சற்று முன்

அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது! - இயக்குநர் அருண்குமார் சேகரன்   |    'சிறை' பட சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது!   |    ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் உருவாகிவரும் ‘பெத்தி’ பட ஆக்சன் காட்சிகள்!   |    துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான 'ஐ அம் கேம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட படப்பிடிப்பு நிறைவு பெற்றது!   |    சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் தடகள போட்டி இன்று துவங்கியது!   |    56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) வில் தேர்வு செய்யப்பட்ட 'லால் சலாம்'   |    நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!   |    அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!   |    'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!   |    அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |    'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்!   |    கோவா திரைப்பட விழாவில் பாராட்டுப்பெற்ற ஆநிரை குறும்படம்!   |    'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!   |    எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இதில் கொண்டு வந்துள்ளோம் - வினீத் வரபிரசாத்   |    தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |   

croppedImg_1348387848.jpeg

‘விருந்து’ விமர்சனம்

Directed by : Thamara Kannan

Casting : Arjun, Nikki Galrani, Gireesh Neyyar, Harish Peradi

Music :Ratheesh Vega

Produced by : Thamara Kannan

PRO : Saran

Review :

"விருந்து" தாமர கண்ணன் இயக்கத்தில் கிரீஷ் நெய்யர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ரதீஷ் வேகா. இந்த படத்தில் அர்ஜுன், நிக்கி கல்ராணி, கிரீஷ் நெய்யார், ஹரிஷ் பெராடி மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

நாயகி நிக்கி கல்ராணியின் அப்பா மற்றும் அம்மா அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இதனால், நிக்கி கல்ராணிக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க, அந்த பாதுகாப்பையும் மீறி அவரை கொலை செய்ய  மர்ம கும்பல் முயற்சிக்கிறது. அவர்களிடம் இருந்து நிக்கி கல்ராணி தப்பித்தாலும், அந்த கும்பல் தொடர்ந்து அவரை துரத்த, அடர்ந்த வனப்பகுதியில் அந்த கும்பலிடம் நிக்கி கல்ராணி சிக்கிக் கொள்கிறார். அவர்களிடம் இருந்து நிக்கி கல்ராணியை காப்பாற்றும் அர்ஜுன், வனப்பகுதியில் உள்ள தனது வீட்டில் அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார். ஆனால் நிக்கி கல்ராணி அர்ஜுனையே கொலை செய்ய முயற்சிக்க, அதன் பிறகு என்ன நடந்தது? அர்ஜுனை அவர் கொலை செய்ய முயற்சிப்பது ஏன்? நிக்கி கல்ராணியை சுற்றி நடக்கும் மர்ம பின்னணிக்கு காரணம் யார்? போன்ற கேள்விகளுக்கான விடைகளை படு சுவாரஸ்யமாகவும், பரபரப்பான திருப்பங்களோடும் சொல்வது தான் ‘விருந்து’.

 

மீண்டும் நாயகனாக களம் இறங்கியிருக்கும் அர்ஜுன், இதில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக மட்டுமே வலம் வருகிறார். அவருக்கு ஜோடியோ, டூயட் பாடலோ இல்லை என்றாலும், தனது ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் விருந்து படைத்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் நிக்கி கல்ராணி, தன்னை சுற்றி நடக்கும் மர்மங்களை கண்டு ஆரம்பத்தில் பயந்தாலும், பிறகு அதற்கான விடை தேடி பயணிக்கும் காட்சிகளில் அதிரடியாக நடித்து அசத்தியிருக்கிறார்.

 

இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் கிரீஷ் நெய்யார், திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். அவருக்காக படத்தில் வைக்கப்பட்டிருக்கும் கிளை கதையும், அதில் வரும் அவரது தந்தை மற்றும் தங்கை செண்டிமெண்ட் கவனம் ஈர்க்கிறது.

 

சிறிய வேடம் என்றாலும் ஹரிஷ் பெராடியின் கதாபாத்திரமும், நடிப்பும் மிரட்டல். பாலண்ணா என்ற கதாபாத்திரத்தில் கம்யூனிச  தலைவராக நடித்திருக்கும் நடிகரின் திரை இருப்பு, திரைக்கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

 

ரதீஷ் வேகாவின் இசையில், ரஃபீக் அகமது, ஹரி நாராயண், மோகன் ராஜன் ஆகியோரது வரிகளில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.

 

ரவிச்சந்திரன் மற்றும் பிரதீப் நாயரின் ஒளிப்பதிவில் வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளின் அழகு கண்ணுக்குள் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துக் கொள்கிறது. இயற்கையின் அழகோடு திகில் காட்சிகளின் பதற்றத்தையும் இவர்களது கேமரா பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது.

 

படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை கதைக்குள் அழைத்துச் செல்லும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் வி.டி.ஸ்ரீஜித், இறுதி வரை அடுத்தது என்ன நடக்கும்? என்ற கேள்வியோடு ஒவ்வொரு காட்சியையும் எதிர்பார்ப்புடன் பயணிக்க வைத்திருக்கிறார்.

 

பத்திரிகை செய்திகளை மையமாக வைத்துக்கொண்டு ஒரு நேர்த்தியான சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் தாமர கண்ணன், படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும் விதத்தில் காட்சிகளையும், திரைக்கதையையும் மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

 

அடுத்தடுத்து  நடக்கும் இரண்டு கொலைகள், அதனை சுற்றி நடக்கும் சில மர்மமான சம்பவங்களை வைத்துக்கொண்டு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும் இயக்குநர், படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

அர்ஜுனையும், அவரது ஆக்‌ஷனையும் அளவாக பயன்படுத்தினாலும், அதை ரசிகர்கள் கொண்டாடும் வகையிலும், அவரது திரை இருப்பு படம் முழுவதும் இருப்பது போலவும் கச்சிதமாக காட்சிகளை கையாண்டிருக்கும் இயக்குநர் தாமர கண்ணன், இறுதியில் அர்ஜுன் மூலமாக மக்களுக்கு, குறிப்பாக படித்தும் சில மூட நம்பிக்கைகளில் மூழ்கி முட்டாள்த்தனமான செயல்களை செய்பவர்களுக்கு சாட்டையடியும் கொடுத்திருக்கிறார்.

 

"விருந்து" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : மூட நம்பிக்கைகளில் மூழ்கி வாழும் மக்களுக்கு சாட்டையடி

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA