சற்று முன்

ஹன்சிகாவை கதறவிட்ட பிரபல தொழில் அதிபர்   |    தளபதி 64ல் இணையப்போகும் பிரபல நடிகர்   |    50 வருட திரையுலக அனுபவம் மிக்கவரின் எழுத்து வடிவத்தில் கட்டில்   |    ஆபரேஷன் அரபைமா படத்தின் மூலம் வசனகர்த்தாவாகியிருக்கும் பாடலாசிரியர்   |    ஜப்பானில் விருது வென்ற சிவரஞ்சனியும் சில பெண்களும்   |    விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த ராக்ஸ்டார் அனிரூத்   |    ஏ.ஆர்.ரகுமானிடம் அப்துல் கலாமால் அறிமுகப்படுத்தபட்டவரின் நிலைமையை பாருங்கள்   |    கார்த்தி நடித்த படத்தின் நிஜ ஹீரோ செய்தது என்ன...   |    நயன்தாராவுக்கு வில்லனாக மாறிய பிரஜின்   |    திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் இருக்கும் பார்த்திபன்   |    மீண்டும் சினிமாவில் நடிக்க துடிக்கும் மலபார் நடிகை   |    நயன்தாராவின் உயர்ந்த கொள்கை   |    பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார்   |    அறிமுக இயக்குனர் படத்தில் தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி   |    நான் எப்போதும் இயக்குநரின் கைப்பாவையாக இருப்பேன்   |    மஹிமா நம்பியாரின் சினிமா அனுபவம்   |    சினேகன் தயாரித்து-நாயகனாக நடித்திருக்கும் ‘பொம்மி வீரன்’   |    பிக் பாஸ் ஜூலியுடன் நடிக்கும் மூன்று அழகிகள்   |    விஜய் அன் விஜய் கூட்டணியில் இணைந்த ஸ்ரீதிவ்யா   |    சந்தானத்தின் டிக்கிலோனா   |   

croppedImg_591926960.jpeg

'கோமாளி' திரை விமர்சனம்

Directed by : பிரதீப் ரங்கநாதன்

Casting : ஜெயம் ரவி,காஜல் அகர்வால்,யோகி பாபு,சம்யுக்தா ஹெக்டே,கே எஸ் ரவிக்குமார்

Music :ஹிப்ஹாப் ஆதி

Produced by : வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்

PRO : சுரேஷ் சந்திரா

Review :

 

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சுதந்திர தினத்தன்று வெளிவந்துள்ள படம் "கோமாளி'".

 

இந்த படத்தில் ஜெயம் ரவி,காஜல் அகர்வால்,யோகி பாபு,சம்யுக்தா ஹெக்டே,கே எஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 


16 வருடம் கோமாவில் இருந்து மீண்ட ஒரு பள்ளி மாணவனை பற்றிய கதை.  பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவரான ஜெயம் ரவி தன்னுடன் படிக்கும் சம்யுக்தாவை காதலிக்கிறார் அதனால் தன்  அப்பா  ‘ஆடுகளம்’ நரேன் பரிசாகக்  கொடுத்த பரம்பரை  சிலையை  சம்யுக்தாவிடம்  கொடுத்து தனது  காதலைச்  சொல்ல செல்கிறார் ஜெயம் ரவி. அப்போது அதே ஏரியாவில் பெரிய  ரவுடி  ஆகவேண்டும்  என்ற  ஆசையில்  இருக்கும்  கே .எஸ்  ரவிக்குமார் ஏரியா ரவுடி பொன்னம்பலத்தைக் கொலை செய்து அங்கிருந்து தப்பிக்கும் போது அவரால் ஜெயம் ரவிக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. அதில் ஜெயம் ரவி கோமாக்கு தள்ளப்படுகிறார். பிறகு 16 ஆண்டுகள் கழித்து கோமாவில் இருந்து தெளிந்த ஜெயம் ரவி பிறகு நிகழ்கால வாழ்க்கையோடு எப்படி ஒத்துப்போகிறார் அதற்காக அவர் சந்திக்கும் நிகழ்வுகளை சோகம், கலக்கம்,  நகைச்சுவை என பல உணர்வோடு உருவாக்கி இருக்கிறார்கள். 

 

வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஜெயம் ரவிக்கு இந்த படம் நல்ல தீனியாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.  அப்படி ஒரு வித்தியாசமான கதைக்களம் தான் இந்த கோமாளி.  பல  படங்களில்  ஆக்சன்  ஹீரோவாக  பார்த்த  ஜெயம்  ரவியை ஸ்கூல் பையனாக உடல் இளைத்து, மேலும் ஜாலியான  அப்பாவித்தனமான  நகைச்சுவை  கதாப்பாத்திரத்தில்  பார்ப்பது  நன்றாகவே  இருக்கிறது. இந்த படத்தில் ஜெயம் ரவியை பார்க்கும் போது தில்லாலங்கடி படம் தான் நினைவுக்கு வருகிறது. 

 

நாயகிகளாக நடித்திருக்கும் காஜல் அகர்வால், மற்றும் சம்யுக்தா ஹெக்டே இருவரும் அழகு பதுமையாக வந்து ஆடி பாடி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். 

 

ஜெயம் ரவிக்கு இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும் சம்யுக்தா ஹெக்டே அளவுக்கு காஜல் அகர்வாலுக்கு சீன் இல்லை என்றே சொல்லலாம். 

 

யோகி பாபு ஜெயம் ரவிக்கு நண்பனாக நடித்திருக்கிறார். ஜெயம் ரவி தனியாவே நிறைய காமெடி பண்ணுவார் இதில் யோகி பாபு கூட்டணி சொல்ல வேண்டுமா சரவெடி தான். 

 


படத்தின் மிகப்பெரும் பலம் ஹிப்ஹாப் ஆதியின் பின்னணி இசை, பாடல்களும் துள்ளல் தான், ‘ஒளியும் ஒலியும்’ பாடல் இன்றைய தலைமுறை மறந்துபோன விளையாட்டுகளை உணர்வுபூர்வமாக நினைவூட்டுகிறது.

 


படத்தின் இயக்குனர் பிரதீப் புதியவர் என்றாலும் படத்தின் கதையை அனைவரும் ரசிக்கும் படியாக நேர்த்தியாக எடுத்திருக்கிறார். சராசரி ரசிகனின் ரசிப்பை நம்பி திரைக்கதை எழுதியுள்ளார். 90ஸ் கிட்ஸ்சாக சிறுவயதில் தொலைத்த பல்வேறு விஷயங்களை தற்போது தேடி அலையும் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். 

 


ரிச்சர்ட் ஒளிப்பதிவு செம்ம, கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். பிரதீப் ராகவ் எடிட்டிங் நேர்த்தியால் படத்தின் தரத்தை அழகாக்கியிருக்கிறது.

 

இவர்களோடு முதலில் ரவுடியாகவும் பிறகு அடாவடி அரசியல்வாதியாகவும் வரும் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பு அனைவரையும் மிகவும் ஈர்த்துள்ளது. ஒரு சில காட்சிகளே என்றாலும் வேண்டிய நடிப்பை குறையாமல் கொடுத்திருக்கிறார். 

 

 

"கோமாளி"  படத்திற்கு மதிப்பீடு 3/5

 

 

Verdict : கோமாளி சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA