சற்று முன்

கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர்   |    அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள்   |    கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம்   |    ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர்   |    கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன்   |    மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு போட்டி போட்டு உதவிய திரை பிரபலங்கள்   |    மாஸ்க் அணிந்து பிரபல ஹீரோ செய்த செயல் - அதிர்ச்சி வீடியோ   |    விஜய் ரசிகர்கள் செய்த செயலால் விஜய்க்கு குவியும் பாராட்டுக்கள்   |    விஜய் ரசிகர்கள் மற்றும் மகேஷ் பாபு ரசிகர்கள் மோதல் காரணம் கில்லி தாங்க   |    முதல் கோலிவுட் நடிகர் என்ற பெருமை சிவகார்திகேயனையே சேரும்   |    5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத உணவு பொருட்கள் வழங்கிய தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர்...   |    லாஸ்லியா ஆபாச படத்தில் நடித்தாரா - வைரலாகும் லாஸ்லியா வீடியோ   |    அஜித், விஜய் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த நடிகை   |    அரை குறை ஆடையோடு விமர்சனத்துக்கு உள்ளான ஜெயம் ரவியின் ஹீரோயின் வீடியோ   |    அஜித் கன்னத்தை கிள்ள வேண்டும் போல் இருந்தது - பிரபல நடிகையின் ஆதங்கம்   |    FEFSIயை தொடர்ந்து நடிகர் சங்கமும் உதவி கேட்டு கோரிக்கை - உடனே உதவிக்கரம் நீட்டிய பிரபலம்   |    அமலாபால் காதல் மீண்டும் தோல்வியில் முடிந்தது   |    மாஸ்டர் தயாரிப்பாளர் தயாரிக்கும் ரஜினியின் அடுத்த படம்   |    திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய விசுவின் மரணம்   |    கொரோனாவில் இருந்து தப்பிக்க மாஸ் அணிந்து ரொமான்ஸ் செய்யுங்கள் - நந்தினி புகழ் நித்யா ராம்   |   

croppedImg_1457525979.jpeg

காப்பான் திரை விமர்சனம்

Directed by : கே.வி.ஆனந்த்

Casting : சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா

Music :ஹாரிஸ் ஜெயராஜ்.

Produced by : லைக்கா புரொடக்ஷன்ஸ்

PRO : டைமண்ட் பாபு

Review :

 

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா வெளிவந்துள்ள படம் காப்பான். இந்த படத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

 


நாட்டு மக்களுக்கு நல்லதை செய்ய நினைக்கும் பிரதமராக மோகன்லால் நடித்திருக்கிறார். அவரை கொல்ல சதிவேலை நடக்கிறது. மோகன்லாலுக்கு சூர்யா பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். ஒருகட்டத்தில் தீவிரவாதிகளால் கொல்லப்படுகிறார். பிறகு அரசியல் வாரிசாக அவருடைய மகனான ஆர்யா பதவியேற்கிறார். அவரையும் கொல்ல சதி நடக்கிறது. அந்த சதியை சூர்யா முறியடித்தாரா? கொலையாளியை கண்டுபிடித்தாரா? என்பதுதான் கதை. 

 

கமர்சியல் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் கே.வி. ஆனந்த். அதை இந்த படத்திலும் நிரூபித்திருக்கிறார்.

 

விவசாயம், அரசியல், நாட்டுப்பற்று, தந்திரம், பாகிஸ்தான், பாதுகாப்பு, காதல், பாசம், போராட்டம், என அனைத்தையும் ஒரேகலவையாக போர் அடிக்காமல் கரெக்ட்டாக கையாண்டிருக்கிறார் கே.வி.ஆனந்த். அடுத்து என்ன அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்போடு படம் நகர்கிறது. 

 

படத்தில் சூர்யாவின் நடிப்பு அபாரம். வழக்கம் போல் அந்த கரெக்ட்டராகவே மாறி வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
என்ஜிகே திரைப்படம் தோல்வியை தழுவியிருந்தாலும் இந்த படம் கண்டிப்பாக சூர்யாவுக்கு மிக பெரிய வெற்றியை தரும். 

 


ஆர்யா வழக்கம்போல் ஜாலிமேனாக நடித்திருக்கிறார். பிரதமர் மகனாக வலம் வரும் ஆர்யா செம்மையாக நடித்திருக்கிறார். கார்ப்பரேட் முதலாளியாக வரும் பொம்மன் இரானியை எதிர்த்து குரல் கொடுப்பதும் சவால் விடுவதும் ஆர்யாவின் நடிப்பு தூள். 

 


வில்லன் நடிகராக வரும் வட இந்திய ஆள் துப்பாக்கி வித்யூ ஜமால் போல் மிரட்டுகின்றார். ஆனால், அதற்காக துப்பாக்கி போலவே பல காட்சிகள் இருப்பது தவிர்க்க முடியவில்லை.

 

பிரதமருக்கு செக்ரெட்டரியாக வரும் சாயீஷா சூர்யாவுக்கு ஜோடியாக அவ்வப்போது ஆடிபாடுகிறார் மற்றபடி சொல்லும்படியாக நடிப்பு ஒன்றும் இல்லை.

 

கார்ப்பரேட் முதலாளியாக வரும் பொம்மன் இரானி அமைதியாக பேசி வில்லத்தனத்தை காண்பிக்கும் கதாபாத்திரம் கன கட்சிதமாக பொருந்தியிருக்கிறார். 

 


ஹாரிஸ் ஜெயராஜின் இசை நன்றாக வந்துள்ளது. பின்னணி இசையில் கலக்கி இருக்கிறார். 

 

முதல் பாதியில் இரட்டை அர்த்த வசனங்களை தவிர்த்திருக்கலாம். 

 

காப்பான் படத்திற்கு மதிப்பீடு 3/5

 

 

Verdict : தற்போதைய சூழலுக்கு ஏற்ற ஒரு நல்ல கமர்சியல் படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA