சற்று முன்

விஜய் சேதுபதி பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த மனிதநேயமிக்க செயல்   |    நமிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது கணவர்   |    எம்.ஜி.ஆர் அப்படிப்பட்டவரா! வெளிச்சம் போட்டு காட்டிய கௌதம் மேனன்   |    இந்தியாவின் மிகப்பெரிய ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் நிறுவனம்   |    நடிகர் லாரன்ஸுக்கு டாக்டர் விருது   |    சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும் 'பஞ்சராக்ஷ்ரம்'   |    எதார்த்த காதல் 'பேப்பர் பாய்'   |    சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை   |    ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார் - பா. ரஞ்சித்   |    பிரியா பவானி சங்கரை விரைவில் கரம்பிடிக்க போகும் ஹரீஷ் கல்யாண்   |    Tony & Guy-ன் மீண்டும் ஒரு கடை திறப்பு   |    நடிகர் டிஎஸ்கேவின் மனக்குமுறல்   |    பார்வையாலேயே மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்   |    ரௌடி பேபி பாடல் தொடர்ந்து புதிய சாதனை   |    'ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதியபடம் இன்றுமுதல் ஆரம்பம்   |    சிவகார்த்திகேயன் ஒ.கே பண்ணிய டாக்டர்   |    வெற்றி மாறன் வெளியிடும் தேசிய விருது பெற்ற ஒரே தமிழ்ப்படம்   |    சத்யராஜ் செய்த சாதனை   |    விஜய் பட டைட்டில் வதந்தியால் வந்த விளைவு   |    உற்சாகத்தில் ஹரீஷ் கல்யாண் காரணம் இதுதாங்க   |   

croppedImg_1515547888.jpeg

வெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்

Directed by : செல்வா சேகரன்

Casting : விக்ராந்த், அர்த்தனா பினு, பசுபதி, கிஷோர், அனுபமா குமார், சூரி, அப்புக்குட்டி, கஞ்சா கருப்பு

Music :செல்வகணேஷ்

Produced by : சாய் அற்புதம் சினிமாஸ், பூங்காவனம் ஆனந்த்

PRO : Aim

Review :

 

 

'வெண்ணிலா கபடி குழு 2' சாய் அற்புதம் சினிமாஸ் சார்பில் செல்வா சேகரன் இயக்கத்தில் பூங்காவனம் ஆனந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்.

 

இந்த படத்தில் விக்ராந்த், அர்த்தனா பினு, பசுபதி, கிஷோர், அனுபமா  குமார், சூரி, அப்புக்குட்டி, கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 


படத்தின் நாயகன் விக்ராந்த் சொந்தமாக ஆடியோ கடை வருகிறார்.   விக்ராந்த்தின் தந்தை பசுபதி அரசு பேருந்து ஓட்டுநராக இருக்கிறார். பசுபதி ஒரு கபடி பிரியர். எந்த ஊரில் கபடி போட்டி நடந்தாலும் அரசு பஸ்சை எடுத்துக் கொண்டு போய்விடுவார். இதனால் அவரை வேலையை விட்டு நீக்கி விடுகின்றனர். இதனால் அப்பாவின் பொறுப்பற்றதனத்தை கூறி  ஏளனமாக பேசுகிறார் விக்ராந்த். 

 


ஒருகட்டத்தில் தந்தை பசுபதி ஒரு முன்னாள் கபடி வீரர் என்பதை தனது அம்மா மூலம் தெரிந்து கொள்ளும் விக்ராந்த். அவரது ஆசையை நிறைவேற்ற பசுபதியின் சொந்த ஊரான கணக்கன்பட்டிக்கு செல்கிறார். அங்கு கபடியில் ஜெயித்து தந்தையின் லட்சியத்தை நிறைவேற்றினாரா என்பதுதான் கதை. 

 

படத்தின் கதாநாயகன் விக்ராந்த் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்றாலும் கபடி விளையாட்டுக்கு ஏற்ற உடல்கட்டு அவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட். இன்னும் நடிப்பில் மெருகேற்ற வேண்டும். 

 


கதாநாயகி அர்த்தனா பினுவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்றாலும் அவர் வரும் ஒரு சில காட்சிகளிலும் நம்மை கவரும் வண்ணம் பாவாடை தாவணியில் அழகாக வந்து போகிறார். இதில் அவருக்கு மொத்தமே மூன்று டயலாக் தான். 

 


காமெடி என்ற பெயரில் கஞ்சா கருப்பு செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை. 

 


கிஷோர் கபடி குழு பயிற்சியாளராக அவருடைய கதாபாத்திரத்தை காண கட்சிதமாக செய்திருக்கிறார்.

 

இயக்குநர் செல்வ சேகரன் திரைக்கதையை சற்று கவனமுடன் கையாண்டிருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். உருவாக்கத்தில் கவனம் செலுத்திய அளவு கதையிலும், திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். 

 

இசையமைப்பாளர் செல்வகணேஷ் 80களில் நடக்கும் கதை என்பதால் அந்த காலகட்டத்தை போல் இசையமைக்க முயற்சிசெய்திருக்கிறார். அது இளையராஜா இசையை தழுவியது போல் உள்ளது. பாடல் ஒன்று கூட தேறவில்லை

 

எடிட்டிங் அஜெய் கச்சிதமாக செய்திருக்கிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு சுமார். 

 

முந்தைய வெண்ணிலா கபடிக்குழுவின் தொடர்ச்சி தான் வெண்ணிலா கபடிக்குழு 2
என சொல்ல மிகவும் படாத பாடுபட்டிருக்கிறார் இயக்குனர். எதிர்பார்ப்போடு சென்றவர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம். 

 

'வெண்ணிலா கபடி குழு 2' படத்திற்கு மதிப்பீடு 2/5

 

 

Verdict : மொத்தத்தில் வலுவிழந்த புயல் 'வெண்ணிலா கபடி குழு 2'

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA