சற்று முன்

சீனுராமசாமி தன் உடன்பிறப்புக்கு கூறிய வாழ்த்து   |    நயன்தாராவின் மிரட்டலான படம்   |    லேடீஸ் circle இந்தியா சார்பாக அண்ணபூரணா டிரைவ் வழங்கிய உதவி   |    தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள்   |    விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர்   |    அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம்   |    படத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார்   |    ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா   |    நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி   |    ஊரடங்கு காரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர்   |    குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை   |    குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம்   |    நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை   |    குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி   |    தாஜ் நூர் இசையில் கொரோனா பாடல்   |    அபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி   |    Tik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல் வெளிவந்த படத்தின் பாடல்   |    முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள்   |    கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர்   |    அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள்   |   

croppedImg_1961247818.jpeg

ஜாக்பாட் திரை விமர்சனம்

Directed by : கல்யாண்

Casting : ஜோதிகா, ரேவதி, யோகி பாபு, மன்சூர் அலி கான், ஆனந்தராஜ்

Music :விஷால் சந்திரசேகர்

Produced by : 2டி என்டேர்டைன்மெண்ட், சூர்யா

PRO : யுவி

Review :

 

அள்ள அள்ளக் குறையாத 'அட்சய பாத்திரம்' என ஒரு பாத்திரத்தை பற்றி புராணங்களில் மற்றும் பட புத்தகங்களில் படித்து கேள்விப்பட்டிருக்கிறோம். அதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் ஜாக்பாட். 

 

 

நடிகர் சூர்யாவின் 2டி என்டேர்டைன்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கும் இந்த படத்தில் ஜோதிகா, ரேவதி, யோகி பாபு, மன்சூர் அலி கான், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

 

கல்யாண் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பவர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு RS ஆனந்தகுமார்.

 

 

ஜோதிகா, ரேவதி இருவரும் சேர்ந்துக்கொண்டு பைக் திருடுவது, பொது இடத்தில் மக்களை ஏமாற்றி பணம் வசூலிப்பது என குறுக்கு வழிகளில் பணத்தை சம்பாதித்து அடால்தடியான வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வருகின்றனர். இப்படி ஒருமுறை திருடி போலீசில் மாட்டி சிறைக்கு செல்லும் இருவரும் சிறையில் ஒரு பாட்டியை சந்திக்கிறார்கள். அந்த பாட்டி தன்னிடம் அக்ஷய பாத்திரம் இருக்கிறது என்றும் அதை ஆனந்த்ராஜின் வீட்டில் குழி தோண்டி புதைத்து வைத்திருப்பதாக சொல்கிறார். உடனே அந்த அட்சய பாத்திரத்தை ஆனந்த்ராஜ் வீட்டில் இருந்து ஆட்டயப் போட திட்டம் போடுகிறார்கள். அவர்கள் திட்டம் நிறைவேறியதா? அவர்களுக்கு ஜாக்பாட் அடித்ததா? இல்லையா? என்பதுதான் கதை. 

 


ஜோதிகாவை திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த படங்களில் குடும்ப தலைவியாக கியூட்டான, சாதுவான ரோல்களில் மட்டுமே பார்த்துவந்த நமக்கு மீண்டும் குஷியில் பார்த்த துறுதுறு ஜோதிகாவை கண் முன் நிறுத்தியுள்ளது இந்த படம். அவருக்கு ஆக்ஷனும் இயல்பாக வரும் என்பதை காட்டியுள்ளனர். ஒரு ஃபைட்டில் சுவரில் கால் வைத்து எகிறி மைனா சூசனை எட்டி உதைக்கும் இடத்தில அமர்களப்படுத்தியிருக்கிறார். 

 

 

ரேவதி ஜோதிகாவுக்கு ஈடாக ஒரு சில ஆக்ஷன் காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார். ரேவதி, ஜோதிகா காம்பினேஷன் நன்றாக இருக்கிறது. ஒருவருக்கொருவர் ஈடு கொடுத்து நடித்துள்ளனர். 

 


ஆனந்த்ராஜ் பல காட்சிகளில் கொஞ்சமாய் சிரிக்க வைக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் வெளுத்துவாங்கிய ஆனந்த்ராஜ் இந்த படத்தில் காமெடியாக நடித்திருக்கிறார். 

 

 

மொட்டை ராஜேந்திரன் ரேவதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இது கொஞ்சம் மனதுக்கு நெருடலாக இருக்கிறார். என்ன தான் இருந்தாலும் கமலுடன் போட்டிபோட்டு ஆடி நடித்த நடிகை அல்லவா.

 

 

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் சுமாராக இசையமைத்துள்ளார். பாடல் ஒன்றும் நினைவில் நிற்கவில்லை. 

 

 

கடி ஜோக் காமெடிகள் எல்லாம் குழந்தைகளே சிரிக்காத காலம் இது. படம் முழுதையும் அதை நிரப்பி வைத்திருக்கிறார்கள். படத்தின் ஒரு காட்சி கூட நம்மை ஈர்க்கவில்லை. அழுத்தம் இல்லாத கிளைமாக்ஸ்.

 


ஒரு படம் போர் அடிக்காமல் இருக்க காமெடி வைக்கலாம். படம் முழுக்க காமெடியை வைத்து போர் அடிக்கலாமா.. 

 

ஜாக்பாட் படத்திற்கு மதிப்பீடு 3/5


 

Verdict : ஜாக்பாட் ஒரு ஜோக்பாட்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA