சற்று முன்

பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |    ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!   |    “சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு   |    சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!   |    சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை   |    ‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |    சுந்தர் சி – துரை V.Z. வெற்றி கூட்டணியில் திகில் படம்   |    பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை   |    பெண்கள் பாதுகாப்பை பேசும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு   |    ‘கே டி : தி டெவில்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு… ரசிகர்களிடையே உற்சாகம்   |    ‘சிறை’ திரைப்பட வெற்றிவிழா – படக்குழுவிற்கு கேடயம் வழங்கி கௌரவிப்பு   |    18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் ‘தாம் தூம்’   |    'சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு' நடிகர் குமரனின் சினிமா பயணம்   |    “முத்து என்கிற காட்டான்” டிரெய்லர் வெளியீடு , மர்மத்தை அதிகரிக்கும் புதிய காட்சிகள்   |    “நீ Forever” – Gen Z காதலை பேசும் புதிய லவ் டிராமா மார்ச் 27 முதல் திரையரங்குகளில்!   |    முனீஸ்காந்த் நடிக்கும் புதிய ஃபேண்டஸி காமெடி படம் – பூஜையுடன் தொடங்கியது   |    ரூ.50 கோடி வசூல் – 480 திரைகளில் வெற்றிகரமாக ஓடும் ‘தாய் கிழவி’   |   

croppedImg_1267942401.jpeg

'கோழிப்பண்ணை செல்லதுரை’ விமர்சனம்

Directed by : Seenu Ramasamy

Casting : Aegan, Yogi Babu, Brigida Saga, Sathya Devi, Aiswarya Dutta, Leo Sivakumar, Naveen

Music :N.R.Raghunandhan

Produced by : Dr. D.Arulanandhu, Mathewo Arulanandhu

PRO : Nikil murukan

Review :

"கோழிப்பண்ணை செல்லதுரை" சீனு ராமசாமி இயக்கத்தில் டாக்டர் D.அருளானந்து, மாதேவோ அருளானந்து தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை என்.ஆர்.ரகுநந்தன். இந்த படத்தில் ஏகன், யோகி பாபு, ஐஸ்வர்யா தத்தா, லியோ சிவக்குமார், நவீன், குட்டிப்புலி தினேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

கணவன் - மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனையால் சிறுவயதில் நாயகன் ஏகனும், அவரது தங்கையும் கைவிடப்படுகிறார்கள். ஆதரவளித்த பாட்டியும் இறந்துவிட, அவர்களுக்கு கோழிப்பண்ணை நடத்தும் யோகி பாபு அடைக்கலம் கொடுக்கிறார். பெற்றோர் இல்லாத குறை தெரியாமல் தங்கையை வளர்க்க நினைக்கும் நாயகன் ஏகனின் வாழ்க்கையில் புது புது உறவுகள் வருகிறார்கள். அவர்கள் மூலம் அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா?, விட்டுச் சென்ற பெற்றோர் என்ன ஆனார்கள்? என்பதை மனித உணர்வுகளை மேம்படுத்தும் படைப்பாக கொடுத்திருப்பது தான் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’.

 

செல்லதுரை என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஏகன், அறிமுகம் படம் போல் அல்லாமல் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அசல் கிராமத்து இளைஞராக வலம் வருபவர், பாசம், காதல், சோகம் ஆகிய அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடிய கனமான கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். 

 

நாயகியாக நடித்திருக்கும் பிரிகிடா சாகாவுக்கு சின்ன வேடம் தான் என்றாலும், அதை நிறைவாக செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறார். 

 

யோகி பாபு தனது வழக்கமான காமெடி கலாட்டாவை ஒதுக்கி வைத்துவிட்டு, அழுத்தமான கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து, தன்னால் இப்படிப்பட்ட குணச்சித்திர வேடங்களையும் கையாள முடியும் என்று நிரூபித்திருக்கிறார்.

 

நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் சத்யாதேவி, கதையின் மையம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார். 

 

ஐஸ்வர்யா தத்தா, லியோ சிவக்குமார், நவீன், குட்டிப்புலி தினேஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் அசோக்ராஜ தனது கேமரா மூலம் பார்வையாளர்களுக்கு கதை நடக்கும் கிராமத்தில் பயணித்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.

 

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை அளவு. 

 

தனது ஒவ்வொரு படங்களிலும் மனித உணர்வுகள் பற்றி பேசி வரும் இயக்குநர் சீனு ராமசாமி, இந்த படத்தில் மனித உணர்வுகளுடன், ஒரு மனிதனின் வாழ்க்கை பயணத்தை வைத்துக்கொண்டு ஒரு தெய்வீக பயண உணர்வை பார்வையாளர்களிடம் கடத்த முயன்றிருக்கிறார். அவரது முயற்சி சில இடங்களில் தொய்வடைவது படத்தின் பலவீனம்.

 

படத்தின் மையமே அண்ணன் தங்கை பாசம் தான் என்றாலும் அதை காட்சியின் மூலம் ரசிகர்களிடம் கடத்த தவறியிருக்கும் இயக்குநர் சீனு ராமசாமி, கடைசி 20 நிமிட காட்சிகள் மூலம் படத்தில் இருக்கும் குறைகளை மறந்து, பார்வையாளர்களை கண்ணீர் சிந்த வைத்துவிடுகிறார். 

 

"கோழிப்பண்ணை செல்லதுரை" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

 

Verdict : மனித உணர்வுகளை மேம்படுத்தும் படைப்பு

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA