சற்று முன்

விரைவில் வெளியாகவிருக்கும் ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ வெளியானது   |    'திரு மாணிக்கம்' திரைப்படம், 24 ஜனவரி 2025 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது!   |    சீயான் விக்ரமின் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' வெளியிட்டு தேதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ஜெய் பீம், குட்நைட், லவ்வர், வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடிக்கும் ‘குடும்பஸ்தன்’   |    இனி யார் படம் எடுத்தாலும் 'பாட்டல் ராதா' படத்தை விட சிறப்பாக எடுக்கமுடியாது - இயக்குனர் அமீர்   |    கண்ணப்பாவை ஒரு கதை என்று நினைக்க கூடாது, அது ஒரு வரலாறு, சரித்திரம் - நடிகர் சரத்குமார்   |    சந்தானத்தின் பிறந்த நாளான இன்று 'டிடி நெக்ஸ்ட் லெவல்' முதல் பார்வை!   |    யூடுபிலிருந்து சினிமாவிற்கு வருவது அத்தனை எளிதல்ல - இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட்   |    நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படத்துக்கு விருது!   |    படப்பிடிப்பு நிறைவு, உற்சாகத்தில் 'நிறம் மாறும் உலகில்' படக்குழுவினர்!   |    சிறு இடைவேளைக்குப் பிறகு, முன்னணி நடிகை நஸ்ரியா நஜிம் நடிக்கும் 'சூக்ஷ்மதர்ஷினி'   |    முதல் முறையாகக் குழந்தைகளின் உலகத்தில், அரசியல் 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'!   |    நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |   

croppedImg_247413383.jpeg

’இ-மெயில்’ விமர்சனம்

Directed by : SR Rajan

Casting : Ragini Dwivedi, Ashok Kumar, Billi Murali, Manobala, Aarthi Shree

Music :Gavaskar Avinash and Jubin

Produced by : SR Film Factory

PRO : John

Review :

"இ-மெயில்" SR ராஜன் இயக்கத்தில் SR பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை கவாஸ்கர் அவினாஷ் மற்றும் ஜூபின். இந்த படத்தில் அசோக் குமார், ராகினி திவேதி, பில்லி முரளி, மனோபாலா, ஆர்த்தி ஸ்ரீ மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

நாயகன் அசோக் மற்றும் நாயகி ராகினி திவேதி காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள். ஆன்லைன் கேமில் ஆர்வம் உள்ள ராகினி திவேதிக்கு அதன் மூலமாகவே ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையில் இருந்து மனைவியை காப்பாற்ற நினைக்கும் அசோக் செல்வனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனால், தானே நேரடியாக களத்தில் இறங்கி தனது பிரச்சனையை தீர்க்க நினைக்கும் ராகினி திவேதி, அதை எப்படி செய்கிறார்?, அந்த பிரச்சனை என்ன?, அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை பல திருப்பங்களோடு சொல்வது தான் ‘இ-மெயில்’.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அசோக், குறைவான வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும், அதில் அதிகமாக நடித்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் ராகினி திவேதியின் முகம் அவருடைய முதிர்ச்சியை காட்டினாலும், நடிப்பு இளமையாகவே இருக்கிறது. காதல் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

 

ஆதவ் பாலாஜி, பில்லி முரளி, ஆர்த்தி ஸ்ரீ என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

மனோ பாலாவின் காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கிறது. ஒரு காட்சியில் வந்தாலும் லொள்ளு சபா மனோகரும் சிரிக்க வைக்கிறார்.

 

எம்.செல்வத்தின் ஒளிப்பதிவு படத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறது. 

 

கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஜுபினின் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

 

ஆன்லைன் விளையாட்டுகளின் மூலம் ஏற்படும் ஆபத்துகளை மையப்படுத்திய கதையை சஸ்பென்ஸாகவும், யூகிக்க முடியாத பல திருப்பங்களுடனும் சொல்லியிருக்கும் இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன், அதன் பாதிப்புகளை கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம். 

 

க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் கதையை, படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை, அடுத்தது என்ன நடக்கும்? என்ற  எதிர்பார்ப்புடன் நகர்த்தி செல்லும் இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன், அதை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி கமர்ஷியலாகவும், கலர்புல்லாகவும் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்.

 

"இ-மெயில்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA