சற்று முன்

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிக்கும் பிரமாண்டமான தயாரிப்பு 'படையாண்ட மாவீரா'   |    ரசிகர்களின் எதிர்பார்ப்பை வியப்பில் ஆழ்த்திய 'வீர தீர சூரன்' படத்தின் டீசர்!   |    விஜய் தேவரகொண்டா வெளியிட்ட ராஷ்மிகா மந்தனாவின் 'தி கேர்ள்பிரண்ட்' படத்தின் டீசர்!   |    இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில் முதல் ஆன்மிக ஆல்பம் 'அஷ்ட ஐயப்ப அவதாரம்'!   |    பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள 'திரு.மாணிக்கம்' வெளியீடு அறிவிப்பு!   |    'மெட்ராஸ்காரன்' திரைப்பட இரண்டாவது சிங்கிள்' காதல் சடுகுடு' பாடல் வெளியீட்டு விழா!   |    திருநங்கைகளை பற்றி அழுத்தமாக பேசும் படைப்பாக 'சைலண்ட்' படம் வந்திருப்பது அழகு   |    நந்தமுரி மோக்ஷக்யா அறிமுகப்படத்தின் அட்டகாச ஸ்டில் வெளியாகியுள்ளது   |    கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்து பொங்கல் வெளியீடாக வரும் 'தருணம்'!   |    ‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது !!   |    ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுகம்!   |    திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள 'சைலண்ட்' பட டிரெய்லர் வெளியீடு!   |    என் படங்களில் திருநங்கைகளுக்கு மரியாதை செய்யும் காட்சிகள் வைப்பேன் - இயக்குநர் சீனு ராமசாமி   |    சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட 'ஸ்வீட் ஹார்ட்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    அமெரிக்காவில் நடைபெறவுள்ள ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு!   |    'ஜீப்ரா' லக்கி பாஸ்கர் சாயலில் இருந்தாலும், விமர்சகர்கள் கதை புரிந்து பாராட்டுவார்கள்!   |    விரைவில் ஹாட்ஸ்டாரில் வெப் சீரிஸாக மீண்டும் வரும் 'ஆஃபீஸ்' தொடர்!   |    சீனா திரையரங்குகளில் தமிழ் பிளாக்பஸ்டர் படமான 'மகாராஜா'!   |    வெளியாகி 25 நாட்களைத் தாண்டியும் அமரன் சாதனை!   |    ஒரு கமர்ஷியல் படத்தில் நான் நடிப்பது இதுவே முதல்முறை - நடிகை மடோனா செபாஸ்டியன்   |   

croppedImg_1160039639.jpeg

’பணி’ விமர்சனம்

Directed by : Joju George

Casting : Joju George, Abinaya, Sagar Surya, Junaiz V. P, Bobby Kurian, Abhaya Hiranmayi, Chandini Sreedharan, Seema, Sujith Shankar, Ranjith Velayudhan

Music :Vishnu Vijay, Sam C. S, Santhosh Narayanan

Produced by : AD Studios and Appu Pathu Pappu - M. Riaz Adam and Sijo Vadakkan

PRO : Yuvaraj

Review :

"பணி" ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் ஏடி ஸ்டுடியோஸ் & அப்பு பது பப்பு – எம்.ரியாஸ் ஆதாம் & சிஜு வடக்கன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை விஷ்ணு விஜய் & சாம்.சி.எஸ். இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், அபிநயா, சாகர் சூர்யா, ஜுனாயஸ்.வி.பி, சீமா, பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், பாபி குரியன், ரஞ்சித் வேலாயுதம், சாந்தினி ஸ்ரீதரன், அபாயா ஹிரன்மயி, சோனா மரியா ஆபிரகாம், லங்கா லக்‌ஷ்மி, பிரிட்டோ டேவிஸ், ஜெயசங்கர், அஷ்ரப் மல்லிசேரி, டாக்டர் மெர்லட் ஆன் தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

கேரள மாநிலம் திருச்சூரில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தோடு வலம் வருகிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ். அவருக்கு தெரியாமல் அங்கு எதுவும் நடக்காது என்ற சூழலில், குற்ற செயல்களில் ஈடுபடும் இரண்டு இளைஞர்கள் அவரது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார்கள். அவர்கள் மூலம் நினைத்து கூட பார்க்க முடியாத இழப்பு ஜோஜு ஜார்ஜுக்கு ஏற்படுகிறது. அதனால் அவர்களை பழி தீர்க்க, அவரது மொத்த சாம்ராஜ்யமே களத்தில் இறங்க, அந்த இளைஞர்கள் எதிர்பார்க்காத வகையில் பதிலடி கொடுக்கிறார்கள். அவர்களின் பதிலடியை முறியடித்து தனது பாணியில் அவர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத தண்டனை கொடுக்க களம் இறங்கும் ஜோஜு ஜார்ஜ், அதை எப்படி செய்து முடிக்கிறார் என்பதே ‘பணி’.

 

ஜோஜு ஜார்ஜ் வழக்கம் போல் தனது ஃபேவரைட் வேட்டி சட்டையில் இயல்பாக நடித்து கலக்குகிறார். மனைவியின் நிலை கண்டு கலங்குவதும், அடுத்த கனமே அதற்கு காரணமானவர்கள் மீது இருக்கும் தனது கோபத்தை கண்களில் வெளிப்படுத்துவது என அதிகம் பேசாமலேயே தனது உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

ஜோஜு ஜார்ஜின் மனைவியாக நடித்திருக்கும் அபிநயா, அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் கவனம் ஈர்க்கிறார்.

 

வில்லன்களாக நடித்திருக்கும் இளைஞர்கள் சாகர் சூர்யா மற்றும் ஜுனாயஸ்.வி.பி இருவரும் மிரட்டுகிறார்கள்.

 

சீமா, பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், பாபி குரியன், ரஞ்சித் வேலாயுதம், சாந்தினி ஸ்ரீதரன், அபாயா ஹிரண்மயி, சோனா மரியா ஆபிரகாம், லங்கா லக்‌ஷ்மி, பிரிட்டோ டேவிஸ், ஜெயசங்கர், அஷ்ரப் மல்லிசேரி, டாக்டர் மெர்லட் ஆன் தாமஸ் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

 

வேணு மற்றும் ஜிண்டோ ஜார்ஜ் ஆகியோரது ஒளிப்பதிவு காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருப்பதோடு, கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், தோற்றங்கள் மூலம் அவர்களின் குணங்களையும் மிக நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கிறது.

 

விஷ்ணு விஜய் மற்றும் சாம்.சி.எஸ் ஆகியோரது இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசை திரைக்கதைக்கு கூடுதல் விறுவிறுப்பு கொடுத்திருக்கிறது.

 

மனு ஆண்டனியின் படத்தொகுப்பு மற்றும் அஜயன் அடாட்டின் ஒலி வடிவமைப்பு இரண்டுமே படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

ஆக்‌ஷன் கமர்ஷியல் கதை தான் என்றாலும் அதை சுவாரஸ்யத்துடனும், எதிர்பார்ப்புடனும் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் ஜோஜு ஜார்ஜ். நாயகனாக இருந்தாலும், திரைக்கதையில் பல கதாபாத்திரங்களை பயணிக்க வைத்து அதன் மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்பவர், இரண்டு இளைஞர்கள் நாயகனிடம் சிக்குவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைக்கிறது.

 

‘நான் மகான் அல்ல’ படத்திலேயெ இத்தகைய இளைஞர்களின் வெறியாட்டத்தை நாம் பார்த்திருந்தாலும், அதற்கு வேறு ஒரு வடிவத்தை கொடுத்திருக்கும் ஜோஜு ஜார்ஜ், அதை விறுவிறுப்பாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்லி இயக்குநராக வெற்றி பெற்றிருக்கிறார்.

 

"பணி" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : ஒருமுறை பார்க்கலாம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA