சற்று முன்

மகளிர் தினத்தில் வெளியான ‘பேட்ரியாட்’ நயன்தாரா கேரக்டர் போஸ்டர்!   |    ‘காளிதாஸ் 2’ ஏப்ரல் 3 வெளியீடு… பரத் நடிக்கும் திரில்லர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    விஜய்குமார் – கயல் ஆனந்தி இணையும் ‘அறிவு’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்   |    150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!   |    ரசிகர்களை கவர்ந்த ஆக்‌ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!   |    நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!   |    பண மிஷின் ரகசியம்… ‘கான் சிட்டி’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ஸ்ருதிஹாசன் குரலில் ‘பவழ மல்லி’ – சாய் அபயங்கர் இசையில் புதிய பாடல்!   |    'ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடும், அந்த நிறைவை ‘தடயம்’ கொடுத்தது' – சமுத்திரகனி பெருமிதம்   |    மார்ச் 13 முதல் ZEE5-ல் ‘பூக்கி’ காதலும் நகைச்சுவையும் கலந்த ரொமான்டிக் காமெடி ஸ்ட்ரீமிங்!   |    நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |   

croppedImg_1581918855.png

’நந்தன்’ விமர்சனம்

Directed by : Era Saravanan

Casting : M. SasiKumar, Sruthi Periyasamy, Mathesh, Mithun, Balaji Sakthivel, Durai Sudhakar

Music :Ghibran

Produced by : Era Entartainment - Era Saravanan

PRO : Yuvaraj

Review :

"நந்தன்" இரா.சரவணன் இயக்கத்தில் இரா என்டர்டைன்மெண்ட்  - இரா  சரவணன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஜிப்ரான். இந்த படத்தில் சசிகுமார், சுருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, ஸ்டாலின், வி.ஞானவேலு, ஜி.எம்.குமார், சித்தன் மோகன், சக்தி சரவணன், பாலாஜி சக்திவேல், துரை சுதாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

சாதிய வன்கொடுமைகள் பற்றியும், அதில் இருந்து விடுபடுவதற்கான தீர்வு பொருளாதார முன்னேற்றம் அல்லது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுதல் உள்ளிட்ட விசயங்களை பேசும் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அத்தகைய ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினாலும், அவர்களின் அவல நிலை மட்டும் மாறவில்லை, என்ற உண்மையை திரையில் முதல் முறையாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘நந்தன்’.

 

ஊராட்சி மன்றங்களில் நடக்கும் சாதி பாகுபாடு மற்றும் ஆதிக்குடி ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு நேர்ந்த சில கசப்பான உண்மை சம்பவங்களை வெளி உலகிற்கு தெரியப்படுத்தும் நோக்கத்தில் இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் இரா.சரவணனுக்கு பெரும் ஒத்துழைப்பு கொடுக்கும் விதத்தில், தனது வழக்கமான பாணியை மாற்றி, புது அவதாரம் எடுத்திருக்கிறார் நடிகர் சசிகுமார்.

 

அம்பேத்குமார் என்கிற கூல்பானை என்ற கதாபாத்திரத்தில் அழுக்கு படிந்த உழைப்பாளியாக வாழ்ந்திருப்பவர், ஊராட்சி மன்ற தலைவரான பிறகு, அந்த பணியை திறம்பட செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், ஊராட்சி மன்ற அலுவலகம் செல்லும் போது அவருக்கு நேரும் சோகம் மனதை பதற வைக்கிறது.

 

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி பெரியசாமி, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலஜி சக்திவேல், சாதி வெறியாட்டத்தின் வக்கிரத்தை தனது நடிப்பு மூலம் திரையில் கொண்டு வந்து பார்வையாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறார்.

 

ரியல் எஸ்டேட் தொழிலதிபராக நடித்திருக்கும் துரை சுதாகர், பாலாஜி சக்திவேலுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.

 

சமுத்திரக்கனி, ஸ்டாலின், வி.ஞானவேலு, ஜி.எம்.குமார், சித்தன் மோகன், சக்தி சரவணன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரவணனின் கேமரா கிராமத்தின் அழகை மட்டும் இன்றி, கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும் கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

 

ஜிப்ரான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பது ஏமாற்றமே.

 

ஆதிக்குடிகளின் அடிமைத்தனத்தை அறுத்தொழிப்பதற்காக அவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை வழங்க ஏற்படுத்தப்பட்ட தனித்தொகுதி முறையின் அவலத்தை முதல் முறையாக திரையில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன்.

 

இங்கு ஆள்வதற்கு தான் ஆட்சி அதிகாரம் தேவை என்று நினைத்தேன், ஆனால் நாங்க வாழ்வதற்கே ஆட்சி அதிகாரம் தேவைப்படுகிறது, என்ற வசனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் மன குமுறல்களை உரக்க சொல்லியிருக்கும் இயக்குநர் இரா.சரவணனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். 

 

அதே சமயம், அம்பேத்குமாரை ஊராட்சி மன்ற தலைவர் இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, சினிமாவில் வேண்டுமானால் அம்பேத்குமார் ஜெயிக்கலாம், ஆனால் நிஜத்தில், ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டாலும், அவர்களின் நிலை மாறாது, என்று சொல்லியிருக்கும் இயக்குநர் இரா.சரவணன், ஒரு படைப்பாளியாக இத்தகைய பிரச்சனைக்கு தீர்வு சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை, மக்கள் மனதில் அவநம்பிக்கை ஏற்படுத்தாமல் இருந்திருக்கலாம்.

 

"நந்தன்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : மக்களின் மன குமுறல்களை உரக்க சொல்லும் படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA