சற்று முன்

பொள்ளாச்சி சம்பவங்களை ஏற்கனவே பதிவு செய்த இயக்குனர்   |    கவிஞனின் வரிகளுக்கு கண்ணீர் சிந்திய இயக்குனர்   |    இயக்குநர் ஓகே செய்யாததால் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்த ரம்யா கிருஷ்ணன்   |    96 இயக்குனருக்கு விருது   |    ஜெனிவா, ஐ.நா மன்றத்தில் உரையாற்றும் முதல் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்   |    விழாவிற்கு பிரபலங்களை அழைப்பதால் எந்த பலனும் கிடையாது   |    மூன்று மொழிகளில் “உச்சகட்டம்”   |    முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அறிமுகம்   |    'குச்சி ஐஸ்' படத்தின் தொடக்க விழா   |    அமெரிக்காவில் இயக்குனர் வஸந்தின் படம் தேர்வு   |    'போதை ஏறி புத்தி மாறி' படத்தில் அறிமுகமாகும் மாடல் நடிகை   |    90ML ல் நடித்த தேஜ்ராஜ் யார் தெரியுமா   |    ரசிகர்களுக்காக உயிரை பணையம் வாய்த்த அஜித்   |    இசைக்கு D.இமான் கூறிய அழகு எது?   |    'நெடுநல்வாடை' இந்தியாவின் இந்த வார சிறந்த படமாக தேர்வு செய்த இணையதளம்.   |    இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படப்பிடிப்பின் நிறைவு நாள்   |    ஆர்யா திருமணத்தால் மன வேதனையடைந்த ஒரு பெண்ணின் உருக்கம்   |    கடலை போடுவதென்றால் இதுதானா!   |    கேங்ஸ்டார்களின் வாழ்க்கை முறை பற்றிய கதை   |    விக்னேஷ் கார்த்திக் பற்றிய சுவாரசியமான தகவல்   |   

croppedImg_1621024773.jpeg

கோகோ மாக்கோ திரை விமர்சனம்

Directed by : அருண்காந்த்

Casting : ராம்குமார், சாம்ஸ், சரத், தினேஷ், தனுஷா, YGM, டெல்லி கணேஷ், சந்தானபாரதி, அஜய் ரத்னம், அருண்காந்த்

Music :அருண்காந்த்

Produced by : Info Pluto Media Works, அருண்காந்த்

PRO : சரவணன்

Review :

 

 

Info Pluto Media Works  சார்பில் புதுமுக தயாரிப்பாளர் அருண்காந்த் இசை மற்றும் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம்  ‘கோகோ மாக்கோ’. 

 


இதில் ராம்குமார், சாம்ஸ், சரத், தினேஷ், தனுஷா, YGM, டெல்லி கணேஷ், சந்தானபாரதி, அஜய் ரத்னம் ஆகியோர் நடித்துள்ளனர்.

 


இசையின் மேலுள்ள ஆர்வத்தால் தனது இசையை ஆல்பமாக வெளியிட ஒவ்வொரு இசை நிறுவனமாக சுற்றி திரியும் இளைஞனாக படத்தின் தயாரிப்பாளர் அருண்காந்த். ஒரு கட்டத்தில் இசை ஆல்பத்தை விடியோவாக வெளியிட நினைக்கிறார்.  அதற்காக ஒரு நிஜக்காதலர்களான ராம்குமார் - தனுஷாவின் நடவடிக்கைகளை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடிக்க ஒளிப்பதிவாளர் சாம்ஸை காதலர்களுடன் சேர்ந்து பிரயாணம் செய்ய ஏற்பாடு செய்கிறார் அருண்காந்த். அவர் நினைத்த காரியம் நிறைவேறியதா, அவர் நினைத்தது போல் இசை ஆல்பம் வெளியிட்டாரா என்பதை காதல், காமெடி கலந்து சொல்லப்பட்டதுதான் ‘கோகோ மாக்கோ’. 

 


படத்தில் இசையமைப்பாளராக, இயக்குனராக, தயாரிப்பாளராக மற்றும் நடிகனாக எல்லா வகையிலும் தன்னுடைய திறமைகளை மிகவும் திறமையாக கையாண்டிருக்கிறார். விஷயம் தெரிந்தவர் என்பது அவர் திரைக்கதை அமைத்த விதத்திலே தெரிகிறது. தான் சொல்ல வந்ததை சுருக்கமாகவும், நேர்த்தியாகவும் சொல்லியிருப்பவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் கையாண்டிருக்கிறார். 

 


புயல் என்ற வேடத்தில் நடித்திருக்கும் கதையின் நாயகன் ராம்குமார் மற்றும் அவருக்கு ஜோடியாக வரும் தனுஷா மற்றும் அவர்களை பின் தொடரும் ஒளிப்பதிவாளர் சாம்ஸ் மற்றும் அவரது உதவியாளர்கள்  வரும் காட்சிகள் மிகவும் நகைச்சுவையோடு ரசிக்கும் வண்ணமாக அமைந்துள்ளது. அதுபோல், இசை நிறுவனத்தில் பணிபுரியும் வினோத் வர்மா மற்றும் சாரா ஆகியோரின் நடிப்பும், டெல்லி கணேஷ் மற்றும் அஜய் ரத்தினத்தின் அனுபவம் வாய்ந்த நடிப்பும் அருமையாக இருக்கிறது .

 


தான் சொல்ல வந்ததை சுருக்கமாகவும், நேர்த்தியாகவும் தனக்கு கிடைத்த வசதிகளை வைத்துக் படத்தை சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார். 

 


அதே சமயம், தொழில்நுட்ப ரீதியாக படத்தில் ஒரு சில இடங்களில் சில குறைபாடுகள் இருப்பதையும் மறுக்க முடியாது.

 


ஒரு திரைப்படத்திற்கு கதையும், திரைக்கதையும் எவ்வளவு முக்கியமோ அதுபோல் தரம் என்பதும் முக்கியம் என்பதை புரிந்து படத்தின் தயாரிப்பாளர் பயணித்தால் எதிர்காலத்தில் நல்ல நிலையான இடத்தை பிடிக்க முடியும்.

 

 

Verdict : ‘கோகோ மாக்கோ’ ஒரு நல்ல வித்தியாசமான முயற்சி

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA