சற்று முன்

பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |   

croppedImg_2068201461.jpeg

மெஹந்தி சர்க்கஸ் திரை விமர்சனம்

Directed by : சரவண ராஜேந்திரன்

Casting : மாதம்பட்டி ரங்கராஜ், சுவேதா திரிபாதி, ஆர் ஜே விக்னேஷ்காந்த், கபீர் துஹன் சிங், மாரிமுத்து, வேல

Music :ஷான் ரோல்டன்

Produced by : ஸ்டுடியோ கிரீன்

PRO : யூவி

Review :

 

 

'மெஹந்தி சர்க்கஸ்' 1992 ல் நடக்கும் ஒரு காதல் கதை. மெஹந்தி சர்க்கஸ் என்றவுடன்  மருதாணிக்கும் சர்க்கஸுக்கும் என்ன  சம்பந்தம்   என்று நினைக்க தோன்றும். ஆனால் மெஹந்தி என்பது படத்தின் கதாநாயகியின் பெயர். அந்த பெயரால் இயக்கப்படும் சர்க்கஸ் என்பதால் அதற்க்கு மெஹந்தி சர்க்கஸ் என்று பெயர். அதையே படத்திற்கு டைட்டிலாக வைத்துள்ளனர்.       

 

 தீவிர ஜாதி வெறிபிடித்த ஊர் பெரியவரான ராஜாங்கத்தின் மகன் தான் படத்தின் நாயகன் ஜீவா.  கொடைக்கானலில் கேசட் கடை நடத்தி வரும் இவர் அந்த ஊரில் உள்ள இளைஞர்களின் காதலுக்கு இளையராஜா பாடல்கள் மூலம் உதவி செய்பவர். அந்த ஊருக்கு ராஜஸ்தானில் இருந்து சர்க்கஸ் நடத்த ஒரு குழு கூடாரமிடுகிறது. அந்த குழுவின் தலைவர் சன்னி சார்லஸின் மகள் தான் படத்தின் நாயகி மெஹந்தி. 

 

இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் பயப்படுகிறார்கள். இவர்கள் காதல்  தெரிந்த மெஹந்தியின் தந்தை கதாநாயகனுக்கு ஒரு சாகச போட்டி வைக்கிறார். இதற்கிடையே இவர்களது காதல் ராஜாங்கத்திற்கு தெரிய வருகிறது. வழக்கம் போல் ஜாதி வெறிபிடித்த தந்தை இவர்கள் காதலுக்கு தடையாக நிற்கிறார். இந்த தடைகளை மீறி கதாநாயகியை கரம் பிடித்தாரா? சாகச போட்டியில் வெற்றி பெற்றாரா? காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதுதான் கதை. 

 

காதலை வாழ வைத்த, வாழ வைத்துக் கொண்டிருக்கும், வாழ வைக்கப் போகும் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு காதல் படம். 

 

ஜீவாவாக நடிக்கும் ரங்கராஜ் புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். அடுத்த படங்களில் இன்னும் மெருகேற்றினால் நன்றாக இருக்கும். 

 

மெஹந்தியாக நடித்திருக்கும் ஸ்வேதா திரிபாதி அலட்டல் இல்லாமல் அழகாக நடித்திருக்கிறார். வட இந்திய பெண்ணாக அந்த கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்துகிறார் ஸ்வேதா திரிபாதி. சர்க்கஸில் கத்தி வீசும் சாகசத்தில் உயிரை பணயம் வைத்து நிற்கும் போதும் சரி, காதல் காட்சிகளிலும் சரி மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார். கதாநாயகன்  ரங்கராஜ் நடிப்பில் தவறவிடும் காட்சிகளில் கதாநாயகி ஸ்வேதா திரிபாதி அதை பேலன்ஸ் செய்யும் விதமாக நடித்துவிடுகிறார்.

 

படத்தில் இளையராஜாவின் பாடல்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன. நம் அனைவரையும் 90ம் வருட காலகட்டத்துக்கே அழைத்து செல்லும் விதமாக அமைந்துள்ளன. அவை படத்துக்கு மேலும் மெருகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளன. 

எல்லா படங்களிலும் ஊர் பெரியவராக அல்லது வில்லனாக கெத்தாக வரும் வேல.ராமமூர்த்தி இந்த படத்தில் வித்தியாசமாக காதலர்களுக்கு ஆதரவு தரும் சர்ச் பாதராக நடித்திருக்கிறார். 

 

ஆர்ஜே விக்னேஷ்காந்தின் காமெடி நன்றாக வந்துள்ளது. ஞ்சுர் விகாஷ், மாரிமுத்து, பூஜா, சன்னி சார்லஸ் என அனைவருமே தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

 

ஷான் ரோல்டனின் பின்னணி இசையுள்ள ஈர்ப்பு பாடல்களில் இல்லை.  காதலை ரசித்து ரசித்து ஒவ்வொரு ஃபிரேமையும் வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார். ஏற்றம், இறக்கம் இல்லாமல், படத்தை ஒரே ஸ்பீடில் எடிட் செய்திருக்கிறார் பிலோமின் ராஜ்.

 

கொடைக்கானல் மலைகளும், பூம்பாறையின் இயற்கை அழகும்  மெஹந்தி சர்க்கஸ் காதலும் சேர்ந்து நம்மை கிறங்கடிக்கிறது. 

 

எத்தனை படங்கள் வந்தாலும், தமிழ் சினிமாவை பொறுத்தவரை என்றும் திகட்டாத கதை காதல் கதைதான். அதை உணர்வு பூர்வமாக இயக்குனர் ராஜூ முருகன் கதை வசனம் எழுத அவருடைய தம்பி சரவண ராஜேந்திரன் அதை அழகாக இயக்கியிருக்கிறார். 

 

 

 

 

 

 

 

Verdict : மொத்தத்தில் மெஹந்தி சர்க்கஸ் ஒரு மென்மையான காதல் காவியம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA