

 

Verdict : கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA