சற்று முன்

'ரகு தாத்தா' இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை பற்றி தான் பேசுகிறது!   |    SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக, அசத்தலான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது !   |    அசத்தலான காமெடி ஜானரில், 'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்' டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது   |    எத்தனை முரண்கள் இருந்தாலும் ஒருவர் ஒருவரை அரவணைத்து கொள்வது ஒரு அழகு - இயக்குநர் நாகராஜ்   |    மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் இயக்குநர் மற்றும் நடிகர் சேரன்!   |    சாண்டி மாஸ்டரின் துடிப்புமிக்க நடன அசைவுகளுடன் 'பிரதர்' பட முதல் பாடல் வெளியானது!   |    கதை அம்சத்தோடு technical -ளாகவும் பிரமிக்க வைக்கிறது 'TEENZ' - இயக்குனர் பிரபு சாலமன்   |    பல தடைகளைக் கடந்து ரிலீஸை நோக்கி முன்னேறி வரும் ‘வணங்கான்’   |    தனுஷ் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!   |    சாந்தினி தமிழரசன் நடிக்கும் சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் 'அமீகோ'!   |    ஒன்ட்ராக ஒரிஜினல்ஸின் ‘ராசாத்தி’ புரோமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு   |    கலை இலக்கியத்தை அரசியல் வடிவமாக்கி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் - இயக்குநர் பா ரஞ்சித்   |    என்னை என் அரசியலைப் புரிந்து கொள்வதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம் 'வாழை' - மாரி செல்வராஜ்   |    விஷ்ணு விஷால் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் செய்து அசத்திய ரசிகர்கள்!   |    உலகமெங்கும் தீபாவளி அன்று வெளியாகிறது ‘அமரன்’   |    'மனோதரங்கல்' உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஆழமாக சென்று தாக்கும் தொடர்   |    விஜய் சேதுபதி - சூரி நடிக்கும் ‘விடுதலை பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!   |    தமிழக அரசின் கலைமாமணி விருதாளரான சிவன் ஶ்ரீநிவாசனுக்கு “சாஹிப் ஜாதா” விருது   |    ராம் பொதினேனி நடிக்கும் ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது!   |    சின்ன பட்ஜெட் படங்களுக்கு மக்கள் வருவது குறைந்துள்ளது - தயாரிப்பாளர் தனஞ்செயன்   |   

croppedImg_2024877318.jpeg

‘ரயில்’ விமர்சனம்

Directed by : Baskar Sakthi

Casting : Kungkumaraj, Vairamala, Parvesh Mehru, Ramesh Vaidya, Senthil Kochadai, Shameera, Bindu, Babu Thanisha, Subash, Thangamani Prabhu, Ramesh Yandhra, Sam Daniel, Rajesh, Ramaiah

Music :SJ Janani

Produced by : Vediyappan

PRO : Nikil murukan

Review :

"ரயில்" பாஸ்கர் சக்தி இயக்கத்தில் வேதியப்பன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை எஸ்.ஜே.ஜனனி. இந்த படத்தில் குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ, ரமேஷ் வைத்யா, செந்தில் கோச்சடை, பிண்ட்டூ மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

தேனி மாவட்டத்தில் ஒரு பஞ்சாலையில் சுனில் என்கிற வட இந்தியன் வேலை பார்க்கிறான். அவன் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு வயதான மூதாட்டியின் வீட்டில் வாடகை எடுத்து தங்கி இருக்கிறான். அந்த வீட்டின் இன்னொரு பகுதியில் செல்லம்மாவும் அவனது கணவரும் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் செல்லம்மாவின் கணவர் பொழுதும் குடித்துக் கொண்டு எந்த வேலைக்கும் செல்லாமல் சுற்றித் திரிகிறார்.  வட மாநிலத்திலிருந்து வந்து நமது பிழைப்பை கெடுத்து விட்டானே என்று சுனில் மீது கோபப்படுகிறார்.  ஆனால் சுனிலும் செல்லமாகவும் ரொம்ப பாசமாக பழகுகிறார்கள். இது ஒரு கட்டத்தில் அவனுக்குள் ஒரு பொறாமையை தருகிறது. இதனால் அவனை கொலை செய்ய முடிவு எடுக்கிறான். அப்பொழுது என்ன ஆனது என்பது தான் "ரயில்" படத்தின் மீதிக்கதை.

 

பிழைப்பு தேடி வந்தவர்களின் வாழ்க்கையை எதார்த்தமாக கூற வேண்டும் என்று முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் பாஸ்கர் சக்தி வாழ்த்துக்கள். 

 

ஆனால் திரைக்கதையை கவனம் செலுத்தி இருக்கலாம் படத்தில் முதல் பாதி மிகவும் ஜவ்வாகவே இழுக்குறது. இரண்டாம் பாதி மட்டுமே கதையில் விறுவிறுப்பை கூட்டுகிறது. 

 

செல்லம்மாவின் கணவராக வருபவர் நடிகர் குரு சோமசுந்தரத்தை போல்  காட்சியளிக்கிறார். இயக்குனர் அவரை தேர்ந்தெடுத்து விட்டு அதுக்கப்புறம் மாற்றி விட்டாரா என்பதுதான் தெரியவில்லை. படத்தில் செல்லம்மாவாக வரும் நடிகை வைரமாலா நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். நிச்சயம் அவர் ஒரு ரவுண்டு வருவார். அது மட்டும் இல்லாமல் படத்தில் காமெடியனாக வருபவர், துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் வரும் டவுசர் பாண்டி போல் இருக்கிறார். நன்றாகவும் காமெடி பண்ணுகிறார். நடிகர்கள் யாரும் புதுமுக நடிகர்கள் என்ற சூடே தெரியாமல் வேலை வாங்கி இருக்கிறார் பாஸ்கர் சக்தி. 

 

தேனி ஈஸ்வரியின் ஒளிப்பதிவு, இயற்கை ஒளியின் மூலம் மிக அழகாக படம் பிடித்திருக்கிறார். 

 

ஆங்காங்கே சில பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், ரயில் படத்தை ஒரு தடவை பார்க்கலாம். ஆனால் இது கமர்சியல் படம் அல்ல.

 

"ரயில்" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : "ரயில்" படத்தை ஒரு தடவை பார்க்கலாம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA