சற்று முன்

'பிச்சைக்காரன் 2’ விமர்சனம்
Directed by : Vijay Antony
Casting : Vijay Antony, Kavya Thapar, Dev Gill, John Vijay, Hareesh Peradi, Yogi Babu, Y Gee Mahendra, Radha Ravi , Mansoor Ali Khan, Raja Krishnamoorthy,Kathir
Music :Vijay Antony
Produced by : Vijay Antony Film Corporation - Fatima Vijay Antony
PRO : DOne
Review :
"பிச்சைக்காரன் 2" விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் - பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி இயக்கி இசையமைத்திருக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர், தேவ் கில், ஜான் விஜய், ஹரீஷ் பேரடி, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவரான விஜய் ஆண்டனியின் சொத்தை அபகரிக்க ஒரு கூட்டம் திட்டமிடுகிறது. அவர்களின் திட்டத்தின்படி பிச்சைக்காரனாக இருக்கும் ஒருவர், விஜய் ஆண்டனியின் இடத்திற்கு வருகிறார். அவர் எப்படி அந்த இடத்திற்கு வந்தார்?, அவருடைய வருகை விஜய் ஆண்டனியின் சொத்தை அபகரிக்க திட்டமிட்டவர்களுக்கு கைகொடுத்ததா? இல்லையா? என்பதை வித்தியாசமான கதைக்கருவோடு, விறுவிறுப்பான காட்சி அமைப்போடு சொல்வதே ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மீதிக்கதை.
’பிச்சைக்காரன்’ படம் விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது போல் ‘பிச்சைக்காரன் 2’ படம் அவருக்கு மிகப்பெரிய நாயகன் அந்தஸ்தை கொடுக்கும் என்பது படத்தின் அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது.
கோடீஸ்வரன் மற்றும் பிச்சைக்காரன் என்று இரண்டு வேடங்களில் விஜய் ஆண்டனி நடித்திருந்தாலும், இந்த படத்தில் ஹீரோயிஷத்தோடு கலந்த நடிப்பில் கவர்கிறார். விஜய் ஆண்டனி என்றால் இப்படி தான் நடிப்பார், என்ற விதியை உடைத்து காதல், காமெடி, ஆக்ஷன், மாஸ் என அனைத்திலும் இறங்கி அடித்திருப்பவர், எப்படிப்பட்ட வேடத்திலும் தனக்கு நடிக்க தெரியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் காவ்யா தாப்பர் கோலிவுட்டுக்கு புதிதாக இருந்தாலும், கோலிவுட் சினிமாவை புரிந்து பணியாற்றியிருக்கிறார். கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கும் அவருக்கு கதையில் முக்கியத்துவம் இல்லை என்றாலும் கதாநாயகியாக பல வாய்ப்புகள் தேடி வருவதற்கான வேலையை சரியாக செய்திருக்கிறார்.
தேவ் கில், ஜான் விஜய், ஹரீஷ் பேரடி, யோகிபாபு என அனைவரது நடிப்பும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.
ஓம் நாராயணின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. படத்தின் காட்சிகளை கதைக்கு ஏற்றபடியும், பாடல் காட்சிகளை ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றபடியும் படமாக்கி பலம் சேர்த்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருப்பதோடு இசையமைத்து படத்தொகுப்பு செய்திருக்கும் விஜய் ஆண்டனி, வித்தியாசமான கதைக்கருவை கமர்ஷியலாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
தனக்கு இப்படிப்பட்ட கதைகள் தான் செட்டாகும் என்ற இமேஜை உடைக்கும் ஒரு கதையில் மாஸாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, தான் ஈடுபட்ட ஒவ்வொரு பணியிலும் முத்திரை பதித்தது போல் இயக்குநராகவும் முத்திரை பதித்திருக்கிறார்.
"பிச்சைக்காரன் 2" படத்திற்கு மதிப்பீடு 3/5
Verdict : பார்க்கலாம்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA