சற்று முன்
’பயமறியா பிரம்மை’ விமர்சனம்
Directed by : Rahul Kabali
Casting : JD, Guru Somasundaram, Harish Uthaman, John Vijay, Sai Priyanka Ruth, Vinoth Sagar, Vishwanth, Harish Raju, Jack Robin, AK, Divya Ganesh
Music :K
Produced by : Rahul Kabali
PRO : Yuvaraj
Review :
"பயமறியா பிரம்மை" ராகுல் கபாலி இயக்கத்தில் ராகுல் கபாலி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை கே. இந்த படத்தில் ஜே.டி, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒரு படத்தை வித்தியாசமாக எடுக்கிறேன் என்கிற பெயரில் குதறி குழப்பி வைத்த படம் தான் பயமறியா பிரம்மை.
ஒரு கொலைகாரனின் கலை உணர்வை பற்றி ஒரு எழுத்தாளன் நேர்காணல் செய்கிறான். அதிலிருந்து அவர்களுடைய கதை விரிவடைகிறது.
இதில் சம்பந்தமே இல்லாமல் குரு சோமசுந்தரம், ஜான் டேவிட் ஆகியோர் வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஹரி சுத்தமன் ஜட்டியோடு நிற்க வைத்து இருக்கிறார்கள்.
உலகத் தரத்திற்கான சினிமாவாக எடுக்கிறேன் என்கிற பெயரில், ஒளிப்பதிவை இருட்டிலேயே செய்து, நாம் லைட் போட்டு படம் பார்க்க வைக்கிறார்கள்.
ஒரு மனிதன் குற்ற உணர்ச்சியால் துடித்தால் எவ்வளவு வேதனைப்படுவான் என்பதை எதார்த்தமாகவே சொல்லி இருக்கலாம் , இப்படி குழப்பி தான் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.
"பயமறியா பிரம்மை" படத்திற்கு மதிப்பீடு 2/5
Verdict : ஆக மொத்தத்தில் பயமறியா பிரம்மை, பைத்தியக்கார பிரம்மை.
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA