சற்று முன்

ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |   

croppedImg_2116033037.jpeg

‘நேற்று இந்த நேரம்’ விமர்சனம்

Directed by : Sai Roshan KR

Casting : Shariq Hassan, Haritha, Monica Ramesh, Kavya Amira, Divakar Kumar, Nithin Aaditya, Anand, Aravind Selva, Bala

Music :Kevin.N

Produced by : Clapin Filmotainment - K.R. Naveen Kumar

PRO : Sathishwaran

Review :

"நேற்று இந்த நேரம்" சாய் ரோஷன்.கே.ஆர் இயக்கத்தில் கிளாப்பின் பிலிமோடைன்மெண்ட் - K.R. நவீன் குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை  கெவின்.N. இந்த படத்தில் ஷாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமிரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த்,  அரவிந்த், செல்வா மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

நாயகன் ஷாரிக் ஹாசன், அவரது காதலி ஹரிதா மற்றும் அவர்களது நண்பர்கள் ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கு காதலர்களுக்கு இடையிலும், நண்பர்களுக்கு இடையிலும் சில மோதல்கள் ஏற்படுகிறது. அந்த மோதலுக்குப் பிறகு நாயகன் ஷாரிக் ஹாசன் திடீரென்று மாயமாகி விடுகிறார். அதுபற்றி போலீசில் புகார் அளிக்க, போலீஸ் நண்பர்களிடம் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் போது, புகார் கொடுத்த நண்பரும் திடீரென்று மாயமாகி விடுகிறார். மாயமான இரண்டு பேர் பற்றியும் போலீஸ் விசாரிக்கும் போது, நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்ல, இறுதியில் காணாமல் போனவர்கள் கிடைத்தார்களா?, அவர்கள் மாயமானதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘நேற்று இந்த நேரம்’.

 

வில்லத்தனம் கலந்த நாயகன் வேடத்தில் நடித்திருக்கும் ஷாரிக் ஹாசன், நாயகியாக நடித்திருக்கும் ஹரிதா மற்றும் நண்பர்களாக நடித்திருக்கும் மோனிகா ரமேஷ், காவ்யா அமிரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த்,  அரவிந்த் மற்றும் 

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செல்வா மற்றும் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் பாலா என படத்தில் வரும் அனைத்து நடிகர்களும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

ஒரே சம்பவதை பல கோணங்களில் விவரித்து இயக்குநர் சாய் ரோஷன்.கே.ஆர்,  திரைக்கதையை வித்தியாசமாக கையாண்டிருந்தாலும், ஒரே காட்சி திரும்ப திரும்ப வருவது ரசிகர்களுக்கு தூக்கத்தை வர வைத்துவிடுகிறது.

 

காணாமல் போன ஷாரிக் ஹாசனின் நிலை என்ன? என்ற கேள்வியும், நண்பர்களில் யார் குற்றவாளி? என்ற கேள்வியும் படத்தை சற்று விறுவிறுப்பாக நகர்த்தினாலும், இடையில் வரும் சைக்கோ கொலையாளி உள்ளிட்டவை படத்தின் நீளத்தை அதிகரித்து ரசிகர்களின் பொருமையை சோதிக்கிறது.

 

விஷாலின் ஒளிப்பதிவும், கெவினின் இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருந்தாலும், படத்தொகுப்பாளர் கோவிந்த், கையில் கத்திரி எடுக்காமல் இயக்குநர் எடுத்த காட்சிகளை அப்படியே தொகுத்திருப்பது படத்திற்கு பெரும் பலவீனமாக அமைந்திருக்கிறது.

 

"நேற்று இந்த நேரம்" படத்திற்கு மதிப்பீடு 2.2/5

 

 

Verdict : நீளமான கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA