சற்று முன்

கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |    பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |    “சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு   |    “வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு   |    “அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்   |    “வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!   |    ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்   |    ₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |   

croppedImg_7184927.jpeg

’இந்தியன் 2’ விமர்சனம்

Directed by : Shankar

Casting : Kamal Haasan, Siddharth, Rakul Preet Singh, S. J. Suryah, Priya Bhavani Shankar, Boby Simha, Samuthirakani, Vivek, Jegen

Music :Anirudh

Produced by : Lyca Productions and Red Giant Movies - Subaskaran Allirajah and Udhayanidhi Stalin

PRO : AIM

Review :

"இந்தியன் 2" ஷங்கர் இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் – சுபாஸ்கரன், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை அனிருத். இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ஜெகன், விவேக், நெடுமுடி வேணு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

சித்தார்த் தனது நண்பர்கள் பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷிகாந்த் ஆகியோருடன் சேர்ந்து நடத்தும் யூடியுப் சேனல் மூலம் ஊழல்வாதிகளின் முகத்திரையை கிழித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சிக்கிறார். அது முடியாமல் போக, இந்தியன் தாத்தாவை திரும்பி அழைத்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். அதற்காக அவர் சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளும் பிரச்சாரம், தைவானில் இருக்கும் இந்தியன் தாத்தா கவனத்திற்கு போகிறது. அவர் மீண்டும் இந்தியா வருகிறார்.

 

முதல் பாகத்தில் தமிழ்நாட்டு ஊழல்வாதிகளுக்கு உயிர் பயத்தை காட்டிய இந்தியன் தாத்தா, இந்த முறை இந்தியா முழுவதும் நடைபெறும் ஊழல்களுக்கு எதிராக தனது போராட்டத்தை தொடங்குகிறார். அதே சமயம், அவர் இந்தியாவுக்கு திரும்ப வர வேண்டும் என்று விரும்பிய சித்தார்த்தே அவரை வெறுக்கிறார். மறுபக்கம் அவரை தேடிக்கொண்டிருக்கும் விசாரணை அதிகாரிகளும் அவரை நெருங்குகிறார்கள். அதிகாரிகளிடம் இருந்து இந்தியன் தாத்தா தப்பித்தாரா?, சித்தார்த் அவரை வெறுப்பது ஏன்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

இந்தியன் முதல் பாகத்தில் இருக்கும் பிரமாண்டம் இதில் அளவுக்கு அதிகமாக இருந்தாலும், பலம் இல்லாத திரைக்கதையும், அதனுடன் ஒட்டி பயணிக்காத பிரமாண்டமும் படத்தின் பலவீனங்களாக இருந்தாலும், கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் சித்தார்த், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி ஆகியோரது கதாபத்திர வடிவமைப்புகள் பலவீனத்தை மறைத்து படத்தை ரசிக்க வைக்கிறது.

 

நாட்டில் நடக்கும் பெரிய பெரிய ஊழல்களுக்கு எல்லாம் சிறிய அளவில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளே மூலக்காரணம் என்பதை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் ஷங்கர், இலவசங்கள் வழங்கும் தமிழக அரசியல் பற்றி மேலோட்டமாக பேசிவிட்டு, குஜராத் தொழிலதிபர்களை பற்றியும், அவர்களின் ஊழல் பின்னணி பற்றியும் விரிவாக பேசியிருப்பதும், அதை  தனிமனித ஊடகமான யூடியுப் உடன் இணைத்து சொல்லியிருப்பது கவனம் ஈர்க்கிறது. 

 

முதுமையான உடல்மொழியை கச்சிதமாக வெளிப்படுத்தி கைதட்டல் பெறும் கமல்ஹாசன், ஊழலுக்கு எதிராக பேசும் வசனங்கள் கைதட்டல் பெறுவதோடு, தனது நடிப்பால் ரசிகர்களை விசிலடிக்க வைக்கிறார். 

 

சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, மறைந்த நெடுமுடி வேணு, விவேக் ஆகியோரது அளவான நடிப்பு திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா குறைவான காட்சிகளில் வந்தாலும், மூன்றாம் பாகத்தில் அவரது வேடம் பெரிய அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்.

 

இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் “தாத்தா வராரே...” பாடல் திரையரங்கையே அதிர வைக்கிறது. மற்ற பாடல்களும் ஓகே ரகம் தான். பின்னணி இசை வேகமான திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருந்தாலும், இந்தியன் முதல் பாகத்தின் பின்னணி இசையே முன்னணி பெறுகின்றன.

 

ரவிவர்மனின் ஒளிப்பதிவு இயக்குநரின் பிரமாண்ட கற்பனைக்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது.  ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு மூன்று மணி நேரம் படத்தை அலுப்பில்லாமல் பார்க்க வைக்கிறது.  கலை இயக்குநர் மற்றும் சண்டைப்பயிற்சியாளர் ஆகியோரது பணியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

முதல் பாகத்தை ஓப்பிட்டு பார்த்தால் இயக்குநர் ஷங்கர் இதில் சற்று தடுமாறியிருப்பது தெரிந்தாலும், படத்தின் சண்டைக்காட்சிகள்,  இந்தியாவின் பெரும் தலைகளை இந்தியன் தாத்தா நெருங்கும் காட்சிகள், காலண்டர் மற்றும் தாத்தா வராரே ஆகிய பாடல்கள் உள்ளிட்டவை மூலம் பிரமாண்டம் என்ற தனது மாயாஜாலம் மூலம் மக்களை முழுமையாக திருப்திப்படுத்தி விடுகிறார். 

 

இறுதிக் காட்சியில் நாடே கொண்டாடிய இந்தியன் தாத்தாவுக்கு எதிர்ப்பு வருகிறது. அது ஏன்? என்ற கேள்விக்கான விடையாக மூன்றாம் பாகத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

 

"இந்தியன் 2" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : இளமையையும், மிரட்டலும் குறையாத இந்தியன் தாத்தா

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA