சற்று முன்

கர்நாடக சக்கரவர்த்தி சிவண்ணா ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் தரும், புதிய அப்டேட்!   |    பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸை இதுவரை திரையில் கண்டிராத அவதாரத்தில் #BSS12 -ல் காணலாம்   |    எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆவணப்படம் 16வது IDSFFK விழாவுக்கு தேர்வு!   |    Susi Ganeshan Reveals Motion Poster for 'Ghuspaithiya   |    'ரகு தாத்தா' இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை பற்றி தான் பேசுகிறது!   |    SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக, அசத்தலான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது !   |    அசத்தலான காமெடி ஜானரில், 'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்' டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது   |    எத்தனை முரண்கள் இருந்தாலும் ஒருவர் ஒருவரை அரவணைத்து கொள்வது ஒரு அழகு - இயக்குநர் நாகராஜ்   |    மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் இயக்குநர் மற்றும் நடிகர் சேரன்!   |    சாண்டி மாஸ்டரின் துடிப்புமிக்க நடன அசைவுகளுடன் 'பிரதர்' பட முதல் பாடல் வெளியானது!   |    கதை அம்சத்தோடு technical -ளாகவும் பிரமிக்க வைக்கிறது 'TEENZ' - இயக்குனர் பிரபு சாலமன்   |    பல தடைகளைக் கடந்து ரிலீஸை நோக்கி முன்னேறி வரும் ‘வணங்கான்’   |    தனுஷ் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!   |    சாந்தினி தமிழரசன் நடிக்கும் சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் 'அமீகோ'!   |    ஒன்ட்ராக ஒரிஜினல்ஸின் ‘ராசாத்தி’ புரோமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு   |    கலை இலக்கியத்தை அரசியல் வடிவமாக்கி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் - இயக்குநர் பா ரஞ்சித்   |    என்னை என் அரசியலைப் புரிந்து கொள்வதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம் 'வாழை' - மாரி செல்வராஜ்   |    விஷ்ணு விஷால் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் செய்து அசத்திய ரசிகர்கள்!   |    உலகமெங்கும் தீபாவளி அன்று வெளியாகிறது ‘அமரன்’   |    'மனோதரங்கல்' உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஆழமாக சென்று தாக்கும் தொடர்   |   

croppedImg_502338398.jpeg

'அஞ்சாமை' விமர்சனம்

Directed by : SP Subburaman

Casting : Vidaarth, Vani Bhojan, Rahman, Krithik Mohan, Vijay Tv Ramar, Dhanya

Music :Raghav Prasad

Produced by : Thiruchithram - Dr. M. Thirunavukarasu MD

PRO : Johnson

Review :

"அஞ்சாமை" எஸ்.பி.சுப்புராமன் இயக்கத்தில் திருசித்ரம் – டாக்டர்.எம்.திருநாவுக்கரசு MD தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ராகவ் பிரசாத். இந்த படத்தில் விதார்த், வாணி போஜன், ரஹ்மான், கிருத்திக் மோகன், விஜய் டிவி ராமர், தன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

கூத்துக் கலைஞரான நடிகர் விதார்த் தன் மகனை டாக்டர் ஆக்கி பார்க்க வேண்டும் என்று தனது நடிப்புத் தொழிலையே விட்டு கடினமாக உழைக்கிறார். அப்பொழுதுதான் நீட் தேர்வு என்று புதுமுறை வருகிறது. அதற்கு அவருடைய பையனுக்கு சென்டராக  ராஜஸ்தானில் போடப்படுகிறது. ஊர் பெயர் தெரியாத இடத்தில் அவர் பையனும் கூட வந்த சில நபர்களும் சோதனை என்ற பெயரில் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள். இறுதியில் விதார்த்  மன உளைச்சலால், heart attack வந்து இறந்து விடுகிறார். இதையெல்லாம் அவருடைய பையன், காவல் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் ஆன ரகுமானிடம் கூறி நீதி கேட்கிறார். இதற்கு இன்ஸ்பெக்டர் ரகுமான் எடுக்கும் முடிவுகளே அஞ்சாமை படத்தின் கரு.

 

விதார்த்தும் சரி..  ரஹ்மானும் சரி.. நடிப்பில் தன்னுடைய முத்திரையை பதித்து இருக்கிறார்கள்.  இவர்கள் தவிர இந்தப் படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் நன்றாகவே தங்களுடைய நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். 

 

கதை என்ன சொல்ல வந்ததோ அதை நேர்த்தியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். 

 

நீட் தேர்வால் மாணவர்கள் படும் அவதிகளை புட்டு புட்டு வைத்திருக்கிறார். எவ்வளவு சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.  குறிப்பாக கோர்ட் ட்ராமா காட்சிகளில் அரங்கம் அதிர்கிறது. 

 

முதல் பாதி விதாரத்துக்கான படம் என்றால், இரண்டாம் பாதி ரகுமானுக்கான படம். 

 

படத்தின் காட்சிகள் மிக அருமை. படத்தின் திரைக்கதையும் மிக மிக அருமை. ஒளிப்பதிவு பாடல்கள் என  முக்கியமான கருத்துக்கு தேவையான காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.

 

படத்தின் மிகப்பெரிய குறையாக பார்க்கப்படுவது லாஜிக் தான். இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று கேட்கும் அளவிற்கு லாஜிக் ஓட்டைகள் நிறைய உள்ளன. ஆனால் அதையெல்லாம் படத்தின் இறுதிக் காட்சி நிவர்த்தி செய்து விடுகிறது. 

 

படத்தின் இயக்குனர் எஸ்பி சுப்புராமன் நல்ல கலை கருவை எடுத்ததற்கு பாராட்டலாம். ஆனால் இது கற்பனையான திரைக்கதை என்பதால், மாணவர்களின் மனநிலை ஓட்டத்தை அறிந்து இதை எடுத்ததினால்  இந்த கற்பனை கதை ஜெயிக்கும் கதையாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

 

'அஞ்சாமை" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : அஞ்சாமை ஒரு அடங்காமை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA