சற்று முன்

போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |   

croppedImg_791065240.jpeg

‘ஐ.ஆர் 8’ திரை விமர்சனம்

Directed by : என்.பி.இஸ்மாயில்

Casting : அனீபா, விஷ்வா, பிந்து, ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார்

Music :கோண்ஸ்

Produced by : டி.ஜெயக்குமார், ஆயிஷா, அக்மல், அப்பு குட்டி, கராத்தே ராஜா

PRO : வெங்கட்

Review :

 

என்.பி.இஸ்மாயில் இயக்கத்தில் டி.ஜெயக்குமார், ஆயிஷா, அக்மல், அப்பு குட்டி, கராத்தே ராஜா ஆகியோரின் கூட்டு தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் ‘ஐ.ஆர் 8’.

 

 


இந்த படத்தில் அறிமுக நடிகர்கள் அனீபா, விஷ்வா, பிந்து, ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

 

என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி பெருகினாலும், விவசாயமும், விவசாயிகளும் இல்லை என்றால், இந்த உலகம் இல்லை என்ற நிலை இருந்தாலும், விவசாயமும், அதையே நம்பியிருக்கும் விவசாயிகளும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்.

இயற்கை விவசாயத்தின் மீது ஈடுபாடு கொண்ட ஆர்.வி.தம்பி, தனக்கு பிறகு தனது மகன்கள் விவசாயத்தை பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பினாலும், மகன்களோ விவசாயம் செய்வதை விட்டுவிட்டு நிலத்தை விற்க வேண்டும், என்பதில் குறியாக இருக்கிறார்கள். இதற்கிடையே, பிள்ளைகளின் படிப்புக்காக வாங்கிய கடனின் 
வட்டி குட்டி போட்டு பல லட்சங்களாக நிற்க, மறுபுறம் தொழிற்சாலை கட்டுவதற்காக அந்த நிலைத்தை வில்லன் கோஷ்ட்டி கைப்பற்ற நினைக்கிறது. இன்னொரு புறம் கடன் கொடுத்த வங்கி, என்று திரும்பிய பக்கமெல்லாம் பிரச்சினைகள் வந்தாலும், விவாசாய நிலத்தை விற்க கூடாது, என்பதில் உறுதியாக இருக்கும் வயதான விவசாயியான ஆர்.வி.தம்பியின் அதிரடியான முடிவால், ஏற்படும் மாற்றங்களும், அதனால் அவர் நினைத்தது நடந்ததா இல்லையா, என்பதே படத்தின் மீதிக்கதை.


 

 

இதில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் புது முகங்களாக இருந்தாலும், கதைக்கு என்ன தேவையோ அந்த நடிப்பை முழுமையாக கொடுத்திருக்கிறார்கள்.

 

 

ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இசையமைப்பாளர் கோன்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் பணி பட்ஜெட்டுக்கு ஏற்றவாறும், கதைக்கு ஏற்றவாரும் பயணித்திருக்கிறது.

 

 


கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியிருக்கும் இஸ்மாயில், காட்சிகளிலும், திரைக்கதையிலும் பிரம்மாண்டத்தையும், விறுவிறுப்பையும் காட்டவில்லை என்றாலும், படத்தின் மூலம் சொல்லியிருக்கும் மெசஜ் மூலம் ரசிகர்களை ஈர்த்துவிடுகிறார். 

 

 

குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும் மக்களுக்கு நல்ல மெசஜ் சொல்ல நினைத்து, இப்படி ஒரு படத்தை தயாரித்திருக்கும்  டி.ஜெயக்குமார், ஆயிஷா, அக்மல், அப்பு குட்டி, கராத்தே ராஜா அவர்களது முயற்சியை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

 

 

‘ஐ.ஆர் 8’ படத்திற்கு மதிப்பீடு 3/5

 

 

Verdict : ‘ஐ.ஆர் 8’ விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை கண் முன் நிறுத்தும் படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA