சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

croppedImg_1222938793.jpeg

A1 திரை விமர்சனம்

Directed by : K ஜான்சன்

Casting : சந்தானம், தாரா அலிஷா பெர்ரி, ராஜேந்திரன், யாட்டின் கார்யேகர், சாய்குமார்,M. S. பாஸ்கர், மீரா கிருஷ்

Music :சந்தோஷ் நாராயணன்

Produced by : S. ராஜ் நாராயணன், சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டைன்மெண்ட்

PRO : யுவராஜ்

Review :

சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டைன்மெண்ட் சார்பில் அறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில், சந்தானம் நடிப்பில், ராஜ் நாராயணன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘A1′.

 

 

பிராமண சமூகத்தை சேர்ந்த ஹீரோயின் தாரா அலிஷா பெர்ரி, இவருடைய தந்தை ஒரு நேர்மையான தாசில்தாரர். ஹீரோயின் தாரா அலிஷா பெர்ரி அதே பிராமண சமூகத்தை சேர்ந்த ஒரு அடாவடியான ரவுடி பையனை திருமணம் செய்து கொள்ள ஆசைபடுகிறார். சந்தானத்தை சந்திக்கும் கதாநாயகி அவரை ஒரு பிராமண பையன் என நினைத்து காதலிக்க துவங்குறார். ஒரு கட்டத்தில் அவர் பிராமணர் இல்லை என்று தெரியவர அவரை விட்டு ஒதுங்குகிறார். இதற்கிடையில் நெஞ்சு வலியால் அவதிப்படும் கதாநாயகியின் தந்தையை சந்தானம் காப்பாற்றுகிறார் இதனால் அவர்களுடைய காதல் மீண்டும் தொடர்கிறது. சந்தானத்தின் பெற்றோர் பெண் கேட்டு கதாநாயகி வீட்டுக்கு செல்கின்றனர். அவர்களை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார் கதாநாயகியின் தந்தை இதனால் மனம் உடைகிறார் கதாநாயகன். சந்தானத்தின் இந்த நிலைமையை கண்டு மனம் நொந்த சந்தானத்தின் நண்பர்கள் கதாநாயகியின் தந்தையை கொலை செய்து விடுகின்றனர். இதனால் சந்தானத்தின் காதல் என்ன அனைத்து, கதாநாயகி சந்தானத்தை ஏற்றுக்கொண்டார் என்பதுதான் கதை. 

 

 

இந்த படத்தில் சந்தானம், தாரா அலிஷா பெர்ரி, ராஜேந்திரன், யாட்டின் கார்யேகர், சாய்குமார்,M. S. பாஸ்கர், மீரா கிருஷ்ணன், ஸ்வாமிநாதன், லொள்ளு சபா மனோகர், தங்கதுரை, ஜெயசூர்யா மயில்சாமி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

 

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது. கோபி ஜெகதீஷ்வரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

 

 

அறிமுக நாயகி தாரா அலிசா பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். தன் பங்குக்கு வந்து செல்லாமல், கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார். 

 

 

சந்தானம் அப்பாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், அம்மாவாக வரும் மீரா கிருஷ்ணன் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார்கள். சந்தானத்தின் நண்பர்களாக வரும் மூன்று பேரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.  

 

ரொம்ப ரிஸ்க் எடுக்காமல், ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் தனக்கு வரும் விஷயங்களை வைத்து மட்டும் படம் எடுத்தால் போதும் எனும் முடிவுக்கு வந்துவிட்டார் சந்தானம் என்பது நன்றாக தெரிகிறது. காதல் காமெடி, ஹாரர் காமெடி, என குறிப்பிட்ட வட்டத்திற்கும் மட்டுமே சுற்ற நினைக்கிறார். லொள்ளு சபா நடிகர்களை வைத்து காமெடி என்ற பெயரில் பார்ப்பவரை ஒரு பெரிய ரம்பமே போட்டிருக்கிறார் சந்தானம். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழிக்கேற்ப காமெடி என்ற பெயரில் படம் முழுக்க காமெடியை வைத்து நம்மை கொல்லாமல் கொன்றிருக்கிறார்கள்.

 

 

A1 படத்திற்கு மதிப்பீடு 2/5

 

 

 

Verdict : A1 படம் ஒரு துருப்பிடித்த ரம்பம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA