சற்று முன்

மகிழ்ச்சியின் உச்சத்தில் “அன்புள்ள கில்லி” படத்தின் படக்குழு   |    என்னை உலுக்கிய சம்பவம் - இயக்குனர் சங்கர்   |    படுக்கை அறை காட்சியால் சம்பளத்தை குறைத்த நடிகை ஆண்ட்ரியா   |    மைனா நந்தினியின் போலி ஃபேஸ்புக் ஐடியால் தூக்கத்தை தொலைத்த மாவட்ட செயலாளர்   |    சமூகத்தின் சொல்லப்படாத அவலநிலையின் ஓர் அலசல் “கல்தா”   |    பத்திரிக்கையாளர்களை சந்தித்த “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படக்குழுவினர்   |    ஹரீஷ் கல்யாண் வீட்டில் பிரியாணி விருந்து   |    அருண் விஜய் படத்துக்காக 45 லட்ச ரூபாயில் பிரமாண்டமான அரங்கம்   |    இங்கு யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை - பா.ரஞ்சித்   |    அஜித் நிராகரித்ததை ஒத்துக்கொண்ட ரஜினி   |    'அக்கா குருவி' படத்திற்காக இணைந்துள்ள இயக்குநர் சாமியும் இளையராஜாவும்   |    வில்லன் நடிகருக்கு இரண்டாவது திருமணம்!   |    பிரேம்ஜி திருமணம் குறித்து கமெண்ட் போட்ட 'மாஸ்டர்' நடிகர்   |    விஜய் முதல்முறையாக இயக்கும் புதிய படம்   |    சூப்பர் ஸ்டாரின் அடுத்த தலைப்பு   |    விஜய்க்காக இப்படியெல்லாமா செய்வார்கள்!   |    விஜய்யின் அடுத்த படத்திற்கு சம்பளம் இவ்வளவா!   |    அஜித்குமார் மகன் பிறந்தநாளையொட்டி அன்பு இல்லத்தில் கொண்டாட்டம்   |    இதைத்தான் உண்மையான வெற்றி என்று என் தந்தை என்னிடம் கூறினார் - மகிழ்ச்சியில் அருண் விஜய்   |    ஸ்ரீரெட்டி மீது நடிகை அளித்துள்ள அவதூறு வழக்கு! - கைதி செய்ய காத்திருக்கும் காவல்துறை   |   

croppedImg_255965041.png

'உற்றான்' திரை விமர்சனம்

Directed by : ராஜா கஜினி

Casting : ரோஷன் உதயகுமார், ஹிரோஷினி கோமலி

Music :என்.ஆர்.ரகுநந்தன்

Produced by : ராஜா கஜினி

PRO : குமரேசன்

Review :

கல்லூரி மோதல் மற்றும் காதல், அதனால் ஹீரோவுக்கு பல பிரச்சினைகள் வர, அதில் இருந்து மீண்டு காதலில் வெற்றி பெற்றாரா, இல்லையா என்பது தான் கதை.

 

அறிமுக ஹீரோ ரோஷன், கல்லூரி மாணவர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போவதோடு, நடனம், ஆக்‌ஷன் இரண்டிலுமே தேர்ச்சி பெற்றவராக இருக்கிறார். ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இல்லாமல், நல்ல வேடங்களாக, நல்ல படங்களாக நடித்தால் நடிகராக வளர வாய்ப்புண்டு. ஹீரோயின் ஹீரோஷினியும் புதுமுகம் தான். தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

 

 

பிரியங்கா, வில்லனாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, மதுசூதன ராவ், ரவிஷங்கர் என அனைவரும் தங்களுக்கான வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

 

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்களாக இருக்கிறது. கானா பாடல்களை கூட மொலோடி ஸ்டைலில் கொடுத்திருப்பது ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை ரொம்ப சத்தமாக இருக்கிறது. ஹோலிக் பிரபுவின் ஒளிப்பதிவு கதையோடு பயணித்திருக்கிறது.

 

 

கல்லூரி தேர்தல், மோதல், மாணவிகளிடம் குறும்பு செய்யும் மாணவர்கள் என்று பழைய கல்லூரி நினைவுகளை நம் கண் முன் நிறுத்தும் இயக்குநர் ராஜா கஜினி, கதையை பல கோணத்தில் சொல்லி, குழப்பவதோடு, சில நேரங்களில் கடுப்பேற்றவும் செய்கிறார்.

 

இருந்தாலும், கல்லூரியை களமாகக் கொண்டு நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகியிருக்கும் இப்படம், கல்லூரி மாணவர்கள் ரசிக்க கூடிய படமாக இருக்கிறது. திரைக்கதையை சற்று கவனமாக கையாண்டிருந்தால் வெற்றி படமாக அமைந்திருக்கும்.

 

"உற்றான்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

 

Verdict : கல்லூரி மாணவர்கள் ரசிக்க கூடிய படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA