சற்று முன்

பொள்ளாச்சி சம்பவங்களை ஏற்கனவே பதிவு செய்த இயக்குனர்   |    கவிஞனின் வரிகளுக்கு கண்ணீர் சிந்திய இயக்குனர்   |    இயக்குநர் ஓகே செய்யாததால் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்த ரம்யா கிருஷ்ணன்   |    96 இயக்குனருக்கு விருது   |    ஜெனிவா, ஐ.நா மன்றத்தில் உரையாற்றும் முதல் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்   |    விழாவிற்கு பிரபலங்களை அழைப்பதால் எந்த பலனும் கிடையாது   |    மூன்று மொழிகளில் “உச்சகட்டம்”   |    முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அறிமுகம்   |    'குச்சி ஐஸ்' படத்தின் தொடக்க விழா   |    அமெரிக்காவில் இயக்குனர் வஸந்தின் படம் தேர்வு   |    'போதை ஏறி புத்தி மாறி' படத்தில் அறிமுகமாகும் மாடல் நடிகை   |    90ML ல் நடித்த தேஜ்ராஜ் யார் தெரியுமா   |    ரசிகர்களுக்காக உயிரை பணையம் வாய்த்த அஜித்   |    இசைக்கு D.இமான் கூறிய அழகு எது?   |    'நெடுநல்வாடை' இந்தியாவின் இந்த வார சிறந்த படமாக தேர்வு செய்த இணையதளம்.   |    இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படப்பிடிப்பின் நிறைவு நாள்   |    ஆர்யா திருமணத்தால் மன வேதனையடைந்த ஒரு பெண்ணின் உருக்கம்   |    கடலை போடுவதென்றால் இதுதானா!   |    கேங்ஸ்டார்களின் வாழ்க்கை முறை பற்றிய கதை   |    விக்னேஷ் கார்த்திக் பற்றிய சுவாரசியமான தகவல்   |   

croppedImg_1347411712.jpeg

திருமணம் திரை விமர்சனம்

Directed by : சேரன்

Casting : உமாபதி, காவ்யா சுரேஷ், சுகன்யா, சேரன்,தம்பி ராமையா, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர்,பாலசரவணன்,சீமாஜி நாய

Music :சித்தார்த் விபின்

Produced by : பிரேம்நாத் சிதம்பரம்

PRO : நிக்கில் முருகன்

Review :

பெனிஸ் இன்டர்நேஷனல் சார்பில் பிரேம்நாத்  சிதம்பரம் தயாரிப்பில் இயக்குனர் சேரன் இயக்கத்தில் ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில்  உருவாகியிருக்கும் திரைப்படம் 'திருமணம்'

 

இதில் உமாபதி, காவ்யா சுரேஷ், சுகன்யா, சேரன்,தம்பி ராமையா, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர்,பாலசரவணன்,சீமாஜி நாயர், மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை சித்தார்த் விபின்  

 


இன்று திருமணம் என்றாலே வாழ்க்கையில் ஒரு முறை வருவது என்று அதை எப்படியெல்லாம் ஆடம்பரமாக செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செலவு செய்து பலர் கடனில் மூழ்கிவிடுகின்றனர். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை மிகவும் நேர்த்தியாக சுட்டி காட்டியுள்ளார் இயக்குனர் சேரன். 

 

பொதுவாகவே சேரனின் படங்கள் என்றல் அது குடும்பப்பாங்கான கதையாகவும், வாழ்க்கைக்கு தேவையான யதார்த்த விஷயங்களை மக்களுக்கு கொண்டுசெல்லும் தன்மை நிறைந்தவையாகவே இருக்கும். அப்படி ஒரு கதையம்சம் கொண்ட படம் தான் திருமணம்.

 

நடுத்தர வர்கத்தை சேர்ந்த அரசு ஊழியராக சேரன், அவரது தங்கையாக காவ்யா சுரேஷ், இவர் ஜமீன் குடும்பத்தை சேர்ந்த சுகன்யாவின் தம்பி  உமாபதியை காதலிக்கிறார். ஒரே தம்பி என்பதால் தடபுடலாக செலவு செய்து திருமணம் நடத்த வேண்டும் சுகன்யா ஆசைப்படுகிறார். ஆனால் சேரனோ திருமணத்தை எவ்வளவு சிக்கனமாக செய்ய முடியுமோ அவ்வளவு சிக்கனமாக செய்ய நினைக்கிறார். இந்த முரண்பட்ட கருத்தால் இரு வீட்டார் இடையே பிரச்சினை வருகிறது. இதனால் கல்யாணம் நின்று விடுகிறது. இறுதியில் திருமணம் நடந்ததா, இந்த பிரச்சினைக்கு முடிவு கிடைத்ததா, அது என்ன என்பதுதான் 'திருமணம்'.


அன்பான அண்ணனாக. அதே சமயம் வாழ்க்கை என்றால் திட்டமிடல் வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு சராசரி மனிதராக தனது வேடத்தை உணர்ந்து நடித்திருக்கும் சேரன், எப்போதும் முகத்தில் ஒருவித சோகத்தை உலவவிட்டிருப்பது நம்மையும் சோகமாக்கிவிடுகிறது. இருந்தாலும், அவர் பேசும் வசனங்களும், அவரது அந்த அப்பாவியான முகமும் கூட சில இடங்களில், அவர் சொல்வது அனைத்தும் சரி தான், என்று ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான அம்சங்களாக அமைந்து விடுகிறது. கல்யாணம் செய்து  கடனாளியானவர்களுக்கு நல்ல சிந்தனைையைத் தூண்டும் கருத்தைச் சொல்லியிருக்கிறார் சேரன். 

 


ஜமீன் குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக நடித்திருக்கும் சுகன்யா தான் தம்பி இருக்கும் பாசத்தை மிக இயல்பாக காட்டியிருக்கிறார். சேரனின் கெடுபிடிகளுக்கு அடங்கி போய், பிறகு ஆக்ரோஷமாவது என்று தனது வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

 


நாயகி காவ்யா சுரேஷ் திருமணம் டைட்டிலுக்கு ஏற்றாற்போல் குடும்பப்பாங்காக இருக்கிறார். நாயகி காவ்யா சுரேஷ் நாயகன் உமாபதி சுகன்யா படத்திற்கு மிக பெரிய பலம் என்று சொல்லலாம். 

 


திருமணம் என்று சொல்லப்போனால் அதில் கதை என்று ஒன்றும் இல்லை ஆனால் மக்களுக்கு தேவையான முக்கியமான விஷயம் இருக்கிறது. பணம் இருந்து திருமணத்துக்கு வாரியிறைத்து செலவு செய்பவர்களைவிட கையில் இல்லாமல் தன் சக்தியை மீறி கடன் வாங்கி திருமணம் செய்து அதனால் கடனில் மூழ்கி தத்தளிப்பவர்கள் தான் அதிகம். அவர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல பாடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

 

 

Verdict : கண்டிப்பாக அனைவரும் பார்க்கவேண்டிய படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA