சற்று முன்

நயன்தாரா போல் நடிக்கும் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா   |    மீண்டும் இந்தி ரீமேக் படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரசாந்த்   |    விஜய் சேதுபதி வெளியிட்ட ஜீவாவின் 'சீறு' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    அதிவிரைவாக தயாராகும் ஆதியின் க்ளாப்   |    திருநங்கைகளின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த விஜய் சேதுபதி   |    சரத்குமாருக்கு ஷாக் கொடுத்த வரலட்சுமி   |    தன் சொந்த ஊரில் இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் சௌந்தர்ராஜா   |    ஜெயம் ரவி மற்றும் ஐசரி கணேஷுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்   |    இதற்கு இசையமைப்பது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது - ஹிப்ஹாப் ஆதி   |    சண்டைக்கு தயாராகும் யோகிபாபு   |    ஜி.வி பிரகாஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது   |    பிக் பாஸிலிருந்து சேரனை வெளியே அழைத்து வாருங்கள் - விஜய் சேதுபதியிடம் இயக்குனர் கோரிக்கை   |    தனிமையான நாயகனை பற்றிய த்ரில்லர் மூவி 'யாரோ'   |    விஜய்சேதுபதி பார்த்திபனை இயக்கப்போகும் புதுமுக இயக்குநர்   |    அருண் விஜய் குத்துச்சண்டை வீரர்களுடன் திடீர் சந்திப்பு   |    மூன்று அமைப்புகள் முன்னெடுத்துள்ள விண்ணமலை ஏரி சீரமைப்பு பணி   |    ஹீரோவிடமிருந்து மகளை காக்க நடிகையின் தாயார் செய்த வேலை   |    மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய தனுஷ் பட போஸ்டர்   |    அதர்வா முரளி நடிக்கும் புதிய படம்   |    ஐந்து மொழிகளில் கலைப்புலி S தாணு வழங்கும் குருக்ஷேத்ரம்   |   

croppedImg_1496748374.jpeg

கூர்கா திரை விமர்சனம்

Directed by : சாம் ஆண்டன்

Casting : யோகி பாபு, மனோபாலா, சார்லி, ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன், ரவிமரியா, லிவிங்ஸ்டன், ராஜ்பரத், எலிசா எர்க

Music :ராஜ் ஆர்யன்

Produced by : போர் மங்கீஸ் ஸ்டுடியோஸ்

PRO : சுரேஷ் சந்திரா

Review :

 

 

டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, 100, ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் கூர்கா. இது ஒரு நகைச்சுவை மற்றும் த்ரில்லர் திரைப்படம். இந்தப்படத்தை போர் மங்கீஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர்.

 

 

இந்த படத்தில் யோகி பாபு, மனோபாலா, சார்லி, ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன், ரவிமரியா, லிவிங்ஸ்டன், ராஜ்பரத், எலிசா எர்கார்ட் என நகைச்சுவை பட்டாளமே  நடித்துள்ளனர்.  

 

 

கூர்கா என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது இரவில் வருகின்ற அவர்களுடைய விசில் சத்தம் தான். அது கூர்கா ரௌன்சில் இருக்கிறார் என்ற ஒரு பாதுகாப்பு உணர்வை நமக்கு தரும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சியால் எல்லா இடங்களிலும் சிசிடி கேமரா பொறுத்தப்பட்டுவிட்டதால் கூர்காவை அலட்சியமாக நினைக்கும் காலமாகிவிட்டது. அப்படி நாம் நினைப்பது தவறு நம்மை பாதுகாப்பதில் கூர்காவின் திறமை, உணர்வு, அக்கறை முதலியவற்றை  கூர்கா படம் மூலம் நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார் இயக்குனர் சாம் ஆண்டன். 

 

 

கூர்கா சமூகத்தில் பிறந்த பகதூர் எனப்படும் யோகிபாபு போலீஸாக விரும்புகிறார். பலமுறை முயற்சி செய்தும், அவரால் தகுதி பெற முடியவில்லை. கடைசி முயற்சியில் (ரவி மரியா) இன்ஸ்பெக்டரால் ஏமாற்றபடுகிறார். பின்னர் ஒரு செக்யூரிட்டி ஏஜென்ஸியில் யோகிபாபுவிற்கு வேலை கிடைக்கிறது. அதோடு அமெரிக்க அம்பாஸிடரான எலிசா மீது காதலும் பிறக்கிறது.

 

 

இந்த நேரத்தில் ஒரு ஆயுதமேந்திய தீவிரவாத கும்பல் பல போலீஸ் மற்றும் அரசியல்வாதி  குடும்பங்களை இலவசம் என்ற ஆசைவார்த்தை காட்டி ஒரு ஷாப்பிங் மாலுக்குள் சிறைவைத்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் அவர்களை விடுவிப்பதாக மிரட்டுகிறார்கள். அந்த சதியை முறியடித்து  கூர்காவான யோகிபாபுவும், சார்லியும் அவர்களை காப்பாற்ற என்ன என்ன யுக்தியை கையாண்டனர், இறுதியில் அவர்களை காப்பாற்றினார்களா என்பதே கதை. 

 

 

பின்னணி இசை ராஜ் ஆர்யன் பரவாயில்லை என்று சொல்லுமளவுக்கு உள்ளது ஆனால்  பாடல்கள் சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லை. 

 

 

ஒளிப்பதிவு கிருஷ்ணன் வசந்த் தன் கேமரா கை வண்ணத்தில் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார்.

 

 

எடிட்டிங் ரூபென் திறமையாக செய்துள்ளார்.

 

 

கூர்கா படத்திற்கு மதிப்பீடு  3.5/5 

 

 

Verdict : மொத்தத்தில் குடும்பத்தோடு சென்று தங்கள் வலைகளை மறந்து வாய்விட்டு சிரிக்க தாராளமாக ‘கூர்கா’

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA